மேலும் செய்திகள்
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்: பவருக்காக இணையும் பவார்கள்
32 minutes ago
பணமோசடி வழக்கு: மலையாள நடிகரிடம் ஈ.டி., கிடுக்கி
51 minutes ago
கொல்கட்டா: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை, சென்னையைச் சேர்ந்த காதலன் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரதீப் குமார் செல்வராஜ், 40, மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த 38 வயது பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மத்திய கொல்கட்டாவின் பி.பி. கங்குலி தெருவில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தனர். இந்நிலையில், அறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பிரதீப் தன் காதலியை தோள்பட்டை, கைகள் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்து அலறித்துடித்த பெண்ணின் சத்தம் கேட்டு, விடுதி ஊழியர்கள் வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். கத்தியால் குத்திய பிரதீப் தப்பி சென்றார். இதுகுறித்து விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின்படி, முச்சிபாரா போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த பெண்ணை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்படி, பிரதீப்பை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் வைத்திருந்த சில ஆவணங்களை பிரதீப் கேட்டபோது தரமறுத்ததே கொலை முயற்சிக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
32 minutes ago
51 minutes ago