உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வன்கொடுமை புகார்: வழக்கு பதிய உத்தரவு

பாலியல் வன்கொடுமை புகார்: வழக்கு பதிய உத்தரவு

புதுடில்லி:பாலியல் வன்கொடுமை புகாரில், வழக்குப் பதிவு செய்யுமாறு டில்லி மாநகரப் போலீசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லி நரேலாவில் வசிக்கும் ஒரு பெண், பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:கடந்த ஆண்டு மே 13ம் தேதி ஆறு பேர் என் வீட்டுக்குள் புகுந்து என்னையும் என் குடும்பத்தாரையும் வாளால் தாக்கினர். மேலும் ஆடைகளை கிழித்து பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் குறித்து, நரேலா தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோதி நைன், “வழக்குப் பதிவு என்பது சட்டப்பூர்வமாக விசாரணையை துவங்குவது. குற்றம் குறித்து தகவல்களைப் பெறும்போதெல்லாம் வழக்குப் பதிவு செய்வது போலீஸ் அதிகாரிகளின் கடமை.நரேலா போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை