உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - டெரரிஸ்தான் இடையிலான மோதல்: ஜெய்சங்கர்

இந்தியா - டெரரிஸ்தான் இடையிலான மோதல்: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரஸ்ஸல்ஸ்: '' இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் இரு நாடுகளுக்கு இடையிலானது அல்ல. அது இந்தியா - 'டெரரிஸ்தான்' இடையிலானது'', என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.பெல்ஜியம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை செயலர் காஜா ஹலாசை சந்தித்து பேசினார். பிறகு அவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.அப்போது, இந்தியா - பாகிஸ்தான்இடையிலான மோதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில் : இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் இரு நாடுகளுக்கு இடைப்பட்டது கிடையாது. இது பயங்கரவாத பயிற்சி மற்றம் மிரட்டலுக்கு அளிக்கப்பட்ட பதிலடி. இதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா அல்லது பாகிஸ்தான் என சிந்திக்க வேண்டாம். இந்தியா - டெரரிஸ்தான் என சிந்திக்க வேண்டும்.அனைத்து வடிவிலும் பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் நாங்கள் புரிந்து கொண்டு உள்ளோம். அணு ஆயுத மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். இது உலகளாவிய சமூகத்திற்கு பகிரப்பட்ட மற்றும் ஒன்றொடு ஒன்று பிணையப்பட்ட சவாலாகும். மேலும் இந்த விஷயத்தில் வலுவான மற்றும் சர்வதேச புரிதலும் இருப்பது கட்டாயம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கண்ணன்
ஜூன் 11, 2025 11:05

பாக்கே டெர்ரிஸ்தான்! அதன் பெயரை மாற்றிவிடலாம்


subramanian
ஜூன் 11, 2025 09:59

எந்த தாக்குதலும் போர் அறிவிப்பு.


Subash Sadasivan
ஜூன் 11, 2025 08:21

It's glad to feel that we have a talented external affairs minister . We proud of you sir Jaishankar


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 11, 2025 07:57

This man is simply super


Kasimani Baskaran
ஜூன் 11, 2025 04:04

பாக்கிகளிடம் கனிவு காட்டுவது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவர்களை பாதுகாக்க பல கேடிகள் இருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை