உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தரகண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம்

உத்தரகண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம்

டேராடூன்: உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, 2022 சட்டசபை தேர்தலின் போதே, பா.ஜ., வாக்குறுதி அளித்து இருந்தது.

சம உரிமை

இதை தொடர்ந்து, அந்த தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.இந்நிலையில், யு.சி.சி. எனப்படும் பொது சிவில் சட்டம் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின், 2024 மார்ச் 12ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.இந்த சட்டம் உத்தரகண்டில் இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாக, அம்மாநில முதல்வர் தாமி நேற்று அறிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளின் ஒப்புதலை பெறுதல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உட்பட, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து தயாரிப்புகளும் நிறைவடைந்துள்ளன.பொது சிவில் சட்டம் உத்தரகண்டில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டம், சமூகத்தில் சீரான தன்மையை ஏற்படுத்துவதுடன், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை மற்றும் பொறுப்புகளை உறுதி செய்யும்.பொது சிவில் சட்டத்தின் கீழ், ஜாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டும் தனிப்பட்ட சிவில் விவகாரங்கள் தொடர்பான அனைத்து சட்டங்களிலும், ஒரே சீரான தன்மையை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமமான விதிகள்

நாட்டின் முக்கிய நதிகள் உத்தரகண்டில் இருந்து துவங்கி, பிற மாநிலங்களுக்கு பாய்கின்றன. அதே போல, பொது சிவில் சட்டமும் உத்தரகண்டில் துவங்கி பிற மாநிலங்களுக்கு பாய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். பட்டியல் பழங்குடியினத்தவரை தவிர அனைத்து மதம் மற்றும் ஜாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, வாரிசுரிமை உள்ளிட்டவற்றில் ஒரே மாதிரியான, சமமான விதிகளை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.திருமணங்கள் மற்றும் திருமணமின்றி சேர்ந்து வாழ்வதை பதிவு செய்ய வேண்டும் என்பதை இந்த சட்டம் கட்டாயமாக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rajasekar Jayaraman
ஜன 27, 2025 14:45

பாரதம் முன்னேற முதல் படி வரவேற்போம் வெல்க பாரதம்.


govinda rasu
ஜன 27, 2025 11:39

பாரத் மாதாக்கி ஜே


Bahurudeen Ali Ahamed
ஜன 27, 2025 11:27

அது என்னய்யா பட்டியல் சமூகத்தை தவிர, பேரு மட்டும் பொது சிவில் சட்டம்


GMM
ஜன 27, 2025 10:25

பொது சிவில் சட்டத்தில் நிர்வாக குழப்பம் குறையும். வழக்கு குறையும். தேசம் முழுவதும் அவசியம் தேவை. அது போல் குடியுரிமை சட்டம் அவசியம். ஒருவருக்கு அரசின் குடியுரிமை சான்று இல்லையென்றால், குடிமகன் அகதிக்கு சமம். திராவிடம், காங்கிரஸ் எப்போதும் குழப்பம் ஏற்படுத்தும் கட்சியாக செயல்படுகிறது.


A.C.VALLIAPPAN
ஜன 27, 2025 10:13

many times told read read read you dont know tamil and you dont other language


A.C.VALLIAPPAN
ஜன 27, 2025 10:13

படி


Chanemougam Ramachandirane
ஜன 27, 2025 09:39

வணக்கம், வரவேற்கிறேன், முதலில் நிர்வாகத்தை ஜனாதிபதியாகிய மூத்த குடிமகன் அவர்களுக்கு எல்லையில்லா அதிகாரம் உள்ளது. இவர்களே கூட சட்டத்தை இயற்ற பரிந்துரை செய்யலாம் இதுவரை யாரும் இல்லாத சட்டத்தை பரிந்துரை செய்ய முன் வரவில்லை ஆகையால் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தில், மாநிலத்தில் இயற்றிய சட்டங்கள் ஒப்புதல் கொடுத்த சட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று பொது சிவில் சட்டம் உத்திரகாண்டில் ஏற்படுத்தியதை அனைத்து மாநிலங்களுக்கு ஏற்படுத்த சுற்றறிக்கை செய்தாலே போதும். நாட்டின் இறையாண்மையை மனித நேயத்தை பொருளாதார இசபை சீர் செய்ய முன் வரவேண்டும் இது காலத்தின் கட்டாயம் . .


user name
ஜன 27, 2025 09:27

பட்டியல் மற்றும் பழங்குடியினரைதவிர , இதுக்கு பெயர் பொது சிவில் சட்டம் இல்லை ,


ஆரூர் ரங்
ஜன 27, 2025 10:42

பெரும்பாலான பழங்குடிகள் தாய்வழிச் சமூக கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் மீது பொது சிவில் சட்டத்தை திடீரென திணிக்கயியலாது. முழுமையாக தேசீய நீரோட்டத்தில் முழுமையாக இணைய இன்னும் நாளாகும்.


Chanemougam Ramachandirane
ஜன 27, 2025 09:26

பொது சீஸில் சட்டம் என்பது மத்தியில் கொண்டுவரும் சட்டங்கள் எல்லாம் பொது சிவில் சட்டமாகும் அதே போல் ஒவ்வுறு மாநிலத்திலும் ஏற்படும் சட்டங்கள் ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தால் அதுவும் பொது சிவில் சட்டமாகும் இதுவரைக்கும் இதை உணராமல் மத்திய அரசும் மாநில அரசும் ஏன் நீதிமன்றமும் கூட சுற்றறிக்கை மாற்றும் வழி வகை செய்யாமல் மக்களை அலைக்கழிக்கிறது இதில் புதுவையும் ஒன்று புதுவைசுதந்திரம் பெரும் பொழுது தமிசக சட்டங்களை உயர் நீதிமன்றத்தை பின் பற்ற வேண்டும் என்று இருந்ததை நாளடைவில் மாற்றம் செய்து மத்திய அரசின் சட்டங்களை புதுவையை சுற்றி உள்ள மாநிலங்கள் இயற்றி உள்ளதை புதுவை அரசு இயற்றாமல் எந்த சேவையும் மக்களுக்கு அளிக்க முன் வரவில்லை இதில் மட்டும் ஒற்றுமையாக அவர்கள் தேவையை மட்டும் அதிகாரிகள் துணையோடு செய்து கொள்கிறார்கள். சட்டம் சுற்றறிக்கை இருந்தால் வழக்கு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் புதுவை கலெக்டர் எதிராக நில அபகரிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது மேலும் மாதம் தோறும் நடக்கும் புகாரை கடமைக்கு நடத்துகிறார்கள் ஒரு புகார் அந்த அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்று தான் கலெக்டர் வசம் வருகிறது


Barakat Ali
ஜன 27, 2025 08:57

இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுவதே நியாயம் .......


சமீபத்திய செய்தி