வார் ரூம் கிடைக்காமல் திணறிய காங்கிரஸ்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரம் செலுத்தி வந்த காங்கிரசுக்கு, 'வார் ரூம்' எனப்படும், தேர்தல் பணிகள் உள்ளிட்ட மிக முக்கிய வியூக வகுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கான இடம் கூட கிடைக்காமல் திணறிய சம்பவம், ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. விமர்சனம் ஒரு கட்சியின், 'ஐ.டி., விங்' எனப்படும் தொழில்நுட்ப அணிக்கும், 'வார் ரூமுக்கும்' வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்ப அணி என்பது, ஒரு கட்சியின் துணை அமைப்பு போன்றது. கட்சியின் கொள்கை, மக்கள் நலன் சார்ந்த செயல்பாடு, தாங்கள் செயல்படுத்திய திட்டங்களை விளம்பரப்படுத்துவது, எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிப்பது, விமர்சனம் வைப்பது போன்றவை இதன் பணிகள். ஆனால், வார் ரூம் என்பது அப்படி அல்ல; அது, தேர்தல் வெற்றிக்காக இயங்குவது; இதற்காக, பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தொகுதி மக்களின் மனநிலை, வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன தகுதியை கொண்டிருக்க வேண்டும், போஸ்டர், நோட்டீஸ் எப்படி இருக்க வேண்டும் போன்ற முக்கியமான அனைத்துமே வார் ரூம்களில்தான் முடிவு செய்யப்படுகின்றன. காங்கிரசின் தேர்தல் பணிக்கான மிக முக்கியமான தளமாக இந்த வார் ரூம் இருந்தது. கடந்த, 2004 லோக்சபா தேர் தலுக்கு முன் வரை, டில்லியில் உள்ள எண். 99, சவுத் அவென்யூ பங்களாவில் அக்கட்சிக்கென செ யல்பட்டு வந்த வார் ரூம், எண். 200ல், குருத்வாரா ரகாப்கஞ்ச் என்ற பங்களாவு க்கு மாற்றப்பட்டது. தேடல் கடந்த, 2023 வரை இங்கிருந்துதான் நாடு முழுதுக்குமான தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 18 ஆண்டுகளுக்கு பின், இந்த பங்களா ஒதுக்கப்பட்டிருந்த எம்.பி.,யான பிரதீப் பட்டாச்சார்யா, பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், இந்த கட்டடத்தை அரசிடம் ஒப்படைக்க நேரிட்டது. அதன்பின், வார் ரூம் அமைப்பதற்கு, பல காங்கிரஸ் எம்.பி.,க்களின் இல்லங்களை தற்காலிகமாக கேட்டு, அங்கிருந்தே பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 2024 தேர்தலுக்கு முன், சுப்ரமணிய பாரதி சாலையில் உள்ள சிறிய பங்களாவில் வார் ரூம் அமைக்கப்பட்டது. அந்த பங்களா, காங்கிரஸ் எம்.பி.,யான உத்தம் குமார் ரெட்டிக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் தெலுங்கானா மாநில அரசில் அமைச்சரானவுடன், அந்த பங்களாவை காலி செய்ய வேண்டியதானது. இந்நிலையில்தான், பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கட்சியின் வார் ரூம் செயல்பாடுகளை எங்கே வைத்துக்கொள்வது என்ற தேடல் துவங்கியது. ஒருவழியாக தற்போது, காங்கிரசின் ராஜ்யசபா எம்.பி.,யான சக்தி சின் கோகில் என்பவரது, பங்களாவில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறிய தாவது: வா ர் ரூம் என்பது ரகசியமாக செயல்பட வேண்டும். பல முக்கிய வியூகங்கள் அங்குதான் வகுக்கப்படும். முக்கிய தலைவர்கள் வந்து செல்வர். ஆலோசனைக் கூட்டங்களும் அடிக்கடி நடைபெறும். எனவே, ஊடகங்களின் பார்வை அதிகம் படாமல் இருக்க வேண்டும். அதுதான் பிரச்னை. எனவே தான், இந்த பங்களா தேர்வு செய்யப்பட்டது. இதுவும் கூட தற்காலிக ஏற்பாடுதான். பீஹார் சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன், நிரந்தர இடம் பார்க்கப்பட்டு, அங்கிருந்து வார் ரூம் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது டில்லி நிருபர் -