உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமித்ஷா திட்டவட்டம்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமித்ஷா திட்டவட்டம்

புதுடில்லி: ''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி அமையும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=78qzcr0t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, ஆங்கில நாளிதழுக்கு அமித்ஷா அளித்த பேட்டி: அனைத்து துறைகளிலும் பா.ஜ., அரசு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.பீஹார், மேற்குவங்கம் மற்றும் தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும். கேரளாவிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் விவசாய பட்ஜெட் 2014ல் சுமார் ரூ.22,000 கோடியாக இருந்தது, இன்று அது ரூ.1.37 லட்சம் கோடியாக உள்ளது.

14 கோடி குடும்பங்கள்

கடந்த 10 ஆண்டுகளில், 60 கோடி ஏழை மக்களுக்கு வீட்டுவசதி, சமையல் எரிவாயு, மின்சாரம், குடிநீர், இலவச ரேஷன் பொருட்கள், ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை ஆகியவற்றை நாங்கள் வழங்கியுள்ளோம். அதாவது 14 கோடி குடும்பங்கள் அடிப்படை கஷ்டங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 75 ஆண்டுகளில் எந்த அரசாங்கமும் செய்ய முடியாத ஒன்று.

ஊழல், குடும்ப சண்டைகள்

நாங்கள் அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்கிறோம். ஸ்டாலினுக்கு நான் சொல்ல வேண்டியது இதுதான். தமிழில் மருத்துவம் கற்றுக்கொடுங்கள். ஏன் நீங்கள் செய்யக்கூடாது? தமிழில் பொறியியல் கற்றுக்கொடுங்கள். ஏன் நீங்கள் அதைச் செய்யக்கூடாது?நான் மக்களின் மனநிலையைப் பற்றிப் பேசுகிறேன். தமிழக மக்கள் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உறவினர்களுக்குச் சலுகை அளித்தல் மற்றும் குடும்பச் சண்டைகள் ஆகியவற்றால் சலித்துப் போயுள்ளனர்.

நிச்சயம் வெற்றி

தி.முக ஆட்சியில் பரவலான ஊழல். அது மிக நீண்ட பட்டியல். ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. பீஹாரில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. தே.ஜ., கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 2026ம் ஆண்டுக்குள் நக்சல் இயக்கம் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

3 தாக்குதல்கள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிரம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும். எங்கள் காலத்தில், மூன்று பெரிய சம்பவங்கள் நடந்தன. உரி, புல்வாமா மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஆகும். நாங்கள் தகுந்த முறையில் பதிலளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

கேள்வி: தமிழகத்தில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா?அமித்ஷா பதில்: YES (ஆம்).கேள்வி: கூட்டணியில் விஜய் வர வாய்ப்பு உள்ளதா?அமித்ஷா பதில்: நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம்.கேள்வி: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?அமித்ஷா பதில்: நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்.கேள்வி: தமிழகம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்னை என்ன?உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்: தி.மு.க., ஆட்சியில் நடக்கும் மாபெரும் ஊழல்கள். அந்த பட்டியல், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெகு நீளமானது.* மதுபான ஊழல் 39,775 கோடி ரூபாய்* மணல் ஊழல் 5,800 கோடி ரூபாய்* எரிசக்தி ஊழல் 4,400 கோடி ரூபாய்* எல்காட் ஊழல் 3,000 கோடி ரூபாய்* டிரான்ஸ்போர்ட் ஊழல் 2,000 கோடி ரூபாய்* டி.என்.எம்.எஸ்.சி., ஊழல் 600 கோடி ரூபாய்* ஊட்டச்சத்து ஊழல் 450 கோடி ரூபாய்* இலவச வேட்டி ஊழல் 60 கோடி ரூபாய்இவை தவிர, வேலைக்கு பணம், 100 நாள் வேலை திட்ட ஊழல் ஆகியவையும் உண்டு.கேள்வி; பா.ஜ., தேசிய தலைவர் தேர்தல் எப்பொழுது நடக்கும்?அமித்ஷா பதில்: விரைவில் நடக்கும். இன்னும் முடிவு செய்யப்படவில்லை. யாருடைய பெயரும் பரிசீலிக்கப்படவில்லை. விரைவில் இறுதி செய்யப்படும்.கேள்வி: பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இடையே வேறுபாடு உள்ளதா?அமித்ஷா பதில்: இல்லை. அவை அனைத்தும் பத்திரிகையாளர்களின் கற்பனை கதைகள்.கேள்வி: தொகுதி மறுவரையறை குறித்து பலரிடம் பயம் உள்ளதே?அமித்ஷா பதில்: தென் மாநிலங்களின் கவலைகள் குறித்து உரிய தீர்வு காணப்படும் என்று ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து உள்ளேன் . யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படாது. தொகுதி மறுவரையறை ஆணைய சட்டம் இனிமேல் தான் கொண்டு வரப்பட உள்ளது.

பார்லி.,யில் விவாதம்

அப்படி இருக்கையில் ஏன் அதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில், தமிழகத்தில் தேர்தல் வர போகிறது. அந்த அரசியல் காரணமாகவே பேசுகிறார்கள். தொகுதி மறுவரையறை சட்டம் கொண்டு வருவதற்கு முன், பார்லிமென்டில் விவாதம் நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

K.Rajasekaran
ஜூலை 12, 2025 18:22

What Central govt doing? Why never take any action against D M K govt?


venugopal s
ஜூலை 12, 2025 18:06

நிச்சயமாக ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தாலும்,இல்லை நாங்கள் இந்தத் தேர்தலில் தோற்று விடுவோம் என்று இதுவரை எந்த அரசியல் கட்சித் தலைவராவது சொல்லி உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறாரா? ராமதாஸ்,பிரேமலதா கூட இப்படித்தான் பேசுகின்றனர்.இதெல்லாம் ஒரு சம்பிரதாயமான பேச்சு, சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!


Oviya Vijay
ஜூலை 12, 2025 16:26

வாய்ப்பேயில்லை அமித் ஜீ அவர்களே... ஏனென்றால் தமிழகத்தில் மக்களிடையே திரிஷாவுக்கு இருக்கும் மதிப்பு புகழ் கூட அமித்ஷாவுக்கு கிடையாது என்பதே உண்மை... நீங்கள் என்ன தான் உச்சஸ்தாதியில் கூவிக் கொண்டேயிருந்தாலும் தமிழகத்தில் நிலைமை வேறு... நீங்கள் அமைத்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் கூட்டணி கூட உங்களுக்கு உறுதியில்லை. நினைவில் கொள்ளுங்கள்... ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தனித்து தான் ஆட்சியே ஒழிய கூட்டணி ஆட்சி கிடையாது என்று அறிவித்து உங்களுக்கு நோஸ்கட் செய்து விட முடியும்... நடந்தாலும் நடக்கலாம்... நீங்கள் இந்தியாவிற்கு வேண்டுமானால் அதிகாரமிக்க உள்துறை அமைச்சராக இருக்கலாம்... ஆனால் உங்கள் பப்பு தமிழகத்தில் வேகாது... உஷாராக இருங்கள்... இல்லையெனில் தற்போது இருக்கும் ஓட்டை உடைசல் கூட்டணி கூட உங்களை விட்டு சிதறிப் போகும்...


ஈசன்
ஜூலை 12, 2025 17:22

oviya vijay இப்போதுதான் சரியான கருத்தை பதிவு செய்திருக்கிறார். வட மாநில அரசியல் வேறு தென் மாநிலங்கள் வேறு. அதிலும் தமிழ் நாட்டு மக்கள் நடிக நடிகர்களை பார்த்து ஈஈஈஈ... என்று இளிப்பவர்கள். உதாரணங்கள் பல. எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினி வந்திருந்தால் அவரும், தற்போது விஜய். எங்கள் ...ஷா பிறகுதான் அமித்ஷா. கேட்பார் பேச்சை கேட்டு அண்ணாமலை அவர்களை வேறு நீக்கி விட்டீர்கள். இனி உங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் பதவியில் பங்கு என்று பகலில் கூட கனவு காணாதீர்கள்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 12, 2025 13:26

துபான ஊழல் 39,775 கோடி ரூபாய் மணல் ஊழல் 5,800 கோடி ரூபாய் எரிசக்தி ஊழல் 4,400 கோடி ரூபாய் எல்காட் ஊழல் 3,000 கோடி ரூபாய் டிரான்ஸ்போர்ட் ஊழல் 2,000 கோடி ரூபாய் டி.என்.எம்.எஸ்.சி., ஊழல் 600 கோடி ரூபாய் ஊட்டச்சத்து ஊழல் 450 கோடி ரூபாய் இலவச வேட்டி ஊழல் 60 கோடி ரூபாய்...உங்களிடம்தான் மத்தியஅரசு இருக்கிறது ..இதுக்கெல்லாம் வழக்குபோடாமல் மத்தியஅரசு என்னசெய்து கொண்டிருக்கிறது ...அண்ணாமலை டி எம் கே பைல்ஸ் கவர்னரிடம் கொடுத்தார் ..என்னவாயிற்று? ... இ டி ரைடுகள் நடந்தன முடிவு என்ன ? காங்கிரஸ் அரசாங்கம் தொடுத்த ஸ்பெக்ட்ரம் வழக்கை உங்களால் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த முடிந்ததா ? குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்து தேர்தலில் வென்று எம் பி ஆகிவிட்டனர் ..இன்னும் மத்தியஅரசு ஏன் மவுனம் காக்கிறது ..நீதிமன்றத்தால் குற்றவாளி என்று சொல்லப்பட்டவர்கள் மந்திரிகளாகி விட்டனர் ..நத்தை வேகத்தில் செயல்பட்டால் ..என்னசெய்வது ..


Ganesh
ஜூலை 15, 2025 18:49

வெரி சிம்பிள் எலேச்டின் பாண்ட் ஊழல், Rafeal ஊழல் இதுவே போதும்.


gopi
ஜூலை 12, 2025 13:24

நல்லா சொன்னீங்க சார்...இதை அப்படியே அந்த தவில் வித்துவான் (எ. ப )காதுல விழுற மாதிரி சொல்லுங்க....LOL


sridhar
ஜூலை 12, 2025 13:22

இப்படி சண்டை இட்டுக்கொண்டு ஒரு கூட்டணி மக்கள் மதியில் எப்படி இடம் பெரும்.


T.sthivinayagam
ஜூலை 12, 2025 13:05

முதலமைச்சர் அவர்தான் நாற்காலி பாஜாகவைடையது


Madras Madra
ஜூலை 12, 2025 12:39

இனி தமிழகத்தில் எப்பவுமே கூட்டணி ஆட்சி தான்


Ambedkumar
ஜூலை 12, 2025 12:20

Please make use of Mr. Annamalai effectively


GMM
ஜூலை 12, 2025 11:58

தேர்தலுக்கு முன் கூட்டணி ஆட்சி தகவல் அவசியம் தேவை. எடப்பாடி தனி செல்வாக்கு குறைவு. பிஜேபி போன்ற மாற்று கட்சி அவசியம். திமுக தனி செல்வாக்கு குறைவு. கூட்டணி ஆட்சி அமைப்பது இல்லை. திமுகவிற்கு மாற்று காங்கிரஸ் போன்ற கட்சி மீள முடியவில்லை. தனி பெரும்பான்மை இல்லை என்று தெரியவந்தால் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுப்பது நல்லது. எடப்பாடியும் கூட்டணி ஆட்சியை உறுதி செய்ய வேண்டும்.


சமீபத்திய செய்தி