காங்., எம்.பி., சசி தரூர் அரசுக்கு ஆதரவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இதற்கு மத்திய அரசே பொறுப்பு என்றும் கூறுகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சசி தரூர் கூறியுள்ளதாவது:பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. ஆனாலும், உடனடியாக இதற்கு மத்திய அரசை பொறுப்பாக்கக் கூடாது.உதாரணத்துக்கு மேற்காசிய நாடான இஸ்ரேலை எடுத்துக் கொள்ளலாம். உலகின் மிகச் சிறந்த உளவு அமைப்பு கொண்டதாக இஸ்ரேல் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்த நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.அந்த நாட்டு மக்கள் உடனடியாக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பவில்லை. அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.எந்த ஒரு நாட்டிலும் உளவு தகவல் என்பது, 100 சதவீதம் கிடைப்பதற்கு சாத்தியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.