மேலும் செய்திகள்
2028ல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வினேஷ் போகத் அறிவிப்பு
1 hour(s) ago | 1
பார்லி குளிர்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
2 hour(s) ago | 3
புதுடில்லி: நாட்டின் கனவுகளுக்கு காங்கிரஸ் நீதி வழங்கும் என அக்கட்சி எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி புதிய உத்தரவாதங்களுக்கு முன், பழைய உத்தரவாதங்களை' கணக்கிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைகள் வழங்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும். பெண்களின் பாதுகாப்பு மற்றும் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கப்படும் உள்ளிட்ட அனைத்து உத்தரவாதங்களும் பொய்யானவை. பா.ஜ., என்பது பொய்க்கும் அநீதிக்கும் உத்தரவாதம். நாட்டின் கனவுகளுக்கு காங்கிரஸ் நீதி வழங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திர திட்டம் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அத்திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இது குறித்த ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரங்களை லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதற்கான வழிமுறையாக பா.ஜ., மாற்றியது. இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் ஊழல் கொள்கைகளுக்கு இதோ இன்னொரு சான்று. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.
1 hour(s) ago | 1
2 hour(s) ago | 3