உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா, காஷ்மீரில் காங்., ஆட்சி?

ஹரியானா, காஷ்மீரில் காங்., ஆட்சி?

புதுடில்லி : ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில், செப்., 18, 25 மற்றும் அக்., 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஹரியானாவுக்கு ஒரே கட்டமாக நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

கூட்டணி முறிவு

இதையடுத்து, பல்வேறு தனியார், 'டிவி' சேனல்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்று மாலை வெளியிட்டன. இவற்றில், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என, பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்றும், பா.ஜ., அதற்கு பலத்த போட்டியாக இருக்கும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன. இதனால், ஜம்மு - காஷ்மீரில் தொங்கு சட்ட சபை அமைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சில கணிப்புகள் தெரிவித்துள்ளன. முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்து, காஷ்மீரில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியும்.ஜம்மு - காஷ்மீரில் கடைசியாக, 2014ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது மாநிலமாக அது இருந்தது. தேர்தலுக்குப் பின், பா.ஜ., மற்றும் பி.டி.பி., கூட்டணி ஆட்சியை அமைத்தன. கடந்த 2018ல் கூட்டணி முறிந்ததால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமலானது. இதற்கிடையே, 2019ல் சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வுக்கு எதிராக, 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சி, பி.டி.பி., ஆகியவையும் இணைந்தன. கூட்டணி அமைத்தே லோக்சபா தேர்தலையும் இந்த மூன்று கட்சிகளும் சந்தித்தன.அதே நேரத்தில், 90 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கான தேர்தலின்போது, கூட்டணி அமைப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்தன. பி.டி.பி.,யும், பா.ஜ.,வும் தனித் தனியாக களமிறங்கின.

ஹரியானா

ஹரியானாவில் 2014 சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. அதுவரை பெரிதும் அறியப்படாத மனோகர் லால் கட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019 சட்டசபை தேர்தலின்போது அதிக இடங்களில் பா.ஜ., வென்றது; ஆனாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி., எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ., ஆட்சி அமைத்தது.மாநிலத்தில் பா.ஜ., மீது, குறிப்பாக முதல்வர் மனோகர் லால் கட்டார் மீது பெரும் அதிருப்தி இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பான போராட்டம் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.இதற்கிடையே, இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், மார்ச் 12ல் ஆளும் கூட்டணி முறிந்தது. அதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து மனோகர் லால் கட்டார் விலக, புதிய முதல்வராக நாயப் சிங் சைனி நியமிக்கப்பட்டார்.

ஓட்டு எண்ணிக்கை

இருப்பினும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. முந்தைய தேர்தலில், மொத்தமுள்ள 10 லோக்சபா தொகுதிகளிலும் வென்ற பா.ஜ., ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் ஐந்து இடங்களில் வென்றது.இந்த அரசியல் சூழ்நிலையில், 90 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், 60 சதவீத ஓட்டுகள் பதிவாகின. முந்தைய தேர்தலில், 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் அனைத்தும், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கூறுகின்றன. பா.ஜ.,வுக்கு இரண்டாவது இடம் கிடைக்கும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.இந்த இரண்டு சட்டசபைகளுக்கான தேர்தலில் பதிவான ஓட்டுகள், நாளை மறுதினம் எண்ணப்பட உள்ளன.

கணிப்புகள் கூறுவது என்ன?

ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தொடர்பாக, தனியார் 'டிவி' சேனல்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் விபரம்:மொத்த தொகுதிகள் 90பெரும்பான்மை 46ஹரியானாநிறுவனம் பா.ஜ., காங்.,+ ஜே.ஜே.கே.,+ ஐ.என்.எல்.டி.,+துருவ் 27 54 1 1மேட்ரைஸ் 18 - 24 55 -- 62 0 - 3 3 - 6தைனிக் பாஸ்கர் 19 - 29 44 - 54 0 - 1 1 - 5பி - மார்க் 31 56 0 0பீப்பிள்ஸ் பல்ஸ் 24 49 1 0ஜம்மு - காஷ்மீர்நிறுவனம் பா.ஜ., காங்.,+ பி.டி.பி., சுயேச்சைதைனிக் பாஸ்கர் 20 - 25 35 - 40 4 - 7 12 - 16குலிஸ்தான் 28 - 30 31 - 36 5 - 7 19 - 23சி - வோட்டர் 27 - 32 30 - 48 6 - 12 6 - 11பீப்பிள்ஸ் பல்ஸ் 23 - 27 46 - 50 7 - 11 6 -10

கணிப்புகள் கூறுவது என்ன?

ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தொடர்பாக, தனியார் 'டிவி' சேனல்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் விபரம்:மொத்த தொகுதிகள் 90பெரும்பான்மை 46ஹரியானாநிறுவனம் பா.ஜ., காங்.,+ ஜே.ஜே.கே.,+ ஐ.என்.எல்.டி.,+துருவ் 27 54 1 1மேட்ரைஸ் 18 - 24 55 -- 62 0 - 3 3 - 6தைனிக் பாஸ்கர் 19 - 29 44 - 54 0 - 1 1 - 5பி - மார்க் 31 56 0 0பீப்பிள்ஸ் பல்ஸ் 24 49 1 0ஜம்மு - காஷ்மீர்நிறுவனம் பா.ஜ., காங்.,+ பி.டி.பி., சுயேச்சைதைனிக் பாஸ்கர் 20 - 25 35 - 40 4 - 7 12 - 16குலிஸ்தான் 28 - 30 31 - 36 5 - 7 19 - 23சி - வோட்டர் 27 - 32 30 - 48 6 - 12 6 - 11பீப்பிள்ஸ் பல்ஸ் 23 - 27 46 - 50 7 - 11 6 -10


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 06, 2024 22:34

ஜெலுசில் மற்றும் பர்னால், தள்ளுபடி விலையில் கிடைக்க அணுக வேண்டிய முகவரி.


nagendhiran
அக் 06, 2024 19:22

வாக்குக்காக எதையாவது இலவசம்"தந்து மக்களை கவறுவது"பாஜக திட்டம் கிடையாது? ஆட்சியே போனாலும் சில தீர்திருங்கள் மேற்கொள்வதுதான் பாஜக? இப்ப புரியாது? ஹரியானா பட்டாதான் புரியும்?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 06, 2024 21:15

அறிவாலோய் காங்கிரஸ் 2000 என்றால் 2100 தருவேன் என்றது பா.ஜ.,கட்சி , உங்களுக்கு என்ன கவலை MLAக்களை விலைக்கு வாங்க PMCARE,ELECOTRALBOND பணம் இருக்கே.


Sck
அக் 06, 2024 16:55

மெதுவாக, ஆனால் ஆணித்தரமாக இந்திய வாக்காளர்கள் ஆளும் கட்சிகளுக்கு (சமீபகாலமாக பஜகவிற்கு) மிக துல்லியமாக எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். பஜக இதை உற்று பார்த்து தன் வழக்கமான தகிடுதத்தங்களை மாற்றி கொள்ளாவிட்டால் 2029ல் ஆட்சியை தக்க வைத்து கொள்வது கடினமே. தாங்கள் முன்னெடுத்த சிறப்பான முடிவுகள் (அ.370 உள்பட) தங்களுக்கு எதிராக திருப்பி ஒட்டுக்களை பெற்ற எதிர்கட்சிகளின் சாதுரியத்தை முறியடிக்க தவறியது எப்படி என்று பரிசலிக்க தவறியது எப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே நாடு ஒரே வாக்கு போன்ற முடிவுகளை சற்றே தள்ளி வைப்பது நல்லது. அதே போல் கட்சிகளை பிளந்து தான் ஆட்சி பிடிப்பது பிஜேபிக்கு அழகல்ல, தவிர்ப்பது நல்லது. அசிங்கமாக இருக்கிறது.


vejai
அக் 06, 2024 23:59

அசிங்கமா இருக்கு


Sakthi
அக் 06, 2024 16:08

ஹரியணவுக்கும் உங்களுக்கும் என்னடா சம்பந்தம். அது அவனுக ஸ்டேட் பிரச்சினை. அந்த மக்கள் ரியாக்ட் பண்ணனும். 4 வருசமா இங்க ஒரு மூட கூட்டம் அராஜகம் ஆட்சி பண்ணிட்டு இருக்கு. அதுக்கு வழி பாருங்கட தம்பிகளா


Oviya Vijay
அக் 06, 2024 12:00

பகுத்தறிவு என்பதே இல்லாத சங்கிகள் இங்கே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது குதூகலமாக உள்ளது. பிஜேபி ஆட்சியில் நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது. மத வன்முறைகள் தலை தூக்கி இருக்கிறது... இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பிஜேபியை பகுத்தறிவு மிக்க மக்கள் விலக்கி வைக்க ஆரம்பிக்கிறார்கள்... மகிழ்ச்சி.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 06, 2024 13:06

இதென்ன நியாயம் ????


Senthilkumar
அக் 06, 2024 11:52

Modi government has to concentrate on local politics more than international, else slowly congress will root in all the states, that will bring the dark age again, that will be the end to the modern India dream.


Kasimani Baskaran
அக் 06, 2024 09:48

காங்கிரஸ் கூட்டணி தீம்க்கா பாணியில் பொய் சொல்லி இருக்கிறார்கள். பொய்க்கு உண்மையை விட வரவேற்பு அதிகம் இருப்பதால் காங்கிரஸ் இந்த மாநிலங்களில் ஜெயிக்கலாம். ஆனால் கர்நாடகா போல மாநிலம் திவாலாக்கப்படும். பலமில்லாத காங்கிரஸ் தலைமை இந்த மாநில உறுப்பினர்களை / ஆட்சியாளர்களை தக்கவைக்க அடுத்த தேர்தலில் தலைகீழாக நிற்க வேண்டும்.


vijay
அக் 06, 2024 08:04

உனக்கு தெரியுமா? எப்போ பாஞ்சி லட்சம் போடுவோம்னு சொன்னாங்க. ஓவியா நடிச்ச "மூடர் கூட்டம்" என்ற பேருள்ள படம் வந்துச்சு. அதுல முதல் வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? அந்த ம்மாதிரி ஆட்கள் யார் தெரியுமா? ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஏன் பாஞ்சி லட்சம் கேட்பது இல்லை?. ஏன்னா, அப்படி பாஞ்சி லட்சம் போடுவேன்னு சொல்லவே இல்லை. அடிப்படை அறிவு தேடிபார்த்தல் இதெல்லாம் செய்யாத வெங்காயங்கள் கருத்து மட்டும் போடுவாங்க. அப்போ மோடி 15 லட்சம் போடுவோம்னு சொன்னாருன்னு ஆதாரம் காட்டு. பப்பு சொல்லுச்சு பருப்பு சொல்லுச்சு என்று உளறாதே. மோடி சொன்னது, "...வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணம் எவ்வளவு என்றால், கருப்பு பணத்தை இந்தியா கொண்டுவந்தால் ஒவ்வொரு நபரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடும் அளவுக்கு அதிகமான கறுப்புப்பணம் பதுக்கபட்டுள்ளது...". என்பதைத்தான் பொய் சொல்லி ஏமாற்றி ஜெயித்து எதிர்க்கட்சி தலைவரான பிறகும் வெளிநாடுகளில் இந்தியாவை பற்றி தவறாக பேசிவரும் இழிபிறவி


abdulrahim
அக் 06, 2024 10:01

யாரு இழி பிறவி ?


Bahurudeen Ali Ahamed
அக் 06, 2024 18:28

சகோதரா உங்கள் கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும், வெளிநாட்டில் இருக்கும் எல்லா கருப்புப்பணத்தையும் மீட்ட கொண்டு வந்தாச்சா.


yts
அக் 06, 2024 07:58

அப்புச்சாமி இதுக்கு தான் ஹிந்தி கத்துக்கோங்க எப்ப ஆளுக்கு 15 லட்ச ரூபாய் போடுகிறேன் என்று மோடி சொன்னாரு


ராமகிருஷ்ணன்
அக் 06, 2024 07:51

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதம் முழுவதும் ஒடுக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தி இருக்கலாம். அதுவரை ஜனாதிபதி ஆட்சி என்ற பெயரில் இராணுவ ஆட்சி தான் அங்கு சரியா இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை