உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவிலில் காங்., நிர்வாகிகள் வழிபாடு

அயோத்தி ராமர் கோவிலில் காங்., நிர்வாகிகள் வழிபாடு

லக்னோ :உத்தர பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க போவதில்லை என காங்கிரஸ் தலைமை அறிவித்த நிலையில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் நேற்று அங்கு சென்று வழிபட்டனர்.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா ஜன. 22ம் தேதி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.விழாவில் பங்கேற்க நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோருக்கு அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே இந்த விழாவை பா.ஜ. தன் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்ள எண்ணுவதாக காங். உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சித்ததுடன் இதில் தாங்கள் பங்கேற்க போவதில்லை என்றும் சமீபத்தில் அறிவித்தன.இந்நிலையில் மகர சங்கராந்தியான நேற்று உத்தர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். முன்னதாக அவர் சரயு நதியில் புனித நீராடி வழிபட்டார். இதுதவிர அக்கட்சியின் சட்டசபை தலைவர் ஆராதனா மிஸ்ரா அம்மாநில பொறுப்பாளர் தீரஜ் குர்ஜார் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் வந்தனர்.இதேபோல் காங். மூத்த தலைவர்கள் தீபேந்தர் சிங் ஹூடா அவினாஷ் பாண்டே விமானம் வாயிலாக அயோத்திக்கு சென்று ராமர் கோவிலில் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜன 16, 2024 12:29

ஏணி, பானை ரெண்டு சின்னத்திலும் ஒவ்வொரு குத்து. சாமர்த்தியம்????தான்.


Chakkaravarthi Sk
ஜன 16, 2024 09:32

Like feathered birds flock together - in short comment about I.N.D.I.Alliance


VENKATASUBRAMANIAN
ஜன 16, 2024 08:47

இரட்டை வேடம். இதுதான் காங்கிரஸ் மாடல்


vbs manian
ஜன 16, 2024 08:44

ராமர் ஒரு கற்பனை என்று சொல்லிவிட்டு பிராயச்சித்தம் செயகின்றது காங்கிரஸ்.


Sowdarpatti Rayarpadi Ramaswamy
ஜன 16, 2024 07:26

கேரளா வயநாடு தொகுதியில் உள்ள முஸ்லீம் அமைப்புகள் இடது சாரிகளை போல அயோத்தி கோவில் திறப்பு விழா நிராகரிக்க வேண்டும் என காங்கிரஸ் இடம் அறிக்கை கேட்டனர் . இல்லாவிட்டால் ராகுல் காந்திக்கு ஒட்டு போடமாட்டோம் என அறிவித்து விட்டனர். இந்த வயநாடு தொகுதிக்காக இந்தியா முழுக்க பிற தொகுதிகளை பற்றி கவலை படாமல் காங்கிரஸ் மேலிடம் அழைப்பிதழை நிராகரித்தது. இது வடநாட்டு காங்கிரஸ் காரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து விட்டது. அவர்கள் கோவிலுக்கு செல்லவில்லை என்றால் மக்களை சந்திக்கவே முடியாது. எனவே உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் கட்சியையும் மீறி கோவிலுக்கு சென்றதாக தகவல்.


Ramesh Sargam
ஜன 16, 2024 05:59

காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர்களுக்கு ஜனவரி 22 அன்று அந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்று பெரும் ஆசை இருக்கிறது. ஆனால், ஒரு சில தலைவர்களுக்கு பயந்து செல்வதில்லை. அதற்காக அதற்கு முன்பே சென்று தரிசனம் செய்கிறார்கள்.


Kasimani Baskaran
ஜன 16, 2024 05:38

ஒரு பக்கம் தூற்றுவது. மறு பக்கம் சத்தமில்லாமல் தரிசனம். நாடகம் போடுவதில் தீம்காவே இவர்களிடம் தோற்று விடும் போல இருக்கிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை