உள்ளூர் செய்திகள்

சினி கடலை

கன்னடத்தில் வளர்ந்து வரும், இளம் நாயகிகளில், ரேச்சல் டேவிட்டும் ஒருவர். 'லவ் மாக்டெய்ல் - 2'ல் அறிமுகமான இவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. முதல் படமே வெற்றி பெற்றதால், ராசியான நடிகையானார். 'அன்லாக் ராகவா' என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இது குறித்து, அவரிடம் கேட்ட போது, ''அன்லாக் ராகவா பிப்ரவரி 7ம் தேதி, திரைக்கு வரவுள்ளது. இது அழகான கதை கொண்டது. இயக்குனர் தீபக், கதை சொன்ன போது, எனக்கு மிகவும் பிடித்தது. படத்தில் ஜானகி என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் எப்போது திரைக்கு வரும் என, ரசிகர்களை போன்று ஆவலோடு காத்திருக்கிறேன். படம் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என, நம்புகிறேன்,'' என்றார்.பிருத்வி அம்பர், தன்யா ராம்குமார் இணைந்து நடிக்கும், 'சவுகிதார்' படப்பிடிப்பு முடிந்துள்ளது. 2025 மே மாதம் திரைக்கு வரவுள்ளது. இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'சங்கராந்தி அன்று டீசர் வெளியாகும். ஒவ்வொருவரின் மனதில் சவுகிதார் இடம் பிடிப்பார். கிராமப்பகுதியில் கதை துவங்கும். சாய்குமாரும், பிருத்வி அம்பலும் தந்தை, மகனாக நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் மகத்துவத்தை இப்படத்தில் காண்பித்துள்ளோம். கன்னடத்துடன், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் திரைக்கு வரும். இதில் ஸ்வேதா, சுதாராணி, தர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்திரசேகர் பன்டியப்பா இயக்கியுள்ளார்' என்றனர்.சமீப நாட்களாக நடிகர், நடிகையர் விவாகரத்து செய்திகள் சகஜமாகி விட்டன. தற்போது பிரபல நடிகரும், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளருமான மாஸ்டர் ஆனந்த், அவரது மனைவி யஷஸ்வினியை விவாகரத்து செய்ய தயாராவதாக செய்தி வெளியானது. யஷஸ்வினி, சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருப்பவர். ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவார்.சில நாட்களுக்கு முன், இவர் மினி ஸ்கர்ட் போட்டு கொண்டு நடனமாடிய வீடியோ வைரல் ஆனது. இதை இளம் பெண்ணொருவர், 'கன்னட திரையுலகில் விரைவில் மற்றொரு ஜோடி விவாகரத்துக்கு தயாராகிறது' என கமென்ட் செய்தார். இதற்கு சோஷியல் மீடியா வழியாகவே, யஷஸ்வினி பதிலடி கொடுத்துள்ளார். எங்களுக்குள் எப்போதும் பிரிவினை இருக்காது. என் குழந்தைகளை விட என் கணவரை அதிகம் நேசிக்கிறேன்' என, கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.நடிகர் சுதீப் நடித்த, 'மாக்ஸ்' திரைக்கு வந்த முதல் நாளே, வசூலை அள்ளியதால் படக்குழுவினர் குஷியில் உள்ளனர். இப்படம் கிறிஸ்துமஸ் நாளான நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்லாக ஓடுகிறது. திரைப்பட விமர்சகர்களும் பாராட்டினர். பாடல்களும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.ஒரே இரவில் நடக்கும் கதையை, மிகவும் சுவாரஸ்யமாக கூறியுள்ளனர். படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, சுதீப் தன் வீட்டில் படக்குழுவினருக்கு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். இதில் அவரது மனைவி பிரியாவும் பங்கேற்றார். சுதீப், பிரியா உட்பட, அனைவரும் 'மாக்ஸ்' பெயர் கொண்ட டீ சர்ட் அணிந்து, பார்ட்டியை கொண்டாடினர். இந்த படத்தை சுதீப்பும், தமிழின் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் இணைந்து தயாரித்து உள்ளனர்.சிறார்களின் சாகசத்தை மையமாக கொண்டு, 'ராமா' திரைப்படம் தயாராகிறது. படப்பிடிப்பும் முடிந்துள்ளது.படக்குழுவினர் கூறுகையில், படத்தின் போஸ்டரை சாலுமரா திம்மக்கா வெளியிட்டு வாழ்த்தினார். காடுகள், அங்குள்ள இயற்கை வளங்களின் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாகும்.சுற்றுச்சூழலின் மகத்துவத்தை உணர்த்தும். கிராபிக்ஸ் பயன்படுத்தி மரங்கள், அதன் வேர்களுடன் பேசுவதை படமாக்கினோம். மரங்களை வெட்ட வந்தவர்களை, பள்ளி சிறார்கள் தடுத்து நிறுத்துகின்றனர். மரங்களை காப்பாற்ற போராடுகின்றனர். பல குழந்தை நட்சத்திரங்கள் நடிதுள்ளனர்' என்றனர்.தன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வருவதால், நடிகை ருக்மிணி வசந்த் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, 'சப்த சாகரதாச்சே எல்லோ' திரைப்படம், எனக்கு திருப்புமுனையாக இருந்தது. எதிர்பார்ப்பையும் மீறி என்னை ஆதரித்தனர். அதன்பின் திரைக்கு வந்த, 'பீர்பால்' எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.ஆனால், 'பானதாரியல்லி, பகீரா' படங்கள் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து வெளியான, 'பைரதி ரனகல்' திரைப்படம் அமோகமாக ஓடுகிறது. இதனால், எனக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இரண்டு படங்களில் நான் டாக்டராக நடித்துள்ளேன். நல்ல கதை, கதாபாத்திரங்களுக்கு மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதை உணர்ந்துள்ளேன்' என்றார்.

மகிழ்ச்சியில் ருக்மிணி வசந்த்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை