உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கிய லாலு - தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிக்கை

வேலைக்கு நிலத்தை லஞ்சமாக வாங்கிய லாலு - தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக வாங்கிய வழக்கில் முன்னாள் பீஹார் முதல்வர் லாலு, அவரது மகன் தேஜஸ்வியாதவ் ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.பீஹார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், 2004 முதல் 2009 வரை காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார்.அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக, தன் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் நிலங்களை லஞ்சமாக வாங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.இதில் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் மேற்கு மத்திய ரயில்வேயில் நடந்த ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி மற்றும் மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று (ஆக.,06) அமலாக்கத்துறை லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 8 பேர் மீது , புதுடில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அடுத்த விசாரணை ஆக. 13-ம் தேதிக்கு நீதிபதி விஷால் கோனே ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
ஆக 07, 2024 15:20

ஸ்டாலினின் கூட்டாளி குடும்பம். வேற மாதிரி எதிர்பார்ப்பது சரியல்ல.


நவின்
ஆக 07, 2024 11:46

மாநிலத்திற்கு அவரு ஆயோக்க கும்பல் உள்ளனர்!!


Kasimani Baskaran
ஆக 07, 2024 06:00

தண்டனையில் இருந்து மருத்துவமணைக்கும் சிறைக்கும் என்று சாகசம் புரிய லாலுவால் மட்டுமே முடியும். செபவால் அப்படி ஏன் செய்ய முடியவில்லை என்பது ஆச்சரியம்.


தாமரை மலர்கிறது
ஆக 07, 2024 01:47

விரைவில் தேஜஸ்வி செந்தில் பாலாஜி மற்றும் கெஜ்ரிவால் இருக்கும் இடத்திற்கு சென்று நிரந்தரமாக வாழ்வார்.


cbonf
ஆக 06, 2024 22:42

பல மாநிலங்களில் பல அரசியல் குடும்பங்கள் நம்மை சூறையாடி, இந்தியாவை அழித்தன. பீகாரில் லாலு & குடும்பம், டெல்லியில் பப்பு & குடும்பம், உ.பி.யில் முலாயம் & குடும்பம், தமிழகத்தில் சிதம்பரம் & குடும்பம் கருணாநிதி & குடும்பத்தினர் விரைவு நீதிமன்றங்கள் மூலம் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 06, 2024 22:11

இங்க மட்டும் என்ன வாழுது? . லஞ்சமாக பினாமிகள் பெயரில் சொத்துக்களைப் பிடுங்கி ரெஜிஸ்டர் செய்து விடுகிறார்கள்.அல்லது கிறுக்கல் ஓவியத்தை(?) வரைந்து பல கோடி களுக்கு தலையில் கட்டி விடுகிறார்கள்.


Premanathan Sambandam
ஆக 06, 2024 21:02

வேஸ்ட் ஆப் டைம்


nagendhiran
ஆக 06, 2024 20:32

வழக்கமாக சொல்லும் பாஜக பழிவாங்கும் அரசியல்னு சொல்லிடுங்க? லாலு?


Ramesh Sargam
ஆக 06, 2024 19:56

பதினைந்து வருடங்களுக்கு முன்பு சாட்டப்பட்ட குற்றம். இன்றுவரை இந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை. இனியும் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும் என்று நாம் எதிர்பார்த்தால் நாம் முட்டாள். நீதிமன்றங்கள் சரியாக பணிபுரியவில்லை என்றால் யார் நீதிமன்றங்களின் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்? மக்கள் ஆட்சியில் மக்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா?


subramanian
ஆக 06, 2024 19:42

இனம் இனத்தோடு சேரும். இருநூறு உ.பிஸ் எல்லாம் கதற வேண்டும்.


மேலும் செய்திகள்