உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாண்டியாவில் போட்டி? நிகில் குமாரசாமி அலறல்!

மாண்டியாவில் போட்டி? நிகில் குமாரசாமி அலறல்!

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் இருந்து போட்டியிட மாட்டேன். இதை பலமுறை கூறிவிட்டேன்,'' என, மாநில ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.பெங்களூரு சேஷாத்திரிபரத்தில் உள்ள ம.ஜ.த., அலுவலகத்தில் நேற்று கோலார் மாவட்ட தலைவர்களுடன், நிகில் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி:இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. கோலார் தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.கோலார் தொகுதியில் வெற்றி பெறும் சாத்தியமுள்ள வேட்பாளர் யார் என்பதை அறிய, இக்கூட்டம் நடந்தது. அங்குள்ள மக்களின் கருத்து, அடிப்படை யதார்த்தம் குறித்து தகவல்களை கட்சி சேகரிக்கும்.நல்ல நோக்கத்துடன் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இதை கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா எடுத்துள்ளார். அவர் மீது பிரதமர் மோடிக்கு மரியாதை உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் சகோதரர்கள் போன்று செயல்பட்டு, 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.ம.ஜ.த.,வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது குறித்து விவாதிக்க குமாரசாமியும், கட்சி தலைவர்களும் இம்மாதம் டில்லி செல்ல உள்ளனர். நல்ல செய்தி கிடைக்கும் என நம்புகிறோம்.ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். இன்று ஒருவிதமாகவும், பின் வேறுவிதமாகவும் பேசுபவன் நானல்ல. லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் நான் போட்டியிட மாட்டேன்.தேர்தல் தொடர்பாக இன்று மாண்டியாவில் கூட்டம் நடத்த உள்ளோம். இதில் யார் போட்டியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்படும்.அங்கு யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக மாவட்ட தலைவர்கள், தொண்டர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என தேவகவுடாவும், குமாரசாமியும் தெரிவித்து உள்ளனர்.மாண்டியா லோக்சபா தேர்தலில் ம.ஜ.த., வெற்றி பெறுவது முக்கியம். அடுத்த சில நாட்களில் யார் போட்டியிடுவது என்பது முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை