உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய வரலாற்றின் இருண்ட காலம்; எமர்ஜென்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

இந்திய வரலாற்றின் இருண்ட காலம்; எமர்ஜென்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயமான அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தி, 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அந்நேரத்தில் இந்திய ஜனநாயகத்தையே காங்கிரஸ் அரசு கைது செய்தது போல் இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hwf95i3p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவசர காலத்தின் இருண்ட நாட்களால் பாதிக்கபட்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர வேண்டும். அப்போது தான், 1975-1977ம் ஆண்டு வரை இடையிலான அவமானகரமான காலம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது நான் ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்தேன். ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை அவசர நிலை உறுதிப்படுத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

புரொடஸ்டர்
ஜூன் 26, 2025 09:15

பதினோரு ஆண்டுகள் பாஜக ஆட்சியில் மெழுகுவர்த்தி வெளிச்சமும் இல்லையே


ராஜா
ஜூன் 26, 2025 05:21

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் உங்கள் ஆட்சி மற்றும் தொழில் நிறுவனங்களை அ1அ2 … விற்பனை செய்ததின் மூலம் எமர்ஜன்சி ஆட்சியை விட நாங்கள் கடுமையாக ஆட்சி செய்து வருகிறோம் என்று நிதியமைச்சர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது


J.Isaac
ஜூன் 25, 2025 21:51

ஆங்கிலேய ஆட்சியில் ஒரு இனம், தாங்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் என எழுதி கொடுத்து ஒப்புதல் வாங்கி அவர்களது ஆட்சிக்கு துணை சென்று அனைத்து மக்களையும் ஏமாற்றினார்கள். இப்போதும் அதே இனம் அனைத்து மக்களையும் மீண்டும் அடிமைகளாக முயற்சிக்கிறது


J.Isaac
ஜூன் 25, 2025 21:42

செத்த பாம்பை அடித்து என்ன பிரயோசனம். திறமையற்றவர்கள் தான் மற்றவர்களை குறை சொல்லி கொண்டே இருப்பார்கள். எத்தனை காலம் தான் இதை வைத்து மக்களை ஏமாற்ற முடியும்.


AMMAN EARTH MOVERS
ஜூன் 25, 2025 20:22

பாஜக மற்றும் திமுக ஆட்சியில் எங்களுக்கு இப்பவும் இருண்ட காலம் தான்


Narayanan Muthu
ஜூன் 25, 2025 19:32

பாஜக ஆட்சியின் சாதனைகளை சொல்வதற்கு ஏதுமில்லாமல் ஆண்டுதோறும் அரைத்த மாவையே அரைக்கும் மோடியின் உளறல்.


Ramaswamy Jayaraman
ஜூன் 25, 2025 14:27

. ரயில் வண்டிகள் சரியான சமயத்திற்கு வந்தது. லஞ்சம் வாங்கியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், என்பதுதான் உண்மை. ரவ்டியிசம் செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். Person like me will say that that emergency period was a golden period.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 19:31

இது போன்ற சின்ன விஷயங்களுக்காக தனிமனித சுதந்திரத்தை பறித்தது மட்டமான செயல். அவசர நிலைக்காலத்தில் தனி மனிதனின் உயிர்வாழும் உரிமை RIGHT TO LIVE கூட பறிக்கப்பட்டது. இதனை அப்போதைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் உறுதிப் படுத்தியது. பலர் நிரந்தரமாக காணாமலடிக்கப்பட்டனர். இதற்காகவா 300 ஆண்டுகள் விடுதலைப் போராட்டம் நடத்தினோம்?


அப்பாவி
ஜூன் 25, 2025 12:31

அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லை. ரயில் கரெக்டா ஓடிச்சு. லஞ்சம் வாங்காம அதிகாரிகள் வேலை செஞ்சாங்க. மக்கள் கிட்டே காசு இல்லேன்னாலும் நல்லா இருந்தாங்க. இப்போதான் கோடி கோடியா ஃப்ராடு நடக்குது.


vivek
ஜூன் 25, 2025 13:37

.தமிழ்நாடும் நிதி நெருக்கடி...அப்போ இங்கேயும் ஊழல் தானே


Mettai* Tamil
ஜூன் 25, 2025 13:53

ஆமா தமிழ்நாட்டுல நீங்க சொல்றத விட ரொம்ப மோசம்தான் நடக்குது ...


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 16:34

திருமணமாகாத ஆண்ககளையும் பிடிச்சு கட்டாயக் கருத்தடை செய்தார்கள். டெல்லி துர்க்மேன் கேட்டில் டஜன் கணக்கான இஸ்லாமியர்களை துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்தார்கள்.இலட்சக்கணக்கான அப்பாவிகளை விசாரணையின்றி மிசா சிறைகளில் அடைத்தனர். இந்த உண்மைகளை வெளியிட்ட ஊடகங்கள் முடக்கப்பட்டன. வரலாற்றை மறைக்காமல் எழுதுங்க.


Ramesh Sargam
ஜூன் 25, 2025 12:16

அப்படிப்பட்ட இருண்டகாலம் மீண்டும் இந்தியாவில் வரக்கூடாது. அதற்கு மக்கள் காங்கிரஸ் கட்சியை முற்றிலும் புறக்கணித்து, மோடிஜி தலைமையிலான பாஜக வை ஆதரிக்கவேண்டும்.


மூர்க்கன்
ஜூன் 26, 2025 11:01

பாயின்டுக்கு வந்துட்டாப்ல??


Kulandai kannan
ஜூன் 25, 2025 12:15

ராகுல் ஜனநாயகத்தைப் பற்றி நமக்கு பாடமெடுக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை