உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய நலன்களை பாதுகாப்பதில் உறுதி: வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டம்

இந்திய நலன்களை பாதுகாப்பதில் உறுதி: வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இந்திய நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கை: சவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒப்பந்தத்தை முறைப்படுத்தும் இந்த முன்னேற்றம் பரிசீலனையில் உள்ளது என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது.நமது தேசிய பாதுகாப்புக்கும், உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ManiMurugan Murugan
செப் 19, 2025 01:09

ManiMurugan Murugan அருமை


Pallava Rajan
செப் 18, 2025 10:58

I think Saudi Arabia is not such a stupid country, to decide that they will go against india, as the business they are getting from india is huge and they will never want to spoil the relation with India.


Karthik Madeshwaran
செப் 18, 2025 10:22

எதிர்வரும் காலத்தில் அனைத்து முஸ்லீம் நாடுகளும் தனியாக ஒரு கூட்டமைப்பை உருவாக்க போகின்றன. அவர்களுக்குள் வர்த்தகம், பாதுகாப்பு போன்றவை முக்கிய காரணிகளாக இருக்கும். இந்தியா தெளிவில்லாத வெளியுறவு கொள்கையால் இந்த பக்கமும் போகாமல், அந்த பக்கமும் போகாமல் மத்தளம் போல இரண்டு பக்கமும் அடிவாங்க இருக்கிறது. எதையும் வரும்முன் காப்பதே சிறந்தது. பாகிஸ்தான் தவிர பிற அண்டை நாடுகள், முஸ்லீம் நாடுகளுடன் இந்தியா நட்பு பாராட்ட வேண்டும். தவறினால் நஷ்டம் நமக்கு தான்.


Arunkumar,Ramnad
செப் 18, 2025 11:46

அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்குள் இந்தனை வருடமாக இல்லாத ஒற்றுமை இந்த பாகிஸ்தான் ஒப்பந்தத்தால் ஏற்பட்டு விடுமா? ஓவரா பில்டப் கொடுக்காத மாதேசு ஒடம்புக்கு ஆகாது...


Karthik Madeshwaran
செப் 18, 2025 10:16

இந்திய வெளியுறவு கொள்கையை சிதைத்த பெருமை இந்த வீணாப்போன பாஜக அரசையே சாரும். எண்ணெய் முதலாளிகள் கொள்ளை லாபம் பெற வேண்டும் என்பதற்காக, அமெரிக்காவை பகைத்து கொண்டு திருப்பூரில் பல தொழில்களை படுகுழியில் தள்ளிவிட்டார்கள். இன்று பலர் கடனாளிகளாக மாறிவிட்டார்கள். மக்கள் வேலை இல்லாமல் நொந்து போய்யுள்ளர்கள். இதற்காக தமிழ்நாட்டில் எதிர்வரும் தேர்தலில் பாஜக கட்சி கட்டாயம் அடிவாங்கும். தற்போதைய இந்திய வெளியுறவு கொள்கை ஒரு தெளிவில்லாத, மதில் மேல் பூனையாக இருக்கிறது. தெளிவான முடிவெடுக்க திராணி இல்லாதவர்களை, பொறுப்பான பதவியில் அமர்த்தியதன் பரிசு தான் இது. வெட்கக்கேடு.


prithvi rajan
செப் 18, 2025 10:29

nee paarthee


ஆரூர் ரங்
செப் 18, 2025 11:31

நகர நக்சல் பிரச்சாரத்தை எதிரொலிக்கிறீர்கள். ரஷ்யாவிடம் ஏராளமான ஐரோப்பிய சீன நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குகின்றன. அவை மீதல்லாம் வரி போட்டு விட்டாரா டிரம்ப்?


சந்திரன்,போத்தனூர்
செப் 18, 2025 11:50

உன்னைப் போன்ற முரசொலி மிலேய்ச்சன்கள் அறிவாலய அடிமையாகவும் கோபாலபுர குடும்பத்துக்கு கொத்தடிமையாகவும் இருப்பதுதான் வெட்கக்கேடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை