வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதுல ஜிஎஸ்டி சேர்க்கவும். மொத்தத்தில் மக்களுக்கு ஓசியும் கொடுப்போம், ஒழித்தும் கட்டுவோம்
சாவடிக்குறாங்க காங்கிரஸ்
மேலும் செய்திகள்
மின் கட்டண உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு
21-Mar-2025
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்; 200 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்தினால் இலவச மின்சாரம்; பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை.அன்னபாக்யா திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி; வேலையில்லா பட்டதாரி வாலிபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை என்று, ஐந்து வாக்குறுதி திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்காக ஆண்டிற்கு 56,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. வாக்குறுதி திட்டங்களுக்கு பணம் கொடுப்பதால், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் அரசு திணறுகிறது. வாக்குறுதி திட்டங்கள் மூலம் கர்நாடக அரசின் கஜானா காலியாகி விட்டதாக, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால், இதை அரசு மறுத்து வருகிறது. ஓய்வூதியம்
கடந்த 7ம் தேதி முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த, 2025 - 2026ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வளர்ச்சி பணிகள், பல்வேறு துறைகளுக்கு 4.09 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். மாநிலத்தின் நிதி நிலை நன்றாக இருப்பதாகவும் கூறினார்.இந்நிலையில், கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், '2025 - 2026ம் ஆண்டிற்கான மின் கட்டணம் 1 யூனிட்டிற்கு 36 பைசா; 2026 - 2027ம் ஆண்டிற்கு 35 பைசா; 2027 - 2028ம் ஆண்டிற்கு 34 பைசா உயர்த்தப்படும்' என கூறியிருந்தது.கர்நாடக மின் பகிர்மான கழகம், 'ஹெஸ்காம்' ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சுமையாக அரசு சார்பில் 4,651 கோடி ரூபாய் செலுத்தப்பட வேண்டி உள்ளது. இந்த பணத்தை அரசிடம் இருந்து வசூலிக்காமல், பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் நோக்கில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். 36 பைசா உயர்த்துவதன் மூலம் 2,812 கோடி ரூபாய்; 35 பைசா உயர்த்துவதன் மூலம் 2,845 கோடி ரூபாய்; 34 பைசா உயர்த்துவன் மூலம் 2,860 கோடி என, மூன்று ஆண்டுகளில் 8,517 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைகள், தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. சொத்துக்களை பதிவு செய்வதற்கு 600 சதவீதம்; வாகன பதிவு 10; மருத்துவமனை சேவை 5; கல்லுாரி கட்டணம் 10; மெட்ரோ ரயில் கட்டணம் 50; மின்சார வாகன வரி 10; குடிநீர் கட்டணம் 30; சொத்து வரி 25; மதுபானம் 45; பால் விலை 15; பஸ் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து, அத்திவாசிய பொருட்களின் விலை உயர்வது, மாநில மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. வாக்குறுதி திட்டங்கள் என்ற பெயரில், ஒரு கையால் பணம் கொடுத்து விட்டு இன்னொரு கையால் பணத்தை பறிக்கின்றனர் என்றும், மக்களிடம் இருந்து குமுறல்கள் கேட்கின்றன.தற்போது, 1 யூனிட் மின்சார கட்டணம் 5 ரூபாய் 90 காசாக உள்ளது. யூனிட்டிற்கு 36 பைசா உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம், மின் கட்டணம், 6 ரூபாய் 26 பைசாவாக உயர்ந்து உள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மின் கட்டண உயர்வுக்கு ஆதரவாக, காங்கிரஸ் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுல ஜிஎஸ்டி சேர்க்கவும். மொத்தத்தில் மக்களுக்கு ஓசியும் கொடுப்போம், ஒழித்தும் கட்டுவோம்
சாவடிக்குறாங்க காங்கிரஸ்
21-Mar-2025