உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கிகளில் கிளர்க் வேலைகள் இனி இல்லாமல் போய்விடும்: ரிசர்வ் வங்கி

வங்கிகளில் கிளர்க் வேலைகள் இனி இல்லாமல் போய்விடும்: ரிசர்வ் வங்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், வங்கிகளில், கிளர்க் உள்ளிட்ட நடுத்தர பணிகளுக்கான தேவை, விரைவில் இல்லாமல் போகலாம் என, ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், 'கரன்சி மற்றும் நிதி' என்ற தலைப்பில், ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிதித்துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து தெரிவித்திருப்பதாவது:* வங்கித் துறையில் அவுட்சோர்சிங் மற்றும் தொலைவில் இருந்து பணியாற்றுவதை டிஜிட்டல் மயமாக்கல் பரவலாக்கி வருகிறது. மூலதனம் மற்றும் பணியாளர் ஊதியத்திற்கு இடையேயான இடைவெளியை தானியங்கி முறை அதிகரிப்பதால், குறைந்த திறனுக்கு குறைந்த ஊதியம்; அதிக திறனுக்கு அதிக ஊதியம் என்ற வேலைவாய்ப்பு சந்தை உருவாகிறது. அதே சமயம், தொழில்நுட்பம், நடுத்தர பணிகளை காணாமல் போகச் செய்கிறது.* 2010 - 2011ம் நிதியாண்டில், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு 50:50 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால், 2022-- - 23ம் நிதியாண்டில், இதே விகிதம் 74:26 என்ற விகிதமாக மாறி உள்ளது.* உலகளவில், வங்கித்துறையில் கீழ்மட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, தொழில்நுட்ப வல்லுனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. இதன் தாக்கம், இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது.* இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறன் உடையவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 2023ல் நடைபெற்ற ஒட்டுமொத்த பணியமர்த்தலில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்கள், 16.80 சதவீதம் பங்களிப்பை கொண்டு உள்ளது.* இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், 2026ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக வளர்ச்சியடையக் கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 01, 2024 11:54

வங்கி கிளைகள் முன்பு இருந்தது விட தற்போது அதிகரித்து காணப்படுகிறது. சிறிய அளவிலான கிளைகள் இன்னும் அதிகமாக கிராமங்களை மையப்படுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் திறக்க வேண்டும். இதில் மினிமம் எம்பாளியீஸ் என்ற அளவில் திறந்தால் அதிக பயனுடையதாக இருக்கும். கந்து வட்டி காரர்கள் எண்ணிக்கை குறைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் வங்கி வேலைவாய்ப்பு அதிகரிக்கலாம்.


kingsly Ravindran
ஜூலை 31, 2024 19:25

கவர்னர் மற்றும் நிதி அமைச்சர் பணியையும் அவுட் சோர்சிங் பண்ணலாமே. உங்களால் முதலில் என்ன நன்மை. எல்லாமே குளோனிங் babies.


s sambath kumar
ஜூலை 31, 2024 16:24

இன்ஜினியரிங் GRADUATE அதிகமாக சேர்க்கப்படுகிறார்கள் வேலையின்மை காரணமாக,


Thiyagu
ஜூலை 31, 2024 15:51

இது உண்மை.. தமிழ்நாட்டின் மொத்த வேலை வாய்ப்பு பறித்து மத்திய அரசு.. ???


Sankar ARUMUGAM
ஜூலை 31, 2024 14:47

இனி ராணுவம் கூட ரோபோட் நாய்கள் வந்து விட்டது. எல்லைஈல் இனி பனி மழை குளிர் அனைத்தும் தாங்கி பாதுகாப்பு வேலை செய்யும் காலம் வந்துவிட்டது. அதனுடன் இருக்கும் கேமரா மூலம் நாம் எல்லை கண்கானிக்கும் நிலை வர போகிறது.


A.Gomathinayagam
ஜூலை 31, 2024 14:03

குமாஸ்தா வேலையை தற்பொழுது சிங்கள் விண்டோ ஆபரேட்டர் என்று மாற்றி விட்டார்கள் .செய்வது என்னோவோ குமாஸ்தா வேலை தான்


கனோஜ் ஆங்ரே
ஜூலை 31, 2024 11:25

////டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், வங்கிகளில், கிளர்க் உள்ளிட்ட நடுத்தர பணிகளுக்கான தேவை, விரைவில் இல்லாமல் போகலாம் -/// இதை சொல்றதுக்கு நீ ஒரு ஐஏஎஸ் ஆபிசர்... அதுலேயும் தமிழ்நாட்லந்து போய்... இந்திய இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு லோடு மண்ணை அள்ளி கொட்டுறியே... உனக்கு என்னய்யா... நீ கோடிக்கணக்குல சம்பாரிச்சி. உன்னோட வாரிசுகளையெல்லாம் செட்டில் ஆக்கிட்டு.. இன்றைய இளைஞர்களை நடுத்தெருவில் பிச்சை எடுக்க வைக்குற... உன்னோட தகவல் தொழில்நுட்பத்துல தர்ப்ப புல்ல போட்டு கொளுத்த....இப்படியே இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்து... அவனுங்கள பிச்சை எடுக்கவிட்டுவிட்டு.... ஒரு ஆண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புன்னு புளுகுகுங்க..


Peppin
ஜூலை 31, 2024 10:51

ஏற்கனவே வங்கியில் சேவை அருமையாக உள்ளது இங்கு எங்கள் ஊரில் இருக்கும் பணியாளரே ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று சென்று வருகிறார் .


Peppin
ஜூலை 31, 2024 10:49

ஏற்கனவே வங்கியில் சேவை அருமையாக உள்ளது. இங்கு எங்கள் ஊரில் இருக்கும் பணியாளரே ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று சென்று வருகிறார்


Rajarajan
ஜூலை 31, 2024 09:46

ரொம்ப ரொம்ப லேட் பிக் அப். தனியார் நிறுவனங்களில், இது போன்ற பதவிகள் வழக்கொழிந்து, தலைமுறை ஆகிவிட்டது. அது இருக்கட்டும். அரசு துறை / பொது துறை நிறுவனங்களின் நஷ்டத்திற்கு, இந்த தேவையற்ற பதவிகளின் செலவினங்களும் முக்கிய காரணம். தனியாரிடம் கொடுத்து பாருங்கள், இருக்கை தேய்ப்பவர்களை எப்படி வீட்டுக்கு அனுப்பி, வேலை முறையை மாற்றி, தேவையற்ற பதவிகளை ஒழித்து, துறைகளை ஒருங்கிணைக்கின்றனர் என்று பாருங்கள். இதனால், அரசுக்கு கோடானு கோடி செலவினங்கள் மிச்சமாகும். இதை நாட்டின் வளர்ச்சிக்கு, அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் தலைமுறை மாற்றத்துக்கு செலவழித்தால், இந்தியா அடுத்த ஐந்துஆண்டுகளில் மேலும் வளர்ச்சி பெரும். விழலுக்கு நீர் இறைப்பது வீண் செலவு. இது ஒவ்வொரு தனியார் துறை தனிமனிதரின், ரத்தம் மற்றும் வியர்வையை பிழிந்து பெறும் வரியை, அரசு துறைகளுக்கு வாரி வாரி அனாவசியமாக இறைப்பது முற்றிலும் தவறு. இதற்காக ஒரு பொதுநல வழக்கு பாய்வதில் தவறே இல்லை. விரைவில் நடக்கலாம்.


Raghavan
ஜூலை 31, 2024 12:18

நீங்கள் சொல்லுவது ஒரு பகல் கனவு. இதற்க்கு யாரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு இதை வைத்துதான் பிழைபே நடக்கிறது. பிறகு ஜாதிவாரி வேலை வழங்க வேண்டும். இங்கு வேலை வாய்ப்பே ரிசர்வேஷன் அடிப்படயில் தான் நடக்கிறது. இன்னும் கொஞ்சநாளில் இவர்களே அமெரிக்காவிலும் ஜாதிவாரி அடிப்படயில் வேலை வழங்கவேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டு அவர்களுக்கு அனுப்பினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.


Thiyagu
ஜூலை 31, 2024 15:53

அருமை வாழ்த்துக்கள் ஐயா.. ????


Nagarajan Dixit
ஆக 02, 2024 14:40

முற்றிலும் உண்மை.அது விரைவில் நடக்க வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை