உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய காங்., ரகசிய திட்டம்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய காங்., ரகசிய திட்டம்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ‛‛ எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடம் ரகசிய திட்டம் வைத்துள்ளதாக'' பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நன்துர்பர் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சி விவகாரத்தில் மோடியுடன் போட்டி போட முடியாது என தெரிந்து கொண்ட காங்கிரஸ், இந்த தேர்தலில் பொய் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளது. மத ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது. அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களின் முதுகில் குத்துவது போல் ஆகும். இது பெரிய பாவச்செயல்.எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்கு வழங்க மாட்டோம் என எழுதி கொடுக்க முடியுமான காங்கிரசுக்கு சவால் விடுத்தேன். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை. எனது சவால் குறித்து காங்கிரஸ் மவுனம் காப்பது என்பது அவர்களிடம் ரகசிய திட்டம் உள்ளது என்பதை காட்டுகிறது. ராமரின் நாட்டில், ராமர் கோவிலை தேச விரோதம் என்கிறார்கள். இது தான் காங்கிரசின் மனநிலை. சமரச அரசியலுக்காக பயங்கரவாதிகளின் கல்லறையை அழகுபடுத்துபவர்கள், நமது ராமரையும், அவரது கோவிலையும், அங்கு செல்பவர்களையும் தேச விரோதிகள் என்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ES
மே 10, 2024 22:44

Everything he speaks is a lie to divert from real problem. Done nothing for people in ten years


தாமரை மலர்கிறது
மே 10, 2024 20:41

இடஒதுக்கீடை காங்கிரஸ் அதிகரிக்கும் இடஒதுக்கீடை ஒழிக்க, காங்கிரெஸ்ஸை முதலில் ஒழிக்கவேண்டும்


Syed ghouse basha
மே 10, 2024 18:58

இவரை போன்று பொய் பேசும் பிரதமரை நாடு கண்டதில்லை கோயாபல்ஸ் நினைவுக்கு வருகிறார்


MADHAVAN
மே 10, 2024 17:25

மிகவும் பயத்தில் இருக்க போலிருக்கு


Velan Iyengaar
மே 10, 2024 14:59

பிரச்சாரம் செய்யும் முறை ஒன்றை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது அது அப்பட்டமான தோல்வி பயம்


ஆரூர் ரங்
மே 10, 2024 15:17

ராகுலும் அவரது ஆலோசகர் சாம் பிட்ரோடா, மணிசங்கர் அய்யர், ஸ்டாலின் உதயா போன்றவர்களின் பிதற்றல்கள் பிஜெபியின் வெற்றியை மிகவும் எளிதாக்கிவிட்டன.


செந்தமிழ் கார்த்திக்
மே 10, 2024 14:34

காங்கிரஸ் மாற்றம் இந்திய கூட்டணி மிக தெளிவாக சொல்லிவிட்டார்கள்


ஆரூர் ரங்
மே 10, 2024 17:07

யாரு? ஜாஃபர் கிட்ட சரக்கு தொடர்பு உள்ளவங்களா? இல்ல சரக்கு மிடுக்குடன் கூட்டணி வெச்சிருக்கிறவங்களா?


செந்தமிழ் கார்த்திக்
மே 10, 2024 14:32

இந்துக்கள், முஸ்லீம்கள், ராமர் கோவில், பாகிஸ்தான் இத தவிர வேற ஏதாவது பேச சொல்லுங்க கேட்டு கேட்டு செம்ம போர் அடிக்கிது பத்து வருஷம் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சியை பாத்து- பத்து வருஷம் ஆட்சி செய்த பாஜக கட்சிக்கு எவ்ளோ பதறுது பாருங்கோ இதுதான் தோல்வி பயத்தில் பிதற்றல்


செந்தமிழ் கார்த்திக்
மே 10, 2024 14:27

அப்படின்னா என்ன சொல்ல வராரு? காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வரும்ன்னு சொல்றாரா? புரிஞ்சவன் புத்திசாலி


முருகன்
மே 10, 2024 14:15

பத்து வருடங்களில் மக்களுக்கு செய்தாது என்ன


GMM
மே 10, 2024 13:51

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு, இந்து சமய சாதி இட ஒதுக்கீடு குறைய செய்யும் இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் சாதி கணக்கெடுப்பு கோருவது, இந்து சமூகத்தை பிளவு படுத்த தான் தற்பொழுது உட் பிரிவு சாதியினர் அதிகம் திருமண உறவு தற்பொழுது தமிழகம், ஆந்திர, கேரளா, கர்நாடகா ஒத்த சமூக மக்கள் திருமண உறவு கொள்ள துவங்கிவிட்டனர் மத மாற்றம் குறையும் இதனை உடைக்க ராகுல் நாடு முழுவதும் சாதி கணக்கெடுப்பு என்று பிளவு கருத்து கூறி வருகிறார்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ