உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் காங்கிரஸ்; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் காங்கிரஸ்; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'ஜாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது' என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.மஹாராஷ்டிராவில் மும்பை, நாசிக், ஜல்னா, அமராவதி, கட்சிரோலி, புல்தானா, வாஷிம், பண்டாரா, ஹிங்கோலி மற்றும் தானே ஆகிய இடங்களில் அமைந்துள்ள 10 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது தவிர, 7,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.நாக்பூரில் உள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கும், ஷீரடி விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஷீரடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து, சுற்றுலா, தளவாடங்கள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சியை அதிகரிக்கும். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஹிந்துக்களுக்கு இடையே சண்டையை உருவாக்க காங்கிரஸ் எந்த கல்லையும் விட்டு வைக்கவில்லை. ஜாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
அக் 09, 2024 22:55

ஜாதி ரீதியாக மட்டுமல்ல, மத, இன , மொழி அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்துவதில் காங்கிரஸ் கைதேர்ந்தது ......


சாண்டில்யன்
அக் 09, 2024 20:47

Bihar Dalit man assaulted, urinated and spat on for asking his wages. - தி ஹிந்து


பேசும் தமிழன்
அக் 09, 2024 18:27

முதலில் மத வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.... அதன் பிறகு அந்தந்த மதங்களின்.... உட்பிரிவுகளை எளிதாக கணக்கிட்டு கொள்ளலாம்.


SUBBU,MADURAI
அக் 09, 2024 15:47

Media Narratives: Phase 1, Jats are Angry Phase 2, Muslims are Angry Phase 3, Yadavs are Angry Phase 4, Armymen are Angry Phase 5, Pehalwan are Angry Phase 6, Farmers are Angry Phase 7,Party Workers are Angry, Exit Polls, Voters are Angry. Results - Public is happy


SUBBU,MADURAI
அக் 09, 2024 16:14

You're a fool if you think the Modi govt is developing infrastructure in the Kashmir valley to appease Muslims. First of all, Kashmir is a part of India, and it cannot be ignored just because a particular community lives there. By doing so, we would send the message that we don't consider this region as ours. Secondly, the govt is making extra efforts to facilitate army movement, to show the world how different Indian Kashmir is from PoK, among other reasons.


RAMAKRISHNAN NATESAN
அக் 09, 2024 22:57

we would send the message that we dont consider this region as ours ..... well said Subbu ji ...........


சாண்டில்யன்
அக் 10, 2024 09:10

THERE IS ANOTHER STAND/RULE FOR THE NEIGHBOURING TAMILNADU


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை