உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: மும்பையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: மும்பையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ''தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஆளும் பா.ஜ., அரசின், 'ஒயிட் காலர்' ஊழல் அம்பலமாகி உள்ளது,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல் நடத்திய பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை, மஹாராஷ்டிராவின் மும்பையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fybkzbdu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையொட்டி, மும்பையின் சிவாஜி பார்க்கில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வெளிநாட்டு பயணம்

இதில், ராகுல் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், மும்பை சென்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மற்றும் போலி பிரசாரங்கள் ஆகிய இரண்டை மட்டும் தான் பிரதமர் செய்து வந்துள்ளார். இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இண்டியா கூட்டணி என நாம் பெயர் வைத்த பின், இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்துவதையே பா.ஜ., நிறுத்திவிட்டது; இது, அவர்களின் பயத்தைக் காட்டுகிறது.நம்மை ஊழல்வாதிகள் என பிரதமர் மோடி விமர்சிக்கிறார். ஆனால், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, பா.ஜ., அரசின் 'ஒயிட் காலர்' ஊழல் அம்பலமாகி உள்ளது.

அமலாக்கத் துறை

எனவே, பா.ஜ., அரசை நாம் வீழ்த்த வேண்டும். மத்தியில் மதச்சார்பற்ற, கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசை, இண்டியா கூட்டணி அமைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''இண்டியா கூட்டணி கட்சியினருக்கு எதிராக அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும் செயல்படுகின்றன,'' என்றார். காங்., - எம்.பி., ராகுல் பேசியதாவது:பிரதமர் மோடி, அதிகாரம் படைத்தவர்களுக்காக உழைக்கும் முகமூடி. சிவசேனா மற்றும் தேசியவாத காங்., பிளவுபட்டு, அதில் இருந்து பிரிந்து சென்ற வர்கள் பா.ஜ.,வுடன் இணைந்தது தற்செயல் என நினைக்கிறீர்களா?மஹாராஷ்டிராவை சேர்ந்த தலைவர் ஒருவர், என் தாய் சோனியா முன் கண்ணீர் விட்டு கதறியதை கண்டேன். இந்த அதிகாரம் படைத்தவர்களை எதிர்த்து, அவரால் சண்டை போட முடியாததை நினைத்து, அவர் வெட்கப்படுவதாக கூறினார். சிறையில் அடைத்துவிடுவர் என கதறினார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை இல்லாமல் மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. எனவே தான், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டு சீட்டுக்களையும் எண்ண வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

R Kay
மார் 19, 2024 00:36

கேட்கிறவன் கேனை என்றால், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆமாம் அது ஏன் எல்லோர் முகங்களிலும் அந்த கலவரம், பயம்? total washout தான்


sankaranarayanan
மார் 18, 2024 19:51

உதவாக்கரை உட்கார்ந்திருப்பதை பார்த்தால் இந்த இருவரும் இரு பக்கங்களில் அவரை நெருக்கி உட்காரவைத்து அர்ச்சனை செய்வதுபோலல்லவா இருக்கிறது - எப்படி இருந்த உதவும்தாக்கரை இப்போது எப்படி உதவாதாகரையாக ஆகிவிட்டார் பாவம் பாவம் பாவம் எல்லாமே அரசிய சாயம்


Indian
மார் 18, 2024 19:31

வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வர வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன் ..


பேசும் தமிழன்
மார் 18, 2024 19:08

யாரு விடியல் தலைவரா.... ஒரு மாநில கட்சி... ஒரே ஒரு லாட்டரி அதிபரிடம் இருந்து மட்டும்.... 500 கோடி நம்ம கட்சி வாங்கி இருப்பதாக கேள்வி... நாம அதை பற்றி பேசலாமா ????


Gopi
மார் 18, 2024 13:17

இதைத்தான் வாயில வடைசுடுறதுன்னு சொல்லுவாங்கா. ராகுல் மனதிற்குள்: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளம் ஆக்கிடுவாங்க


Anand
மார் 18, 2024 11:47

இதில் எந்த ஒரு ...வது சுய உழைப்பில் முன்னேறியது என சொல்லுங்கள் பாப்போம்?


Krishnamurthy Venkatesan
மார் 18, 2024 11:45

இந்த கூட்டத்தில் ஒரு வட நாட்டு தலைவரும், சனாதனத்தை ஒழிப்பேன் என்று உதயநிதி சொன்னது பற்றியும், ஹிந்தி வேண்டாம் போடா என்று சொன்னதை பற்றியும், இந்து மதத்தையம் இந்து கடவுள்களையும் அவமதிப்பதையே வேலையாக கொண்ட ஆ ராசாவின் பேச்சுகளைப்பற்றியும் ஸ்டாலின் அவர்களிடம் கேள்வி எழுப்பவில்லையே.


மோகனசுந்தரம்
மார் 18, 2024 11:38

நம்ம முதலை அமைச்சர் துண்டுச்சீட்டைப் பார்த்து பேசும் பொழுது சிப்பு சிப்பா வருகிறது.இது நமக்கு வந்த சோதனை. வெளியில் சொல்ல வெட்கமாக உள்ளது. இப்படி ஒரு முதலை அமைச்சர்.


ram
மார் 18, 2024 11:31

அலிபாபாவும் நாற்பது........


Raa
மார் 18, 2024 11:05

தலைவரே மைண்டு வாய்சுன்னு நினைத்து சத்தமா நம்மை பற்றியும் போட்டுக்கொடுக்காதீர்கள்.


மேலும் செய்திகள்