உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாங்க… வாங்க… ஈரானுக்கு வாங்க…: இந்தியர்களை அழைக்கிறார் தூதர்

வாங்க… வாங்க… ஈரானுக்கு வாங்க…: இந்தியர்களை அழைக்கிறார் தூதர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இஸ்ரேலுடனான மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், ஈரான் பாதுகாப்பான நாடு, இந்தியர்கள் தாராளமாக வரலாம் என அந்நாட்டிற்கான இந்திய தூதர் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஈரான் தூதர் இராஜ் ஈலாஹி கூறியதாவது: ஈரான் இஸ்ரேல் இடையிலான பிரச்னை புதிது அல்ல. நீண்ட காலமாக நீடிக்கிறது. இதனால், இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது என உறுதி அளிக்கிறேன்.அங்கு வருபவர்களுக்கு ஈரான் எவ்வளவு பாதுகாப்பான நாடு. அழகானநாடு என தெரிய வரும். தற்போது டெஹ்ரான் டில்லி இடையேயும், டெஹ்ரான்- மும்பை இடையேயும் விமானம் இயக்கப்படுகிறது. வரும் காலங்களில் இரு நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களினின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sakthi G
செப் 15, 2024 00:50

போர் நடக்கும் எந்த ஒரு நாட்டுக்கும் போறது நல்ல ஒரு தீர்மானம் கிடையாது.


Srinivasan Krishnamoorthi
செப் 14, 2024 12:18

ISIS ஆதரவு நிலைப்பாடு இருந்தும் தன நாட்டிற்கு அழைக்கிறார். பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம்? நாட்டில் எப்படி உயிர் பிழைத்த இருக்க முடியும் ?


சமீபத்திய செய்தி