உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விடுமுறையில் பணியாற்ற வக்கீல்கள் விரும்புவதில்லை: தலைமை நீதிபதி ஆதங்கம்

விடுமுறையில் பணியாற்ற வக்கீல்கள் விரும்புவதில்லை: தலைமை நீதிபதி ஆதங்கம்

புதுடில்லி: 'விடுமுறை காலத்தில் வேலை செய்ய வழக்கறிஞர்கள் விரும்புவதில்லை; ஆனால், வழக்குகள் தேங்கினால் மட்டும் நீதித்துறையையும், நீதிபதிகளையும் குற்றஞ்சாட்டுகின்றனர்' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.உச்ச நீதிமன்றம்,உயர் நீதிமன்றங்களுக்கு ஆண்டு தோறும் விடுமுறை காலம் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த சமயங்களில் குறைவான நீதிபதிகளுடன் விடுமுறை கால அமர்வு செயல்படும். உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை, இரண்டு அமர்வு மட்டுமே செயல்படுவது வழக்கம். அதிலும், மூத்த நீதிபதிகள் இடம் பெறுவது கிடையாது. அந்த நடைமுறையை தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மாற்றியுள்ளார். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், மே 26 முதல் ஜூலை 13 வரை 'பகுதி நீதிமன்ற வேலை நாட்கள்' என வேறு பெயரிட்டதோடு, ஐந்து அமர்வுகள் வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமர்வுகளுக்கு தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் தலைமை வகிப்பர் எனவும் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்களின் அலுவல் பணிகள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இருக்கும் எனவும் கூறப்பட்டது.இந்த நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு முன் நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் ஆஜரான வழக்கறிஞர், 'மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கு பின் பட்டியலிட வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ''விடுமுறை காலத்தில் வேலை பார்ப்பதற்கு வழக்கறிஞர்கள் விரும்புவதில்லை. ஆனால், வழக்குகள் தேங்குவதற்கு நீதித்துறையையும், நீதிபதிகளையும் குற்றஞ்சாட்டுகின்றனர். ''கோடை விடுமுறை முழுதும், தலைமை நீதிபதி துவங்கி முதல் ஐந்து நீதிபதிகள் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். ''ஆனாலும், வழக்குகள் நிலுவைக்கு, நாங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. உண்மையில், விடுமுறை நாட்களில் வேலை செய்ய விரும்பாதவர்கள், வழக்கறிஞர்கள் தான்,'' என கடுமையாக விமர்சித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M.A.Zain ul Arif
மே 23, 2025 13:43

நீதி அழிந்து பல வருடம் போய்விட்டது


Mecca Shivan
மே 22, 2025 17:42

அப்படின்னா கோடை விடுமுறையை ரத்துப்பண்ண மனசு வருமா கணம் அவர்களே


அமிர்தம்
மே 22, 2025 15:55

கோடை விடுமுறைன்னு 45 நாள் சம்பளத்தோட கோர்ட்டை இழுத்து பூட்டிருவாங்க.


joe
மே 22, 2025 13:09

Why the courts need summer vacation which was for the judges in colonial era since they can't bear the scorching heat who came from winter countries but now are these people are from winter places they are all our fellow people born in our land then why they need this. They one side speak to eradicate colonial era but not willing to give up their conveniences and enjoyments . Why they need summer vacation as like school children


R.RAMACHANDRAN
மே 22, 2025 07:34

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கு காரணம் வழக்கறிஞ்சர்களும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் நீதிபதிகளே ஆகும். வழக்கறிஞ்சர்களில் பலர் பொய் வழக்குகள் போட்டு வழக்குகளை இழுத்தடித்து பணம் சம்பாதிக்கின்றனர்.பொய் வழக்கு என அறிந்திருந்தாலும் அவைகளை விசாரணைக்கு ஏற்று நீதிபதிகளில் பலர் ஆதாயம் அடைகின்றனர்.இதே நேர்மையானவர்கள் உண்மையான வழக்குகளை வழக்கறிஞ்சர் இன்றி தாக்கல் செய்தால் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்து துரத்தி விடுகின்றனர்.


Madhu sudanan
மே 22, 2025 09:14

Sir, kindly reveal the name of the Judges who collide with Advocates in fake cases, let everyone knows.


Rajamannar
மே 22, 2025 06:41

The respective should deliver judgement if the lawyers have not represent the case. The solution lies with the respective judges. Blame game will not serve the purpose


Varadarajan Nagarajan
மே 22, 2025 06:30

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபொழுது இயற்றப்பட்ட சட்டங்கள், பின்பற்றப்பட்ட நடைமுறைகளை 75 ஆண்டுகள் கடந்தும் காலத்திற்கு ஏற்றாற்போல் நாம் மாற்றங்களை கொண்டுவரவில்லை. ஏனென்றால் அவைகளை நமக்கு சாதகமாக இருக்கின்றான். தற்பொழுதெல்லாம் சிறிய அலுவலகங்கள்கூட ஏ சி அறைகளில் இயங்குகின்றன. பள்ளிகள் கல்லூரிகள் தவிர அனைத்து அலுவலகங்களும் கோடை விடுமுறை இல்லாமல் ஆண்டுதோறும் இயங்குகின்றன. அதிக வெப்பத்தில் இயங்கும் இரும்பு உறுக்கு ஆலைகள், அனல் மின்நிலையங்கள் கூட இந்த கோடை வெய்யில் காலத்தில் செயல்படுகின்றன. போக்குவரத்து காவல்துறை, கட்டுமானத்துறை செயல்படுகின்றது. அவை அனைத்திலும் பணியாளர்கள் பணிபுரிந்துகொண்டுள்ளனர். ஆனால் நீதிமன்ற பணிகளுக்குமட்டும் கோடை விடுமுறை என்ற நடைமுறை மாறவில்லை. காலத்திற்கு ஏற்ற மாற்றம் அவசியம்.


hariharan
மே 22, 2025 06:29

நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை என்பது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அப்பொழுது வெள்ளைக்காரர்களே நீதிபதிகளாக இருந்தனர். இங்குள்ள கடுமையான வெப்பத்தை தாங்கமுடியாது என்ற காரணத்தினல் கோடைவிடுமுறை என்று ஆங்கிலேயர்கள் நடைமுறை வைத்திருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு சென்று 2, 3 மாதங்களை உறவினர்களுடன் கழிப்பர். அவர்கைள் வசதிக்காக ஏற்படுத்திய நடைமுறை அவர்கள் சென்றபின்பு சட்டமாகிவிட்டது. நம்மைப்போல உள்ளவர்களே இப்பொழுது நீதிபதிகள் இருக்கின்றனர். எந்த வெள்ளைக்காரனும் இல்லை. பிறகு எதற்கு இந்த கோடைவிடுமுறை இவர்களுக்கு மட்டும். இது சரி என்றால் கோடைவிடுமுறையை அனைத்து நிருவனத்திற்கும் அளிக்கலாமே. வேறு எந்த நாட்டிலும் இல்லாத சலுகை இங்குள்ள நீதிபதிகளுக்கு. இதைத் தவிர சொந்த விடுப்பு, மற்றும் சில வழக்கு விசாரணைகளிலிருந்து விலகிக் கொள்வது எல்லாம். நீதிமன்றங்களின் கோடைவிடுமுறையை அரசு ரத்து செய்ய இதுவே தக்க தருணம்.


Gajageswari
மே 22, 2025 05:21

சிவில் கேஸ் 1994 பெட்டிங் விசாரணை நீதிமன்றத்தில்.


மீனவ நண்பன்
மே 22, 2025 04:50

விடுமுறை அறிவிக்காமல் இருக்க வேண்டும் ..வக்கீல்கள் மேல் பழி சுமத்துவது சரியானதாக தென்படவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை