உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்ரபதி சிவாஜி கால ஆயுதங்கள் கண்காட்சி: முதன்முறையாக டில்லியில் ஏற்பாடு

சத்ரபதி சிவாஜி கால ஆயுதங்கள் கண்காட்சி: முதன்முறையாக டில்லியில் ஏற்பாடு

மும்பை: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி காலத்தில் பயன்படுத்தப்பட்ட 250-க்கும் மேற்பட்ட அரிய வகை ஆயுதங்கள் பொது மக்கள் பார்வையிடும் வகையில் தலைநகர் டில்லியில் முதன்முறையாக காட்சிபடுத்தப்பட உள்ளது.சேவ் கல்ச்சர், சேவ் பாரத் பவுண்டேசன் அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் அபய் வர்தக் கூறியதாவது: சானாதன் சன்ஸ்தா சார்பில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தலைநகர் டில்லியில் (இந்திரபிரஸ்தா) பாரத் மண்டபத்தில் சனாதன் ராஷ்டிர சங்கநாத் மஹோத்சவ கண்காட்சி வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் மன்னர் சிவாஜி தனிப்பட்டமுறையில் பயன்படுத்திய ஆயுதங்கள்,மராட்டிய தளபதிகள் பயன்படுத்தியஆயுதங்கள், தளபதி ஹம்பிராவ்மோஹிதேவின் புகழ்பெற்ற ஈட்டி மற்றும்மகாராணா பிரதாப் கால கட்டத்தில்பயன்படுத்திய ஆயுதங்கள், கர்நாடகா விஜயநகரப் பேரரசின் வாள்கள், உலோகவியல் மற்றும் 'இரும்பிலிருந்து ஆயுதம் வரை' என்ற கருத்தின் அடிப்படையில் மராட்டிய ஆயுதம் தயாரிக்கும் செயல்முறை ஆகியவையும் இடம்பெறுகிறது. மேலும் இந்து பெண்கள் தற்காப்புக்காக பயன்படுத்திய ஆயுதங்கள், அவர்களின் வீரம் மற்றும் போரில் பங்களிப்பு குறித்தும் கண்காட்சியில் இடம் பெற உள்ளது. மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத், டெல்லியின் கலாச்சார அமைச்சர் கபில் மிஸ்ரா, சதாரா எம்பி சத்ரபதி ஸ்ரீமந்த் உதயன்ராஜே போசலே,உள்ளிட்டோர் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர் என அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


 ....

33 minutes ago  










புதிய வீடியோ