உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயியால் அர்ப்பணிக்கப்பட்ட சிக்கமாதுரே சனீஸ்வரர் கோவில்

விவசாயியால் அர்ப்பணிக்கப்பட்ட சிக்கமாதுரே சனீஸ்வரர் கோவில்

ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, விரய சனி என, கிரக நிலை உள்ளவர்கள், சனி பகவான் கோவிலுக்குச் சென்றால், கெடுபலன் குறையும் என்பது ஐதீகம். இதனால் சனி பகவான் கோவில்களை தேடிச் சென்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். பெங்களூரிலும் ஏராளமான சனி பகவான் கோவில் உள்ளது.இதில் தொட்டபல்லாப்பூர் சிக்கமாதுரேயில் உள்ள சனீஸ்வரர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. தங்கள் வாழ்வில் நிலவும் கஷ்டங்களை குறைக்க, பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர். கோவில் முன் நெருப்பு எரியும் இடத்தில், கருப்பு எள்ளை துணியில் கட்டி, நல்லெண்ணெயில் நனைத்து, நெருப்புக்குள் போட்டால், கஷ்டங்கள் குறைந்து விடும் என்பது, பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.கங்க ஹனுமய்யா என்ற விவசாயி, தனது வாழ்க்கையில் நேர்ந்த கஷ்டங்களை, சனி பகவான் தீர்த்து வைத்ததற்காக, கோவிலை கட்டி, சனி பகவானுக்கு அர்ப்பணித்தார். இந்த கோவில் கோபுரம், பக்தர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. கோபுரத்தில் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள், பிரமிக்க வைக்கிறது.ஆண்டுதோறும் இக்கோவிலில் நடக்கும் தேர் ஊர்வலம் பிரசித்தி பெற்றது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, கோவில் திறந்திருக்கும். கோவில் நடை சாத்தப்படுவதற்கு முன்பு, மகா பூஜையும் நடக்கிறது.மெஜஸ்டிக், கே.ஆர்., மார்க்கெட்டில் இருந்து, பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு ரூரல் நெலமங்களாவில் இருந்து 14 கி.மீ., துாரத்திலும், தொட்டபல்லாப்பூரில் இருந்து 18 கி.மீ., துாரத்திலும் கோவில் உள்ளது. பெங்களூரு நகரில் இருந்து கார், பைக்குகளில் சென்றால் ஒன்றரை மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை