உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிர்வாக செலவை குறைக்க தலைமை செயலர் உத்தரவு

நிர்வாக செலவை குறைக்க தலைமை செயலர் உத்தரவு

பெங்களூரு: அரசு கட்டடங்களின் நிர்வாக செலவை, 10 முதல் 15 சதவீதம் குறைக்க, 11 அம்சங்கள் கொண்ட உத்தரவை பின்பற்றும்படி பொதுப்பணித் துறைக்கு, அரசு தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ் உத்தரவிட்டுள்ளார்.அரசு கட்டடங்களின் நிர்வகிப்பு செலவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை குறைப்பது குறித்து, பொதுப்பணி, போலீஸ், வீட்டு வசதி வாரியம், போலீஸ் குடியிருப்பு வாரியம், கே.ஆர்.ஐ.டி.எல்., உட்பட பல்வேறு துறைகளுடன், அரசு தலைமை செயலர் சாலினி ரஜ்னீஷ், சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அப்போது அவர், அரசு கட்டடங்களின் நிர்வாக செலவை குறைக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சராசரி செலவுகளை மட்டுமே செய்ய வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.'மழை தண்ணீர், கட்டடத்தின் உட்பகுதியில் பாயாமல் இருப்பதற்காக, ஜன்னல்களுக்கு மேலே தடுப்பு அமைப்பதால், அறைக்குள் காற்று, வெளிச்சம் வருவதில்லை. இதனால், தடுப்பு கட்ட வேண்டாம். கட்டடங்களுக்குள் தரைக்கு மார்பிள், கிளாடிங் கற்களுக்கு பதிலாக, வேறு டைல்ஸ் பயன்படுத்த வேண்டும்.'வென்டிலேட்டர்கள் பொருத்த கூடாது, இவைகள் 2.25 மீட்டர் உயரம் இருப்பதால், பராமரிப்பது கஷ்டம். மீட்டிங் ஹால், அறுவை சிகிச்சை அறைகளுக்கு மட்டும், 'பால்ஸ் சீலிங்' இருக்கட்டும்; அதிகாரிகளின் அறைகளுக்கு வேண்டாம்.கட்டட வளாகத்தின் சுவர்களுக்கு, 'கான்கிரீட் ப்ரீ பேப்ரிகேஷன் காம்போனென்ட்ஸ்' பயன்படுத்துவதால் நேரமும், செலவும் மிச்சமாகும்.நீதிபதிகள் மற்றும் முக்கியமான நபர்களின் கட்டடங்களை தவிர, மற்ற அலுவலகங்களுக்கு உபகரணங்கள் மற்றும் நிர்வகிப்பு செலவு, 5 சதவீதம் அதிகமாகாமல் இருக்க வேண்டும்' என்பது உட்பட, பல நெறிமுறைகள் வகுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை