உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கை விட்டு போனது ‛கடிகாரம் சின்னம் : ஏமாற்றத்தில் சரத்பவார்

கை விட்டு போனது ‛கடிகாரம் சின்னம் : ஏமாற்றத்தில் சரத்பவார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ‛‛கடிகாரம்'' சின்னத்தை தன் கட்சிக்கு ஒதுக்கிட கோரி உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் தொடர்ந்த வழக்கில் ‛கடிகாரம்' சின்னம் அஜித்பவாரிடமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டதால் சரத்பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு ஜூலையில் மஹாராஷ்டிராவில் பிரதான எதிர்கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சி இரண்டாக உடைந்தது. அஜித்பவார் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வரானார்.இரு தரப்பினரும் கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் கமிஷனில் முறையிட்டனர். இதில் கட்சி சின்னமான ‛‛கடிகாரம்'' அஜித்பவாருக்கும், சரத்பவாரின் சரத்சந்திரபவார் தேசியவாத காங். என்ற கட்சிக்கு ‛ டிரம்பெட் ஊதும் மனிதன்' சின்னம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சின்னம் தற்காலிகமானது தான் என தீர்ப்பளித்தது.இந்நிலையில் ‛‛கடிகாரம்'' சின்னத்தை தன் கட்சிக்கு ஒதுக்கிட கோரியும், வேறு சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கிட கோரியும் சரத்சந்திரபவார் தேசிய வாத காங்., கட்சியின் சரத்பவார் உச்சநீதிமன்றத்தில் கடந்த 04-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.மனுவை நீதிபதிகள் சூர்ய காந்த், திபங்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி கூறியது. சரத் ​​பவாரால் நிறுவப்பட்ட தேசியவாத காங்., பிளவுபடுவதற்கு முன், 'கடிகாரம் சின்னம் தேர்தல் சின்னமாக வைத்திருந்தது, தற்போது அஜித்பவாரிடம் சின்னம் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தற்காலிகமானது.இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு நீடிக்கும் என நீதிபதிகள் அறிவித்து, ‛கடிகாரம் சின்னம் அஜித்பவார் தரப்பிடமே இருக்கும் என உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவால் சரத்பவார் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

J.V. Iyer
அக் 25, 2024 04:41

ஓடாத பல ஆயிரம் கடிகாரம் பரிசுகளை மக்களுக்கு எப்படி கொடுத்து வோட்டு வாங்குவது?


ஆரூர் ரங்
அக் 24, 2024 22:14

குறைந்த எம்எல்ஏ க்க‌ளை வைத்துக்கொண்டே ஷிண்டே அதிக எம்எல்ஏ க்களை வைத்திருக்கும் பிஜெபி யை மேலாண்மை செய்ய முயன்றார். அவரைத் தட்டி வைக்க (அரை மனதுடன்) அ‌ஜித் பவாரை கூட்டணியிலும் சேர்த்தது பிஜெபி. நாட்டின் பொருளாதார இதயமான மாநிலத்தில் காங்கிரஸ் போன்ற போலி சிறுபான்மைவாத நகர நக்சல் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் செய்யப் பட்டது. அஜித் ஊழல்வாதியில்லை என பாரதீய ஜனதா கூறவே இல்லை. ஆனால் பயங்கரவாத கூட்டத்தில் அவரில்லை. எப்படியும் பாரதீய ஜனதா அங்கு முழு மெஜாரிட்டி பெற்றால்தான் நல்லாட்சி வழங்க முடியும். கொள்கை சமரச கூட்டணி அரசியல் நீண்டகால அளவில் கேட்டில் முடியும் .


SP
அக் 24, 2024 21:16

அஜித்பவாரை கூட்டணியில் சேர்த்ததே தவறு.அதனால்தான் பாராளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றிகிடைக்கவில்லை. இதில் சட்டமன்ற தேர்தலிலாவது அவரை ஒதுக்கிவைக்கவேண்டும்.ஆனால் பாஜ தேசியத்தலைமை செய்யாது.


Sivakumar
அக் 24, 2024 20:19

இவரை ஊழல்வாதின்னு சொல்லாத பிஜேபி தலைவர்கள் கிடையாது. அமித்ஷா, நட்டா, மோடி எல்லோரும் இவரை வெச்சி தேசியவாத காங்கிரெஸ்ஸை ஊழல்கட்சினு சொன்னாங்க. இப்போ என்ன ஆச்சு ? பிஜேபி கூட அணி சேர்ந்தவுடன் இவரும் அப்பழுக்கற்ற தேசபக்தர் ஆகிவிட்டாரோ ???


bgm
அக் 25, 2024 08:03

டேய் உங்க விடியல் மடியல் கூட செ பா பற்றி செல்லாததா? அப்றம் அவரை பவர்ஃபுல் மந்திரி ஆகியது..ஓசி குவார்ட்டர் போதை இன்னும் தெளிய வில்லையா


M Ramachandran
அக் 24, 2024 20:18

தள்ளாத வயதில் ஏனைய்யா இந்த தள்ளு முள்ளுக்கு போகணும். நிம்மதியாக காலை நடை பயணம் ஜாக்கிரதை. வீட்டு உள்ளெ நடை பயணம் செய்வது உத்தமம்


M Ramachandran
அக் 24, 2024 20:11

கடிகாரம் போனால் என்ன ஆட்ட மணி கேளுங்கள்.


T.sthivinayagam
அக் 24, 2024 20:09

அறிந்து கொள்ள முடியாத பிரபஞ்ச சூஷ்மத்தில் சிக்கியுள்ளார்


ஆரூர் ரங்
அக் 24, 2024 19:45

சரத் கடிகாரத்தின் முள் உடைந்து விட்டதால் நேரம் சரியில்லை. அவர் கட்சிக்கும் காங்கிரசுக்கும் கொள்கையளவில் என்ன வேறுபாடு? எதற்காக தனி கட்டுமரம் ஓட்டுகிறார்?


புதிய வீடியோ