உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் பல்கலை., வேந்தராக முடியாது: மசோதாவை திருப்பி அனுப்பிய ஜனாதிபதி

முதல்வர் பல்கலை., வேந்தராக முடியாது: மசோதாவை திருப்பி அனுப்பிய ஜனாதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமிர்தசரஸ்: பஞ்சாபில் பல்கலை. வேந்தர்களாக மாநில முதலமைச்சர் பதவி வகிக்க வகை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த்மான்சிங் உள்ளார். இம்மாநில கவர்னராக பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இருவருக்குமிடையே மோதல் போக்கு தொடர்கதையாகி வருகிறது.இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைகழகங்களில் முதலமைச்சரே வேந்தர்களாக பதவி வகிக்கும் மசோதா 2023 மற்றும் குருத்துவரா தொடர்பான மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஜனாதிபதியால் மசோதா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மாநில முதலமைச்சர் பல்கலைகளின் வேந்தர்களாக இருக்க முடியாது, அதற்கான வழிமுறை இல்லை என மசோதா ஜனாதிபதியால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தத்வமசி
ஜூலை 18, 2024 12:52

மாநில குடும்ப கட்சிகள் "ஜனநாயகம்" என்கிற பெயரில் நடத்தும் குறுநில மன்னர்களின் ஆட்சியை மீண்டும் அரங்கேற்ற நினைக்கிறார்களா? இதற்காகவா அந்நியரிடம் இருந்து சுதந்திரம் பெற பல லட்சம் மக்கள் தன் உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் தியாகம் செய்தனர் ? இதற்காகவா ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து வல்லப் பாய் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார் ? மாநில கட்சிகளின் இழுத்த இழுப்புக்கு வருவதா மத்திய அரசு ?


Anand
ஜூலை 18, 2024 11:38

இவனைப்போன்ற கோமாளிகள் ஆட்சி நடத்தினால் விளங்கிடும். ஏற்கனவே தீவிரவாதத்தின் மூலம் அடிபட்டு அதிலிருந்து விடுபட்டு அமைதியான வழியில் வாழ்ந்து வரும் அம்மாநில மக்கள் தற்போது ஏறக்குறைய தமிழ்நாட்டு மக்களை போல தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


GMM
ஜூலை 18, 2024 08:07

ஜனாதிபதியின் மிக சரியான முடிவு. மாநில அளவில் முதல்வர் குழு பொதுநல கொள்கை முடிவு எடுக்க முடியும். அதிகம் சுயநல கொள்கை. தற்போது மரபு, சட்டம் இல்லாமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி, திமுக போன்ற கட்சிகள் தங்களை சர்வதேச அளவில் அதிகாரம் பெற்றவர்கள் போல் மசோதா தாக்கல் செய்து குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த உத்தரவு நிரந்தரம். அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். தலைமை செயலாளருக்கு மாநில கவர்னர், முதல்வர் அதிகாரம் தெரியாமல், இயந்திரம், பொம்மை போல் கைநாட்டு போட்டு செயல்பட்டு வருகின்றனர்.


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 07:42

மாநிலத்தில்( முதல்வர் இல்லாமல்) ஜனாதிபதி ஆட்சி நடக்கும் போது யார் வேந்தராக இருப்பார்?.


Matt P
ஜூலை 18, 2024 20:14

ஜனாதிபதி ஆட்சி என்றாலும் ஆளுநர் இருப்பாரே.ஜனாதிபதி ஆட்சி ஆளுநர் ஆட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரா காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி நடந்தபோது கே.கே.ஷா என்பவர் ஆளுநராக இருந்தார். அவர் பின்னால் துறை செயலர்கள் அமைச்சர்களாக செயல்படுவர்.


subramanian
ஜூலை 18, 2024 06:53

பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் விதமாக ஸ்டாலின் கருத்து சொல்லி விடுவாரா? உடனே இது ஒன்றிய அரசின் ஆணவம் என்று பிதற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு......


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 05:36

ஆப்பா...


subramanian
ஜூலை 18, 2024 06:55

40 தும் அவரது 4.8% மின்கட்டண உயர்வு உங்களுக்கு.


Ganesh Kumar
ஜூலை 18, 2024 02:18

தி. மு. காவின் உடன் பிறப்புகளும் தலைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்


Matt P
ஜூலை 18, 2024 20:49

பொது அறிவை வளர்த்து கொண்டிருக்கிறோம்.


Matt P
ஜூலை 18, 2024 00:58

நம்ம முதல்வர் சுடாலின்க்கு மட்டுமாவது விதி விலக்கு கொடுப்பார்களா? நீட் விலக்கு தமிழ்நாட்டுக்கு மட்டும் விரும்புவது போல ...


subramanian
ஜூலை 18, 2024 06:49

போனா போகட்டும் என்று தர இது வடை, பஜ்ஜி, சுண்டலா?


R Dhasarathan
ஜூலை 18, 2024 00:45

மிகவும் சரி. இவர்கள் விரும்பியபடி கல்வி திட்டங்களை மாற்றிக்கொள்ள இப்படிப்பட்ட கீழ் தரமாக நடந்து கொள்கிறார்கள். முதல் குடிமகள் ஜனாதிபதி செய்தது மிகவும் சரி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை