மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
3 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
3 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1
புட்டேனஹள்ளி: பெங்களூரு புட்டேனஹள்ளியின், இலியாஸ் நகரில் வசிப்பவர் வசீம், 34. இவரது மனைவி சுமையா பானு, 28. தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. வசீமுக்கு திருமணமான வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது.கடந்த மாதம், ஹோட்டலில் அந்த பெண்ணுடன் இருந்த போது, மனைவி சுமையா பானு மற்றும் குடும்பத்தினரிடம் கையும், களவுமாக சிக்கினார். அவரை திட்டி கண்டித்தனர். அப்போது ஹோட்டலில் அடிதடியும் நடந்தது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.இந்நிலையில் வசீம், கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுடன் ஓடிவிட்டார். பல இடங்களில் கணவரை தேடியும் கிடைக்காததால், சுமையா பானு, புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதே போன்று, வசீமுடன் ஓடிய கள்ளக்காதலியின் கணவரும், இதே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, தன் மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்துள்ளார். போலீசாரும் அவர்களை தேடி வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago | 1