உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேற வழி தெரியலை! புதுடில்லி சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடும் காங்கிரஸ்

வேற வழி தெரியலை! புதுடில்லி சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடும் காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; புதுடில்லி சட்டசபை தேர்தலில் தனித்து களம் காண்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் புதுடில்லியில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுகளில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி கருத்துகளை வெளியிட்டு வந்தன. கூட்டணி விவகாரத்தில் எழுந்த மோதல் காரணமாக, அடுத்தாண்டு நடக்க இருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஆம் ஆத்மி அறிவித்துவிட்டது. இந் நிலையில் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிடன் கூட்டணி கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறி உள்ளது. இது குறித்து புதுடில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் தெரிவித்து உள்ளதாவது; 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே முதல்வர் யார் பற்றிய முடிவை கட்சி மேலிடம் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். புதுடில்லி சட்டசபையின் தற்போதைய காலம், 2025ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டுவிடும் என்பதால் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. முன்னதாக 43 தேர்தல் பணிக்குழுக்களை பா.ஜ., அறிவித்தது. ஆம் ஆத்மி 11 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது. கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லாத சூழலில் தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

J.V. Iyer
நவ 30, 2024 04:45

அரசியல் கோணங்கி பாப்பு ராவுல் வின்சி இருக்கும்வரையில் பாஜக கவலைப்படவேண்டாம். அவரே பாஜகவுக்கு ஓட்டுக்களை வாரி வழங்குவார்.


பேசும் தமிழன்
நவ 30, 2024 00:02

நீங்கள் எல்லாம் இண்டி கூட்டணியில் ஒற்றுமையாக இருக்கிறீர்கள் ....மக்களாகிய நாங்கள் அதை நம்ப வேண்டும்.


Jay
நவ 29, 2024 22:50

சென்ற முறை காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது. தமிழ்நாட்டில் தேர்தல் வந்த பொழுது திமுக நாடகம் நடத்தி காங்கிரஸ் ஆட்சியை கலைத்து மறு தேர்தலில் வரும்படி செய்தனர், மாபெரும் வெற்றி பெறலாம் என்ற கனவில். ஆனால் அங்கு காங்கிரஸ் தோற்று ரங்கசாமி முதல்வராகிவிட்டார். இந்தக் கடுப்பில் தான் காங்கிரஸ் தனியாக புதுச்சேரியில களம் காண நினைக்கிறார்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
நவ 29, 2024 23:44

காங்கிரஸ் தனியாக போட்டியிடுவது புதுடெல்லியில்.. புதுச்சேரியில் இல்லை....


bharathi
நவ 30, 2024 07:09

news about new delhi..pls read the content before comment


Ramesh Sargam
நவ 29, 2024 22:35

ஆகா நோட்டாவுக்கு இந்தமுறை மாபெரும் வெற்றி கிடைக்கும்.


ஆரூர் ரங்
நவ 29, 2024 21:59

புள்ளி ராஜாக்களின் கதை அல்பாயுசில் முடிந்தது.


Ms Mahadevan Mahadevan
நவ 29, 2024 21:47

இத இத தான் எதிர் பார்த்தேன் . காங்கிரசுக்கு நல்லகாலம் ஆரம்பித்துவிட்டது. ஜெய் ஹிந்த்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை