உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அண்ணனை எதிர்க்கும் தங்கை!: ஆந்திர காங்., தலைவராக சர்மிளா நியமனம்

அண்ணனை எதிர்க்கும் தங்கை!: ஆந்திர காங்., தலைவராக சர்மிளா நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆந்திராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக, அக்கட்சியில் சமீபத்தில் இணைந்த சர்மிளா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், மாநிலத்தை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன் மோகனின் சகோதரி ஆவார்.ஆந்திர முதல்வரான ஜெகன் மோகனின் சகோதரி ஒய்எஸ் சர்மிளா ரெட்டி, தெலுங்கானா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அவர், கட்சியை காங்கிரசில் இணைத்துக் கொண்டார். லோக்சபா உடன் இணைத்து ஆந்திர மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா மாநிலத்தை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி அடுத்ததாக ஆந்திராவிலும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக உள்ளது.இச்சூழ்நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ருத்ர ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் தலைவராக சர்மிளா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், வரும் நாட்களில் தனது சகோதரர் ஆன ஜெகன்மோகன் ரெட்டியையும், அரசின் செயல்பாடுகளையும் சர்மிளா விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

vbs manian
ஜன 17, 2024 08:51

குடும்பத்தை பிரிப்பதில் காங்கிரஸ் கில்லாடி. இப்போது ரெட்டி குடும்பம்.


Akash
ஜன 17, 2024 02:00

Pasamalar


sankaranarayanan
ஜன 17, 2024 00:33

அப்போ தமிழகத்தில் அடுத்த பாரதிய ஜனதா பார்ட்டி மாநில தலைவர் கனிமொழிக்கு கொடுக்கப்படும் அண்ணாமலை மத்திய அமைச்சகராகிவிடுவார்


Ramesh Sargam
ஜன 16, 2024 23:47

அண்ணனை எதிர்க்கும் தங்கை. அப்பாவை எதிர்க்கும் மகன். கணவனை எதிர்க்கும் மனைவி. இதுதான் அரசியல். அரசியல் என்று வந்துவிட்டால், உற்றார் என்ன, பெற்றோர் என்ன, உறவினர்தான் என்ன? பதவி ஒன்றே குறி. பணம் ஒன்றே குறிக்கோள்.


Bala
ஜன 16, 2024 23:47

திராவிடத் தெலுங்கர்களின் மரபணு குழி பறித்தல் குடும்பத்துக்குள்ளே


sankaranarayanan
ஜன 16, 2024 23:04

இந்தியாவில் அரசியல் குடும்பத்தை பிளவு படுத்துவதே காங்கிரசின் உள் நோக்கம் எங்கு சென்றாமே அங்கு முதலில் குடும்பத்தை பிளவு படுத்தி வாழ்வார்கள் இவர்கள்குடும்பம் எப்படி அய்யா முன்னேறும் கட்சியும் அப்படியேதான்


Barakat Ali
ஜன 16, 2024 21:16

காங்கிரஸ் அல்லது ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் இதுல எந்த கட்சி ஆட்சியில இருந்தாலும் கல்லா கட்டலாம் .......


chenguttuvan
ஜன 16, 2024 19:56

இழுபறியாக வென்று இணைந்தால் ஆட்சி!


ram
ஜன 16, 2024 18:46

இரண்டும் அல்லொலியா, ஹிந்துக்களுக்கு புரிந்தால் சரிதான்


Priyan Vadanad
ஜன 16, 2024 20:13

புரிஞ்சி போச்சி உங்கள் சாணக்யத்தனம்.


rama adhavan
ஜன 16, 2024 17:19

குடும்பம் ஓரு கதம்பம்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ