உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோகம் என்ற பெயரில் நகைச்சுவை: ராகுல் மீது பா.ஜ., குற்றசாட்டு

சோகம் என்ற பெயரில் நகைச்சுவை: ராகுல் மீது பா.ஜ., குற்றசாட்டு

புதுடில்லி: '' எல்லையில் உள்ள அப்பாவி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியதை போன்று, பாகிஸ்தான் ராணுவம் நடத்தியதை பெரிய துயரச் செயல் எனக்கூறி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நகைச்சுவை செய்கிறார், '' என பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.ஜம்மு- காஷ்மீரின் பூஞ்சில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, ஏற்பட்ட சேதத்தை பெரிய துயரம் என்று கூறி ராகுல் நகைச்சுவை செய்கிறார். இதனை அவர் நிறுத்த வேண்டும் என பா.ஜ.செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார்.பாக்., அத்துமீறலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க,ஜம்மு காஷ்மீர் சென்ற லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார். அங்கு, வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். அப்போது, அவர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை பெரிய துயரம் என்று விவரித்தார். தேசிய அளவில் அவர்களின் அவல நிலையை எடுத்துரைப்பதாக உறுதியளித்தார்.ராகுல் கூறியது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா கூறியதாவது:எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களில் உப்புத் தேய்த்து, பாகிஸ்தான் செயலை காப்பாற்றுகிறார். லோக்சபா எதிர்கட்சித் தலைவர் என்பதை விட பாகிஸ்தான் பிரசார தலைவர் என்ற வேடத்திற்கு ராகுல் பொருத்தமானவர். பூஞ்ச் பகுதியில் நடந்ததை, துயரம் எனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுத்தால் பயங்கரவாத தாக்குதல்நடத்தியது போல் நடத்திய தாக்குதலை துயரச் செயல் என்பது போல் சொல்கிறார். பயங்கரவாத செயலை துயரச் செயல் என்பது போல் பூசி மறைப்பதில் ஈடுபடுகிறார். எங்களுடைய காயத்தில் உப்பை தேய்த்துவிட்டீர்கள். சோகத்தின் பெயரில் நகைச்சுவை செய்வதை ராகுல் நிறுத்த வேண்டும்.இதற்கு முன்னர், மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பின் போதும் பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நற்சான்றிதழ் வழங்கியது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் என்பது உள்நாட்டில் வளர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் வேலை என்று கூறி காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியிருந்தார். இதுதான் அவர்களது நிலை. இவ்வாறு ஷெசாத் பூனவல்லா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அர்ஜுன்
மே 25, 2025 00:58

ஆம்... இவிங்க பேசினா அது தேஷ்பக்தி. மத்தவங்களுக்கு பங்கு கிடையாது.


Priyan Vadanad
மே 24, 2025 21:38

இந்த நேரத்திலேயும் வெறுப்பு பேச்சுதானா?


Ramesh Sargam
மே 24, 2025 21:31

ராகுல் போன்றவர்கள் இந்தியாவை விட்டு துரத்தப்படவேண்டும்.


முக்கிய வீடியோ