உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்; பேனர் வைத்து காங்., சேட்டை

காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்; பேனர் வைத்து காங்., சேட்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெலகாவி : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெலகாவி காங்கிரஸ் மாநாட்டின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காக காங்கிரஸ் சார்பில் பெலகாவியில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்களில் காஷ்மீர் பகுதிகள் நீக்கப்பட்ட இந்திய வரைபடத்தை பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது இங்கு உள்ள பெலகாவியில் 1924 டிசம்பரில் மஹாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அவர் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பெலகாவி மாநாட்டின் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில் இரண்டு நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காங்., தேசிய செயற்குழுக் கூட்டமும் நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கட்சியின் குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகள் குறித்து இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களை வரவேற்க கட்சியினர் சார்பில் சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் காஷ்மீரின் சில பகுதிகள் நீக்கப்பட்ட இந்திய வரைபடத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக பா.ஜ., வெளியிட்டுள்ள அறிக்கை:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு வழங்க விரும்புகிறது. 'காந்திய இந்தியா' என்ற பெயரில் காங்கிரசார் இந்திய வரைபடத்தை சிதைத்தது நாட்டுக்கு செய்துள்ள துரோகம்.தனிப்பட்ட சுயலாபத்திற்காகவும், தாஜா செய்யும் அரசியலுக்காகவும் எந்த விதமான மோசமான வேலையையும் செய்ய காங்கிரஸ் தயாராக உள்ளது என்பதற்கு பெலகாவியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களே சாட்சி.இந்த சர்ச்சைக்குரிய பேனர்களை உடனடியாக அகற்றி, இந்திய வரைபடத்தை சிதைத்த துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளக்க வேண்டும்

இதுகுறித்து பா.ஜ., - எம்.பி., சுதன்ஷு திரிவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''காங்கிரஸ் பயன்படுத்தும் இந்திய வரைபடத்தில் மட்டும் ஏன் சில பகுதிகள் துண்டாகின்றன. ''சுதந்திர காஷ்மீர் கருத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் ரகசிய அமைப்பில் இருந்து காங்கிரசுக்கு ஏதேனும் சிக்னல் கிடைத்ததா? இது வெறும் தற்செயலானதா அல்லது இந்தியாவுக்கு எதிரான சதியின் ஒரு பகுதியா என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்,'' என்றார்.இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் காங்கிரஸ் மறுத்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீநிவாஸ் கூறுகையில், “பெலகாவியில் வைக்கப்பட்ட பேனர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பேனர்கள் அல்ல. ''அது தொண்டர்களால் வைக்கப்பட்டவை. அதனால் தவறு நடந்திருக்கலாம். இந்த சர்ச்சையை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கிளப்பியுள்ளது. இதை வைத்து பொய் பிரசாரம் செய்கின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

ram
டிச 27, 2024 19:04

இதுலேருந்து என்ன தெரியுது.. காங்கிரஸ் கட்சி ஒரு தேச துரோக கட்சிதானே... ஏன் இவங்களை நாட்டை விட்டே விரட்டக்கூடாது..


என்றும் இந்தியன்
டிச 27, 2024 17:02

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தம் கலங்கிய ராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கின்றது


என்றும் இந்தியன்
டிச 27, 2024 17:01

மிக மிக மோசமான ஆட்சி நடத்துகின்றார் மோடி-பிஜேபி. நான் பிரதிமாறக் இருந்திருந்தால் - தவறு கண்டேன் சுட்டேன், சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம் - சட்டம் எப்போதோ கொண்டு வந்திருப்பேன். முஸ்லிம்கள் தவறு செய்தால் அவர்களை மன்னிக்கவேண்டும் - காந்தி, அந்த மாதிரி ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.


Muralidharan S
டிச 27, 2024 16:07

கான் -கிராஸ் இல்லாத இந்தியாவாக ஆகவேண்டும். இந்த இத்தாலிய கான்-cross காரார்கள் ஊழல்கள் நிரூபிக்கப்பட்டு, இவர்கள் ஆயுள் முழுவதும் சட்டப்படி சிறையில் கழிக்க வேண்டும். தமிழகமும் திரவிஷ கட்சிகள் இல்லாத மாநிலமாக மாறி சுபிக்ஷம் அடைய வேண்டும்.


SIVA
டிச 27, 2024 15:15

அவங்க கிட்ட கர்நாடக இல்லாத வரைபடத்தை கொடுத்தால் கூட கண்டு பிடிக்க தெரியாது, பிஜேபி இந்த ஆல் இந்தியா பி டீம் இந்த அல்லக்கை காங்கிரஸ் , பி ஜே பி நல்ல பெயர் வாங்கவதற்காக இவர்கள் கட்சி நட டித்துகின்றார்கள் .....


jayvee
டிச 27, 2024 15:08

பாரத வரைபடத்தை பற்றிய அறிவே இல்லாத இவர்களுக்கு நாட்டை ஆள ஆசை.. கேவலம்


ram
டிச 27, 2024 12:08

இந்த திருட்டு இத்தாலி காங்கிரஸ் எதோ போராட்டத்தை தூண்ட போறானுக, மத்திய அரசு கொஞ்சம் ஜாக்கிரதை இருப்பது நல்லது.


Kumar Kumzi
டிச 27, 2024 11:03

இந்த தேசத்துரோகிகளை உடனடியாக கைது செய்து இத்தாலிக்கு நாடு கடத்தணும்


Sakthi
டிச 27, 2024 10:01

இந்த கொதடிமைகளை எங்க இந்த பக்கம் காணோம்


Anonymous
டிச 27, 2024 09:55

இப்படிபட்ட கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள் இன்னும் இந்த நாட்டில் இருக்கிறார்களே? அது தான் மிகவும் வேதனையான விஷயம்.


சமீபத்திய செய்தி