உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காமில் குவியும் சுற்றுலா பயணியர்; படங்கள் வெளியிட்டார் முதல்வர் ஒமர்

பஹல்காமில் குவியும் சுற்றுலா பயணியர்; படங்கள் வெளியிட்டார் முதல்வர் ஒமர்

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் களையிழந்து காணப்பட்ட ஜம்மு - காஷ்மீரில், மீண்டும் இயல்புநிலை திரும்பி சுற்றுலா பயணியர் வரத் துவங்கியுள்ளதாக முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி- ஆட்சி நடக்கிறது.இங்கு, 'மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், ஏப்., 22ல் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், 26 சுற்றுலா பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்துக்குப் பின், காஷ்மீர் செல்ல வேண்டாம் என, பல்வேறு நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தன.இந்திய சுற்றுலா பயணியரும் காஷ்மீர் செல்ல தயக்கம் காட்டினர். இதனால், ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா வருவாய் சரிந்தது. அங்குள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்திருந்த 12 லட்சம் பேர் அதை ரத்து செய்தனர்.ஜம்மு - காஷ்மீரின் வருவாயில், சுற்றுலாத் துறையின் பங்களிப்பு மட்டும், 78 சதவீதம். இதனால், யூனியன் பிரதேசத்தின் வருவாயில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.இரண்டு மாதங்களுக்குப் பின் தற்போது பதற்றம் தணிந்துள்ளதால், சுற்றுலா பயணியர் வருகை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஒமர் அப்துல்லா, நெரிசல் மிகுந்த சாலைகள் மற்றும் சுற்றுலாப் பயணியர் கூட்டத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'பஹல்காமில் இதுபோன்ற பரபரப்பான காட்சிகளை காண முடிகிறது. நான் கடைசியாக பஹல்காமில் இருந்தபோது, வெறிச்சோடிய மார்க்கெட் வழியாக சைக்கிள் ஓட்டிச் சென்றேன். 'அந்தப் பகுதிகளில் தற்போது சுற்றுலா பயணியர் நடமாட்டத்தை காண்பதில் மகிழ்ச்சி. அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கத் துவங்கி இருப்பது திருப்தி அளிக்கிறது' எனக் குறிப்பிட்டு உள்ளார்.

5 நாள் என்.ஐ.ஏ., காவல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். பஹல்காமின் பட்கோலே பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் அஹமது மற்றும் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அஹமது ஜோதார் ஆகிய இருவர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உணவு மற்றும் வாகனங்களை வழங்கி உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் ஜம்முவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரித்தேஷ் குமார் துபே முன், இருவரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, இருவரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அவர்களிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூன் 24, 2025 05:16

இப்பொழுது உள்ள போர் சூழ்நிலையில் இது தேவையற்றது. அப்புறம் மாட்டிக் கொண்டு, "ஐயோ குத்துதே, குடையுதே" என்று கத்தி பிரயோசனமில்லை.


Kasimani Baskaran
ஜூன் 24, 2025 03:46

இடம் கொடுத்து உபசரித்தவனுக்கு என்ன விசாரணை வேண்டிக்கிடக்கிறது. குறைந்த பட்சம் சர்க்கரை பாகில் முக்கி எறும்புகளை கடிக்க விட்டு சிறிது சிறிதாக சாகடிக்க வேண்டும். அது முடியவில்லை என்றால் ஓடவிட்டு போட்டுத்தள்ள வேண்டும்.


சமீபத்திய செய்தி