உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒற்றுமை இல்லாததால் காங்.,தோல்வி: கார்கே கவலை

ஒற்றுமை இல்லாததால் காங்.,தோல்வி: கார்கே கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' கட்சியினர் இடையே ஒற்றுமை இல்லாததும், ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கை வெளியிடுவதுமே தேர்தல் தோல்விக்கு காரணம், '' என அக்கட்சியின் தலைவர் கார்கே கூறினார்.காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், அக்கட்சி தலைவர் கார்கே துவக்க உரையாற்றியதாவது: தேர்தல்களில் கள நிலவரம் நமக்கு சாதகமாக இருந்தது. ஆனால், அது மட்டும் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. கள நிலவரத்தை வெற்றியாக மாற்ற நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி செய்ய முடியாததற்கு என்ன காரணம் என்பதை கட்சி மறு ஆய்வு செய்ய வேண்டும்.லோக்சபா தேர்ததலுக்கு பிறகு நடந்த நான்கு சட்டசபை தேர்தல்களில் இரண்டில் ' இண்டியா ' கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், அதில் காங்கிரசின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் நமக்கு ஒரு செய்தியை சொல்கிறது. அதில் நாம் பாடம் கற்றுக் கொண்டு, அமைப்பு ரீதியில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய வேண்டும்.நமக்குள் ஒற்றுமை இல்லாததும், ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கை வெளியிடுவதும் நம்மை பாதிக்கிறது. ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால், தேர்தலில் எப்படி எதிரிகளை வீழ்த்த முடியும். எனவே கட்டுப்பாட்டை அனைவரும் ஒற்றுமையாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து சூழ்நிலைகளிலும் நாம் ஒற்றுமையாக இருப்பது முக்கியம். காங்கிரசின் வெற்றி என்பது நமது வெற்றி. கட்சியின் தோல்வி என்பது நமது தோல்வி என்பதை அனைவரும் உணர வேண்டும். நமது பலம், கட்சியின் பலத்தில் தான் உள்ளது.தேசிய பிரச்னைகள் மற்றும் தேசிய தலைவர்களை வைத்து எத்தனை நாட்கள் நாம் மாநில தேர்தல்களை சந்திக்க முடியும். உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கு ஏற்றவாறு திட்டங்களை செயல்படுத்துவது முக்கியம். தேர்தல் பணிகளை, தேர்தல் நடப்பதற்கு ஒராண்டுக்கு முன்னரே துவக்க வேண்டும். கட்சியின் ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Velayutham rajeswaran
நவ 30, 2024 07:21

எந்த பாடத்தையும் காங்கிரஸ் கற்றுக் கொள்ளாது அதன் மனநிலை அப்படி


Oru Indiyan
நவ 30, 2024 02:26

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு EVM மோசடி என்று கூச்சல் போட்டது பொய்யா கோவாலு


ஞானி
நவ 30, 2024 01:22

நீ டெல்லியில உட்கார்ந்துகிட்டு சோனியா குடுப்பத்துக்கு சொலி $$ கொடுத்துகிட்டு இரு கட்சி சூப்பரா வளர்ந்துடும்


N Sasikumar Yadhav
நவ 30, 2024 00:29

ஆட்டய போடுவதை கோபாலபுர கொத்தடிமைகளுக்கு கொஞ்சமாக பிச்சை போடும் தீயமுக களவானிங்க மாதிரி நீங்களும் கொடுக்கனும் மொத்தமாக அமுக்கினால் எப்படி


பேசும் தமிழன்
நவ 30, 2024 00:14

நீங்கள் எல்லாம் இண்டி கூட்டணியில் ஒற்றுமையாக இருக்கிறீர்கள் ....மக்களாகிய நாங்கள் அதை நம்ப வேண்டும்.


பேசும் தமிழன்
நவ 29, 2024 23:57

தேச நலனை விரும்பும் மக்களின் ஒற்றுமையால்.... தேச விரோத மனப்பான்மையுடன் செயல்படும் கான் கிராஸ் கட்சிக்கு தோல்வி என்பதே உண்மை.


A Viswanathan
நவ 30, 2024 07:41

காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்றால் இந்த இத்தாலி மாபிய கூட்டத்தை வெளியேற்ற வேண்டும்


A Viswanathan
நவ 30, 2024 07:41

காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்றால் இந்த இத்தாலி மாபிய கூட்டத்தை வெளியேற்ற வேண்டும்


R.MURALIKRISHNAN
நவ 29, 2024 23:18

இதையே இப்பத்தான் கண்டுபிடிச்சீங்களா கார்கே சார். ஆனாலும் நீங்க ரொம்ப ரொம்ப லேட்டு. 10 வருசத்திற்கு முன்னயே மக்களுக்கு தெரியும் ஜி...


Balasubramanian
நவ 29, 2024 23:12

வயநாடு பாராளுமன்ற இடைத் தேர்தலில் கட்சி வேட்பாளரான பிரியாங்காவும் எதிர் கட்சி தலைவரான ராகுல்ஜியும் எவ்வளவு ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தனர் அதில் இருந்து கட்சியினர் பாடம் கற்க வேண்டும்


Jay
நவ 29, 2024 22:47

இது போன்ற தோல்விகளுக்கு காரணம் ரவுல் தான் என்பதை சொல்வதற்கு எத்தனை பேருக்கு காங்கிரஸில் துணிவிருக்கிறது? பிஜேபி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் ரவுல்தான்.


Gurumurthy Kalyanaraman
நவ 29, 2024 22:34

சார், எழுபத்து ஐந்து வருடமா கற்காத பாடத்தை இப்போ போயி கற்க சொல்றீஙகளே சார் விடுஙக கவலையை. ஒரு சாதி சர்வே எடுத்திடுவோம். எல்லாம் சரியாய் போயிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை