மேலும் செய்திகள்
முதல் ஏஐ திரைப்பட விழா: மும்பையில் பிரமாண்டம்
1 hour(s) ago
மாண்டியா -“பா.ஜ., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் 30 பேர், காங்கிரசில் இணைவர்,” என, விவசாய அமைச்சர் செலுவராயசாமி கூறியுள்ளார்.ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்ததை அடுத்து, 'மேலும் சில எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இருந்து, பா.ஜ.,க்கு வருவர்' என, அக்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து விவசாய அமைச்சர் செலுவராயசாமி, மாண்டியாவில் நேற்று அளித்த பேட்டி:பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகளை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் சேர தயாராக உள்ளனர். அவர்களை எந்த நேரத்தில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து, ஆலோசனை நடத்துகிறோம். காங்கிரஸ் இணைய இருக்கும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பெயர்களை கூறினால், எதிர்க்கட்சி தலைவர் அசோக் அதிர்ச்சி அடைவார்.எம்.பி., சுமலதாவை காங்கிரஸ் கட்சிக்கு வரும்படி, நாங்கள் யாரும் அழைக்கவில்லை. பா.ஜ., வேட்பாளராக இருக்க விரும்புவதாக, அவரே கூறியுள்ளார். மாண்டியா தொகுதியில் உள்ளூர்க்காரர் ஒருவரே காங்கிரஸ் வேட்பாளர். இதில் சந்தேகம் இல்லை.ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பா.ஜ.,வுக்கு சென்றதால், காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை. நாங்கள் அவரை அழைக்கவில்லை. அவராக வந்தார். இப்போது அவராக சென்றுவிட்டார். லட்சுமண் சவதி காங்கிரசில் நீடிப்பார். அவருக்கு பா.ஜ., தலைவர்கள் தொல்லை கொடுக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago