உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சைபர் குற்றங்களை தடுக்க சி.ஐ.டி., சிறப்பு குழு தயார்

சைபர் குற்றங்களை தடுக்க சி.ஐ.டி., சிறப்பு குழு தயார்

பெங்களூரு: அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில், சி.ஐ.டி., போலீஸ் சார்பில், 'கணினி ஹேக்கிங் மற்றும் தடயவியல் விசாரணை' என்ற தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.சமீபத்திய நவீன உலகில் ஏமாற்றுவோரின் எண்ணிக்கையும், ஏமாறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. எப்படி எல்லாம் செய்ய முடியுமோ, அப்படி எல்லாம் மோசடி செய்வது வழக்கமாகி விட்டது.குறிப்பாக, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பலரது வங்கிக் கணக்குகளில் பணம் 'அபேஸ்' செய்வது அதிகரித்து வருகிறது. சிறிது, சிறிதாக சேமித்து வைத்த பணத்தை இழப்பதால், ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.குறுந்தகவல், 'வாட்ஸாப்' இன்ஸ்டாகிராம், எக்ஸ், முகநுால் என சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், 'உங்களுக்கு அதிக தொகை பரிசு வந்துள்ளது. வங்கிக் கணக்கு விபரங்களை அனுப்பி வைத்தால், அதில் செலுத்தி விடுகிறோம்' என்று கூறி, விபரங்களை பெற்றுக் கொள்கின்றனர்.பின், மொபைல் போனுக்கு ஓ.டி.பி., எனும் ஒரு முறை ரகசிய எண் அனுப்பப்பட்டுள்ளது. அதை தெரிவிக்கும்படி, பெற்றுக் கொண்டு, பணம் அனுப்புவதற்கு பதிலாக, அந்த வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.பின்னர், அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தால், போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடும். போலீசில் புகார் செய்தாலும், கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இது போன்று, வெவ்வேறு முறைகளில் சைபர் மோசடிகள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.இத்தகைய சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில், கர்நாடகாவின் சி.ஐ.டி., எனும் குற்றப் புலனாய்வு துறை சார்பில், 'கணினி ஹேக்கிங் மற்றும் தடயவியல் விசாரணை' என்ற தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில், ஐ.பி.எஸ்., மற்றும் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் உள்ளனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சைபர் குற்றங்களை தடுப்பதற்கான பயிற்சி இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திலும் இந்த குழு உறுப்பினர்கள் இருப்பர்.இதுகுறித்து, சி.ஐ.டி., - டி.ஜி.பி., சலீம் கூறுகையில், ''தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் போலீசாரை அடையாளம் கண்டு, பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் அதிகமாகி வருவதை தடுக்கும் வகையில், மேலும் பலருக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை