உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுவனுக்கு தொந்தரவு கிறிஸ்துவ மதபோதகர் கைது

சிறுவனுக்கு தொந்தரவு கிறிஸ்துவ மதபோதகர் கைது

மூணாறு:கேரள மாநிலம், மூணாறில், நல்லதண்ணி எஸ்டேட்டிற்கு செல்லும் ரோட்டில் உள்ள சர்ச்சில் 2023 ஏப்ரலில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்க சென்ற, அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு, சர்ச் போதகர் செபாஸ்டின், 45, என்பவர், பாலியல் தொந்தரவு கொடுத்தார்.பள்ளியில் சில நாட்களுக்கு முன் நடந்த கவுன்சிலிங்கின் போது, சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தார். இதையடுத்து, மூணாறு போலீசில் பள்ளி நிர்வாகத்தினர் புகார் அளித்தனர்.இந்நிலையில், சொந்த ஊரான துாத்துக்குடி சென்ற செபாஸ்டினை, அங்கு இன்ஸ்பெக்டர் ராஜன் கே.அரண்மனா தலைமையிலான போலீசார் கைது செய்து, மூணாறு அழைத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ