உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஒரு தொகுதிக்கு கூட காங்., தகுதியில்லை: ஆம் ஆத்மி கொடுத்த அடுத்த அதிர்ச்சி

டில்லியில் ஒரு தொகுதிக்கு கூட காங்., தகுதியில்லை: ஆம் ஆத்மி கொடுத்த அடுத்த அதிர்ச்சி

புதுடில்லி: டில்லியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை. ஆனால், கூட்டணி தர்மத்திற்காக அக்கட்சிக்கு ஒரு தொகுதி வழங்க தயாராக உள்ளதாக ஆத்மி கட்சியின் எம்.பி., சந்தீப் பதக் கூறியுள்ளார்.பா.ஜ.,வுக்கு எதிராக அமைந்துள்ள இண்டியா கூட்டணியில் அதில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என திரிணமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் அறிவித்தார்.இந்நிலையில், டில்லியில் தொகுதி பங்கீடு குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சந்தீப் பதக் கூறியதாவது: டில்லியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. ஆனால், கூட்டணி தர்மத்திற்காக ஒரு தொகுதி வழங்க தயாராக உள்ளோம். டில்லியில் ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் திட்டத்தை முன்மொழிந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பேசும் தமிழன்
பிப் 14, 2024 08:16

மம்மி.... என்ன மம்மி ஆம் ஆத்மி பார்ட்டி இப்படி நம்மை கேவலப்படுத்தி வருகிறது ??? பேசாமல் நாம் தனியாக தேர்தலில் நிற்கலாமா???.... என்ன செய்ய மகனே..... இப்போதெல்லாம் காந்தி என்று போலி பெயரை வைத்து ஓட்டு கேட்டு போனாலும் யாரும் ஓட்டு போடுவதில்லை.... தனியாக நின்றால் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை உள்ளது... மானம் போய் விடும்.... அதனால் கொடுப்பதை வாங்கி கொண்டு.... சத்தம் போடாமல் இருக்க வேண்டியது தான் !!!!


பேசும் தமிழன்
பிப் 14, 2024 08:07

டில்லியிலும் இத்தாலி கான் கிராஸ் புட்டு கொண்டு விட்டதா ???


Jayaraman Pichumani
பிப் 13, 2024 22:41

டெல்லி மட்டுமல்ல இந்தியாவின் 543 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் தகுதியில்லை.


Jayaraman Pichumani
பிப் 13, 2024 22:40

Delhi mattumalla,


A1Suresh
பிப் 13, 2024 19:39

உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், பீஹார், மத்தியபிரதேசம், காஷ்மீர், கர்நாடகா, உத்தராஞ்சல், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அனைத்து தொகுதிகளையும் எங்கள் பாஜக வெல்லும்.


வீரா
பிப் 13, 2024 21:47

ராஜஸ்தான், சட்டிஸ்கர், ஜார்கண்ட், அசாம், பீகார், உபி, உதர்கண்ட், டெல்லி, ஹரியனா, கர்நாடகா,கோவா, ஹிமாச்சல், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 98 ம் ஒரிசா / பெங்கால் போன்ற மாநிலங்களில் 50ம் வென்று பிஜேபி மீண்டும் சரித்திரம் படைக்கும். ஆந்திராவில் கூட்டணி அமைந்தால் இந்தியா முழுவதும் 400 இடங்களில் தேசிய கூட்டணி நிச்சயம் வெல்லும்.


Seshan Thirumaliruncholai
பிப் 13, 2024 19:06

கூட்டணியில் காங்1.1.thaகிரஸ் இல்லை என்பது நிசர்சன உண்மை. காங்கிரஸ் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும். தனித்துபோட்டியிடவேண்டும். அல்லது தேர்தலில் ஒதுங்கி கட்சியை பலப்படுத்தவேண்டும். பலம்வாய்ந்த பி ஜெ பி இடம் தோற்பது இழுக்கு இல்லை. கூட்டணியில் கிடைக்கும் அவமானம் கீழ்தரமானது. மக்கள் விருப்பத்திற்கு விடுங்கள்.


K.Ramakrishnan
பிப் 13, 2024 18:18

அந்த தொகுதியில் ஜெயித்தால் கூட விலை போய் விடுவார்கள். ஒரு சீட்டை வீணாக்க வேண்டாம்.


jayvee
பிப் 13, 2024 16:57

அதைவிட அதிர்ச்சி.. இந்த முறை அணைத்து தொகுதிகளிலும் BJP தான் வெல்லும் என்பது.. இதில் AAP என்ன காங்கிரஸ் என்ன .. எல்லாம் ஒரே குப்பைதான்


duruvasar
பிப் 13, 2024 16:25

இன்னும் இந்த காங்கிரெஸ்ஸை கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருப்பது ஒரு சுயமரியாதை கிடையாது


duruvasar
பிப் 13, 2024 16:22

நியாயத்தை தேடி ஓடிக்கொண்டிருப்பவரின் கட்சிக்கு இப்படி ஒரு அநியாயமா ?


பேசும் தமிழன்
பிப் 14, 2024 08:11

அநியாயம் செய்வது எல்லாம் அந்த கட்சி தான்... எப்போது பார்த்தாலும் தேச விரோத.... தீவிரவாத கும்பலுக்கு ஆதரவான பேச்சு தான் பேசுவார்கள் !!!


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை