உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

நீட் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடுகள், மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்து பார்லி., வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு பார்லி., கூட்டத்தொடர் இன்று (ஜூலை 1) கூடுகிறது. அதற்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியினர் போராட்டம் நடத்தினர். நீட் தேர்வு முறைகேடுகள், மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.

வெளிநடப்பு

இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற கூட்டத்தொடரில் இன்று, நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்துமாறு ராகுல் வலியுறுத்தினார். இது பற்றி ராகுல் பேசுகையில், ''பார்லிமென்டில் இருந்து நாட்டுக்கு ஒரு செய்தி பரப்பப்படுகிறது. பார்லிமென்டிற்கு நீட் விவகாரம் முக்கியமானது என்று மாணவர்களுக்கு ஒரு செய்தியை வழங்க விரும்புகிறோம். எனவே, இந்த செய்தியை அனுப்ப இதை விவாதிக்க வேண்டும்,'' என கோரிக்கை விடுத்தார். இதனை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
ஜூலை 01, 2024 16:01

கள்ளச்சாராயாதால் 60 திற்கு மேலும் அதிக உயிரிழப்பு முக்கியமான அதை பத்தி முதலில் பேச வேண்டும் . அதை விட்டு கூத்தா அடிக்கிறீங்க. பிறகு நீட்டய் பற்றை நீட்டி முழக்கலாம். திருடர்கள் கூட்டம் திருடி கொண்டேலாதான் இருக்கும் அதை பார்க்கும் கூட்டம் பார்த்து கொண்டேதான் சும்மா இருக்கும்.


sethu
ஜூலை 01, 2024 14:15

தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுங்கள் அதற்க்கு நாங்கள் துணை நிற்போம் என சொல்ல வக்கில்லாத திருட்டு கும்பல் இது ,இவர்கள்தான் நீட் கொண்டுவந்தார்கள் அப்போது அது உச்சநீதி மன்றத்தை ஏமாற்ற கொண்டுவந்தது ஆனால் மோடி வந்து அதை அமல் படுத்துவார் என இவர்கள் கனவிலும் நினைக்கவில்லை 80 ஆண்டு காலமாக ஏமாற்றிய வாழ்ந்தஇந்த திருட்டு கும்பல் இன்னும் ஏமாற்றநினைப்பது குற்றம் ,


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 13:17

நீட் / யூ ஜி சி முறைகேடுகளில் இதுவரை சிக்கிய பலரில் மார்க்கத்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் .....


Anand
ஜூலை 01, 2024 12:57

நித்தமும் கேன்டீனில் பஜ்ஜி போண்டா தின்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஜென்மங்கள்.


vadivelu
ஜூலை 01, 2024 12:51

இந்த குற்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தூக்கில் போட வேண்டும் என்று உள்ள வேண்டும். வெட்கமாக யில்லையா, எல்லா இடங்களிலும் ஊடுருவ விட்டு விட்டார்களே.


Saai Sundharamurthy AVK
ஜூலை 01, 2024 11:59

Neet UG தாள் கசிவு வழக்கில் Oasis பள்ளியின் முதல்வர் டாக்டர் எசான் உல் ஹக் (Dr.Ehsaan Ul Haq ) மற்றும் ஹஜாரிபாக் பகுதியிலிருந்து துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் (Imtiaz Alam ) ஆகியோரை CBI கைது செய்த பிறகு எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முகாமில் கமுக்கமான அமைதி நிலவுகிறது.....!!!! சிறுபான்மை பாசம் !! தவறு செய்தவர்கள் எந்த பான்மையாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தை திசை திருப்புவதற்காக அல்லது மறைப்பதற்காக நீட் முறைகேடு பற்றி பார்லிமென்டில் விவாதிக்கக் கோரி அமளி செய்கிறார்கள். இந்த முறைகேடு விஷயத்தில், மோடி அரசு மீது களங்கம் சுமத்துவதற்காக சதி வேலையில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களை நேரடியாக சிபிஐ விசாரிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை