உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை இடிப்பார்கள்!: மோடி

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை இடிப்பார்கள்!: மோடி

பாரபங்கி: “காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடித்துவிடுவர்,” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உத்தர பிரதேசத்தில் அமேதி, ரேபரேலி, லக்னோ உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஐந்தாம் கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. அந்த தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:இந்த தேர்தலில், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஒருபுறம், நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய 'இண்டியா' கூட்டணி மறுபுறம் உள்ளன. தேர்தல் ஒவ்வொரு கட்டமாக முடிய முடிய, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல துவங்கி உள்ளனர்.

சிறப்பான நிகழ்வு

இண்டியா கூட்டணி கிச்சடி போன்றது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் ஓட்டுகளை வீணடிக்க வேண்டாம். தற்போது அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு, அதில் இருந்தபடி குழந்தை ராமர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்; இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக உள்ளது. அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், புல்டோசரை அனுப்பி ராமர் கோவிலை இடித்து தள்ளிவிட்டு, குழந்தை ராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்பி விடுவார்கள். எங்கு புல்டோசர் கொண்டு வர வேண்டும்; எங்கு கொண்டு வரக் கூடாது என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

அழித்துவிடுவர்

தேர்தல் முடிந்தபின், இந்த இரு கட்சிகளும், உங்களுடைய சொத்துக்களை எடுத்து, அவர்களுக்காக, 'ஓட்டு ஜிகாத்' செய்தவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள். காங்கிரசும், சமாஜ்வாதியும் ஒரே குணாதிசயம் படைத்தவை; குடும்ப அரசியலை ஆதரிப்பவை. ஊழலுக்காகவே செயல்படும் இந்த இரு கட்சியினரும், ஓட்டு வங்கிக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிவர். குற்றவாளிகள் மற்றும் மாபியாக்களை ஊக்குவிக்கும் அவர்கள், ஆட்சிக்கு வந்தால் சனாதனத்தை அழித்துவிடுவர். இவ்வாறு மோடி பேசினார். பசுக்களை வதை செய்பவர்களை தலைகீழாக கட்டி தொங்க விடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள், எதிர்க்கட்சிகள் மீதான மோடியின் குற்றச்சாட்டு வந்திருப்பதால், உ.பி., அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

sundarsvpr
மே 21, 2024 13:49

ராமர் திருக்கோயில் இடிப்பது நடக்காது என்று திட்டவட்டமாய் கூறிட இயலாது ஒரு கோயில் இடித்தால் நூறு திருக்கோயில் கட்டிட இயலும் என்பதும் மறுப்பதற்கு இல்லை


pushpitha D.
மே 19, 2024 06:48

காங்கரஸ் மெஜாரிட்டியில் வரவாய்ப்பு இல்லை கூட்டாணி உதவி ஆட்சிசெய்யமுடியும் ஆட்சி நிலைக்காது காங்கரஸ் ஆட்சி வந்தால் முதல் வருடம் பிரதமர் ஸடாலின் சனாதானம் ஆட்சி இந்திய இந்து கொவில் இடிக்கபடும் சந்தேகஇல்லை


muthu
மே 19, 2024 00:06

Let PM explain to the voters how bjp is getting money for its expenditures without corruption to get votes


RAMAKRISHNAN NATESAN
மே 19, 2024 12:58

Yes, please explain


vignesh
மே 18, 2024 19:41

மதத்தை வைத்து இப்படி எல்லாம் அரசியல் செய்யக்கூடாது ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் பேசும் பேச்சா இது? இதுக்கும் முட்டு குடுக்க வருவாங்க டா சாமி எலக்சன் கமிஷன் என்ன தான் செஞ்சிட்டு இருக்கோ?


MADHAVAN
மே 18, 2024 17:52

சில்லறைத்தனமான பேச்சு இது


venkat eswaran
மே 18, 2024 20:16

உண்மையை தானே சொல்கிறார்


சோழநாடன்
மே 18, 2024 16:45

கோயிலைக் கட்டியது ஒரு தனியார் அறக்கட்டளை கோயிலை கட்ட இந்தியாவில் உரிமை இருக்கின்றது என்றுதானே கட்டப்பட்டது அதை எப்படி காங்கிரஸ் இடிக்கும் வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் ஈனபுத்தி இந்தியாவில் எந்தக் கட்சிக்கும் இருக்காது.


venkat eswaran
மே 18, 2024 20:17

தமிழகத்தில் கோவில் இடிக்கப்படும் போது தூங்கி கொண்டு இருந்தீரோ சுய சிந்தனை இல்லை


Rengaraj
மே 18, 2024 16:28

பிரதமர் என்றாலும் அவரும் ஒரு அரசியல்வாதிதான் அவர் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிப்பதில்லை காங்கிரஸ் என்ற கட்சியை விமர்சிக்கிறார் எதிர்க்கட்சிகள் என்று ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்கிறார் எதிர்க்கட்சிகள் என்ன பேசினாலும் மோடி அவர்கள் பிரதமர் மாதிரி மட்டுமே இருக்கவேண்டும், அவர் அரசியல் பேசக்கூடாது என்று சட்டமா இருக்கிறது ? நாடு முழுவதும் பாஜ க , தேர்தலில் அவரை முன்னிறுத்தி மட்டுமே பிரச்சாரம் செய்கிறார்கள் ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை மட்டுமே விமர்சித்து வோட்டுப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன கட்சிகள் தங்களது கட்சியின் சித்தாந்த ரீதியாக அவரை எதிர்கொள்ளமுடியவில்லை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மோடியை தவிர யாரும் கண்ணுக்கு தெரிவதில்லை தனிநபர் விமர்சனம், தாக்குதல் அனைத்தும் நீண்டகாலத்துக்கு நன்மையை தராது


அசோகன்
மே 18, 2024 16:12

இவர்கள் ஆட்சியில் மதக்கலவரத்தை 65 ஆண்டுகளாக தூண்டிவிட்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தர்கள்.... தொடர் குண்டுகளை வெடித்து பல ஆயிரம் உயிர்களை காவுகொடுத்து...... அதை படம் எடுத்து பணம் பார்த்த இவர்கள் பேசுகிறார்கள் மோடி மதவாதம் செய்கிறாராம்....... சாத்தான்கள் பல இங்கே வேதம் ஓதுகிறது......


Dharmavaan
மே 18, 2024 16:05

வஞ்சிக்கப்பட்டவர்கள் சார்பில் மோடி உண்மையை பேசுகிறார் கொள்ளை கூட்டத்திற்கு எரிகிறது


sridhar
மே 18, 2024 13:28

ஊருக்கு ஒரு பேச்சு , இடத்துக்கு ஏற்ற அஜெண்டா


SIVA
மே 20, 2024 07:57

இது திராவிட மாடல் அரசியல், இதை பி ஜே பி சரியாக செய்கின்றது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை