வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆன்லைன் வர்த்தகத்தில் நுகர்வோருக்கு பல நன்மைகள். குறிப்பாக குறைவான விலை மற்றும் வீடு நாடி வரும் பொருள் போன்றவை. ஆன்லைன் வியாபாரிகளுக்கு சேமிப்பை தரும் மிகக்குறைவான வாடகை கட்டணம், மின்சார கட்டணம், குறைந்த பணியாளர் செலவுகள் போன்றவற்றையெல்லாம் நுகர்வோர் மீது கடத்துவதால் உண்மையான விலை குறைப்பு வாங்குவோரை சென்றடைகிறது. இவற்றை பின்பற்ற நடுத்தர மற்றும் சிறிய கடைகளால் நிச்சயம் முடியாது. அவர்களின் வாழ்வாதரமும் பாதுகாக்கப்பட வேண்டும் இதற்கு ஒரே தீர்வு பொருட்களின் விலை நிர்ணயங்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் மறைமுக வரிகளை குறைத்து அதற்கு ஈடாக ஆன்லைன் வர்த்தக வரிகளை விதிக்கலாம். கணக்கு சரியாகிவிடும்.
மந்திரியா இருப்பவர் விஷயம் தெரிஞ்சவரா இருக்கணும்னு கட்டாயம் இல்லை.
சில விஷயங்கள் வளர்சிகள் காலத்தின் கட்டாயம். மந்திரியே இப்படி பேசலாமா என்றால் ? பன்னாட்டு சந்தையில் பங்கு கொண்டுள்ள நாம் எதை தடுக்க முடியும் ? சீனா போல ஒரு கட்சி ஆட்சி இருந்தால் தடுக்கலாம். இல்லை ஜப்பான் போல நாட்டுப் பற்றுடன் இருந்தால் அந்நியர்களின் சதி முறியடிக்கப்படும். பொது மக்கள் தான் இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இப்போது ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு கட்டு கொத்துமல்லி, ஒரு கட்டு புதினா, கடுகு நூறு கிராம் என்று பெண்கள் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். இதை காலாற நடந்து சென்று ஒரு பொட்டிக் கடையில் வாங்கினால் ஆகாதா ? அரசு ஆன்லைனில் வாங்கு என்று கூறுகிறதா ? ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். போராட்டமே நடைபெறும், வழக்குகள் தொடரப்படும். இங்கு எல்லாவற்றுக்கும் எதையும் சிந்திக்காமல் எதிர்க்கும் கூட்டமும், போராடும் கும்பலும் உள்ளதே. அவர்களுக்கு எது நாட்டுக்கு நல்லது, எது கெட்டது என்றெல்லாம் தெரியாது. பாஜகவை எதிர்த்து போராட்டம் செய்ய ஒரு காரணம் வேண்டும். அவ்வளவு தான்.
அமைச்சருடைய அங்கலாய்ப்பு புரியவில்லை. இவர்களே புதுமைகளை கொண்டு வருவார்களாம். வந்த பிறகு இவர்களே கவலைப்படுவார்களாம். இ காமர்ஸ் வணிகம் வந்தது காலத்தின் கட்டாயம். அதனால் சில்லறை வணிகம் சிறிது குறைந்திருக்கலாம். ஆனால் அழிந்து போய்விடவில்லை. என்னைப் போன்றோர் பலர் இரண்டையும் ஆதரித்து வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் சரசமான விலை மிக முக்கியமான ஈர்ப்பு சக்தி. மேலும் நேரம் போக்குவரத்து உடல்சிரமம் மிச்சமாகின்றன. சில பொருட்கள் ஆன்லைனில் மாத்திரம் கிடைக்கின்றன. கடைகளில் சூப்பர் மார்கெட்டுகளில் MRP க்கு குறைவாக விற்பதில்லை. அந்தளவுக்கு அவர்களது லாபநோக்கு உள்ளது. ஆனால் ஆன்லைனில் நிறைய பொருள்கள் கணிசமான குறைந்த விலைக்கு கிடைக்கிறது. வாங்குவோருக்கு எங்கே ஆதாயம் கிடைக்கிறதோ அங்கேதானே போவார்கள். ஓலா யூபர் வருவதற்கு முன்பு ஆட்டோகாரர்களும் டாக்சிகாரர்களும் அநியாமான கட்ணத்தை கேட்டு மக்களை எப்படியெல்லாம் வதைத்தார்கள். முடிவாக consumer is the king என்கிற வசனம் மெய்ப்பட்டால்தான் எந்த வியாபாரமானாலும் நிலைநிற்க முடியும் என்கிற நிலைமை இருந்தால்தான் பொருளாதாரம் முன்னேறும்.
கணினி மயமாக்கம், டிஜிட்டல், யுபிஐ , ஏ.டி.எம் நுட்டு வங்கி வேலைகளை பாதிக்கு மேல் காலியாக்கியாச்சு. இன்னும் வேற இடங்களில் கூடுமான வரை வேலைக்குறைப்பு நடத்தியாச்சு. ஆன்லைனில் தான் விலை.குறைவாத் தர்ரான். லோக்கல் ஆளுங்க கிட்டே காய்கறிகூட வாங்க முடியாம விலை அதிகம். இதுல ஆன்லன்க வாங்காதீங்கன்னு அட்வைஸ்.
Restrict e- commerce. problem solved
தங்கள் வருமானம் போகிறது என்று ஓலா, உபர், பிரைவேட் டாக்ஸியை குற்றம் சொன்ன ஆட்டோக்காரர்கள் ஓலாவில் சேர்ந்து ஆட்டோ ஓட்டுகிறார்கள். ஸ்விக்கி, சொமாடோ வை கேலி செய்தவர்கள் இன்று அவற்றின் மூலமே வாங்கி சாப்பிடுகிறார்கள். இன்று சிறு வணிகர்களே ஆன்லைன் மூலம் வாங்கி லாபம் வைத்து விற்கத்தொடங்கிவிட்டார்கள். போஸ்ட் ஆபீசை சார்ந்திருக்காமல் எவ்வாறு கூரியர் சேவை கட்டாயமாகிப்போனதோ அதே போன்று ஆன்லைன் வர்த்தகம் காலத்தின் கட்டாயம் மாற்றமுடியாது வியாபாரிகள் தங்கள் வியாபார அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் வியாபாரத்தில் காணாமல் போய் விடுவார்கள்.
ஆன்லைனில் பொருட்கள் விற்கப்பட்டால் அதை அரசால் முறையாக கண்காணிக்கமுடியும்....வரி ஏய்ப்பு செய்ய முடியாது....அரசுக்கும் லாபம் ...பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது ..
ஆன்லைன் வணிகம் இரண்டு விசயத்தை ஏற்படுத்தி உள்ளது. 1 உள்ளூரில் அந்த பொருளின் விலையை சந்தேக கண்ணோடு பார்க்க வைத்து விட்டது. கொள்ளையடிக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது. அதன் லாரி வாடகை, வேலையாள்களின் சம்பளம், அந்த பொருளுக்கு செலுத்தும் வரி தனது மாநிலத்திற்கு செல்லும் என்ற உறுதி, உள்ளாட்சி அமைப்புக்கு செல்லும் வரி, விற்பனையாளரின் அனுபவத்தில் நமது தேவை, பட்ஜெட்க்கு ஏற்ற பொருள் எது என்ற குறிப்பு அனைத்து அடங்கி உள்ளது. என்பதை மறக்க வைத்து விட்டது. 2 பொருளை ஆராய்ந்து வாங்கும் பழக்கத்தை விடுத்து, மோதாவி தனமாக பணத்தின் செழிப்பில் வாங்க வைக்கிறது. இதற்கு ஒரே தீர்வு, ஜிஎஸ்டி வரி போல், லாரி பரிமிட் போல், பொருட்களின் அடிப்படையில் இந்த விலைக்கு மேல் உள்ள பொருள்கள், கிடைக்காத இந்த இடங்களில் மட்டும், இந்த மக்கள் தொகைக்கு மேல் உள்ள ஊர்களில் மட்டும் என பல கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். ஜிஎஸ்டி யும் மூன்றாக பிரித்து மத்திய அரசுக்கு, விற்பனையாளர் மாநிலம், பயனாளர் மாநிலத்திற்கு அளிக்க வேண்டும்.
Flipkart, Amaszon, Jio Mart ஆகியோர்களிடமிருந்து கட்டிங் எதிர்பார்க்கிறார் .......
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago