உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு தான் ஓட்டுப் போடுவேன் எனக் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த காங்., வேட்பாளர்

பா.ஜ.,வுக்கு தான் ஓட்டுப் போடுவேன் எனக் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த காங்., வேட்பாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலுங்கானாவில், பாஜ.,விற்கு தான் ஓட்டுப்போடுவேன் எனக்கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளரால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.தெலுங்கானாவில் வரும் 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நிசாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜீவன் ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார். இவர், அர்மூர் பகுதியில், கட்சியினருடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், சட்டசபை தேர்தலின் போது காங்கிரசுக்கு தான் ஓட்டுப் போட்டேன். ஆனால், எனக்கு வர வேண்டிய பென்சன் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், வரும் தேர்தலில் பா.ஜ.,விற்கு தான் ஓட்டுப் போடுவேன் என்றார். இதனால், கோபமடைந்த ஜீவன் ரெட்டி, அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இந்நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

skv srinivasankrishnaveni
மே 05, 2024 11:59

இதனால் இவன் மனைவிகூட இந்தாளுக்கு வோட்டுப்போடவே மாட்டா பாருங்க அடிவாங்கியவள் திருப்பி வெளுத்திருக்கவேண்டும்


subramanian
மே 04, 2024 22:30

இவர் தேர்தலில் நிற்க வருடங்கள் தடை விதிக்க வேண்டும்


Ramesh Sargam
மே 04, 2024 20:23

காங்கிரஸ்காரர்களை கேட்டால், அவர் செல்லமாக தட்டிக்கொடுத்தார் என்று வாதிடுவார்கள் அவர்களுக்கு பொய் சொல்லவா தெரியாது?


Rajagiri Apparswamy
மே 04, 2024 18:05

சஞ்சய் காந்தி என்று நினைப்பு அவருக்கு போல


GANESUN
மே 04, 2024 17:43

தமிழ் நாட்டிலேயும் மெட்ரோவில் ஒருத்தர் அடிச்சாரு, ஆனா நாங்க அவரதானே ஒட்டு போட்டு ஜெய்க்க வெச்சோம்


krishnamurthy
மே 04, 2024 17:17

உண்மையானால் இவர் உடன் கைது செய்யப்படவேண்டும்


Godfather_Senior
மே 04, 2024 16:25

இதுதான் காங்கிரஸ் என்பதை நிரூபித்துள்ளார் இனி அவர் தோற்பது உறுதியாகிவிட்டது


Ravi R
மே 04, 2024 16:01

இந்த பிரமுகரின் குடிஉரிமை ரத்து செய்யுங்கள்


Palanisamy Sekar
மே 04, 2024 15:51

எவரையும் தொடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது அந்த பெண்ணின் பிரச்சினையை பற்றி பேச வக்கில்லாத இந்த காங்கிரஸ்காரன் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எந்த அளவுக்கு பாஜகவின் செல்வாக்கு பாமரர்களை சேர்ந்துள்ளது என்று பாருங்கள் இதுதான் உண்மையான தற்போதைய நிலைமை இந்த காங்கிரஸ்காரன் அடிக்கின்றார் கூட இருப்பவர்கள் சிரிக்கின்றார்கள் காங்கிரசின் அழிவு இப்படித்தான் தொடருகின்றது


அசோகன்
மே 04, 2024 15:48

திமுக காங்கிரஸ் கட்சிகளின் உண்மை சொருபத்தை இன்னும் புரியாத மக்கள் ???


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி