மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
தங்கவயல்: தங்கவயல் தாலுகா அலுவலகத்தில், பெண் ஊழியருக்கு வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, 'தினமலர் செக் போஸ்ட்' பகுதியில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக இரு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தங்கவயல் மினி விதான் சவுதா அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு வருவாய்த்துறை அதிகாரி ரகுராம் சிங் என்பவரும், கிராம கணக்காளர் ரமேஷ் குமார் என்பவரும் தொடர்ந்து 'பாலியல் தொல்லை' கொடுத்து வந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண், தன் சகோதரரிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம், அவர் அலுவலகத்தில் நுழைந்து, வருவாய்த்துறை அதிகாரி ரகுராம் சிங்கை அடித்து உதைத்துஉள்ளார்.இதனால் அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உதை வாங்கிய ரகுராம் சிங், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினார்.இதுகுறித்து, அப்போதைய தாசில்தார் நாகவேணி விசாரித்தார். போலீஸ் நிலையத்தில் புகார் செய்யாமல், பெண் ஊழியருக்கு தொல்லை கொடுத்த இருவரையும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.இதன்படி, தங்கவயலில் இருந்து ரகுராம் சிங், ரமேஷ் குமார் ஆகியோர், நேற்று சீனிவாசப்பூர் தாலுகாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதையடுத்து தங்கவயல் மினி விதான் சவுதா பெண் ஊழியர்கள் திருப்தி அடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு ஒரு பாடம் என பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
4 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago