உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை எதிர்ப்பது மட்டுமே காங்கிரசின் ஒரே திட்டம்: பிரதமர் மோடி

என்னை எதிர்ப்பது மட்டுமே காங்கிரசின் ஒரே திட்டம்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மோடியை எதிர்ப்பது என்ற ஒரே திட்டத்தை மட்டுமே காங்கிரஸ் வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.பிரதமர் மோடி 'விக்சித் பாரத் விக்சித் ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று, ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: இந்தியா தற்போது நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. 2014க்கு முன்பு, ஊழல்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் பற்றிய விவாதங்கள் மட்டுமே இருந்தன. இந்திய மக்கள் தங்களுக்கும் நாட்டிற்கும் என்ன நேரிடுமோ என்று நினைத்திருந்தனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த சூழல் தான் நிலவியது.

காங்கிரஸ்

ராஜஸ்தானில் கடந்த ஆட்சியின்போது, வினாத்தாள் கசிவால் பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை விசாரிக்க, பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் குழு உருவாக்கப்பட்டது. வினாத்தாள் கசிவுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை உருவாக்கியுள்ளது. மோடியை திட்டுவது என்ற ஒன்றை மட்டுமே காங்கிரஸ் திட்டமாக வைத்துள்ளது. அவர்கள் 'மேட் இன் இந்தியா' மற்றும் 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்பது' போன்றவற்றை ஆதரிக்க மாட்டார்கள். ஏனெனில், அவற்றையெல்லாம் மோடி ஆதரிக்கிறார். மோடி என்ன செய்தாலும் அதற்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும் என காங்., செயல்படுகிறது. மோடி எதிர்ப்பு என்ற ஒன்றே அவர்களின் திட்டம். இன்றைக்கு ஒவ்வொருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அதில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

J.V. Iyer
பிப் 17, 2024 07:36

உண்மைதான் . உங்களைப்போல் ஒரு ஆயிரம், லட்சம், கோடி பேர்களை உருவாக்கும் கட்டாயம் பாரதத்தில் ஏற்பட்டுள்ளது.


Ramesh Sargam
பிப் 17, 2024 00:32

இந்திய நாட்டை வளர்ச்சிப்பாதையில் நீங்கள் எடுத்துச்செல்வது அவர்களுக்கு வயிற்று எரிச்சல். அவர்களை விட்டுத்தள்ளுங்கள். நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள். மக்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.


K.Ramakrishnan
பிப் 16, 2024 21:44

காங்­கிரஸ் இல்லா பாரதம் என்று முழக்­க­மிட்­டு ஒவ்­வொரு தலை­வ­ராக இழுத்து காங்­கி­ரசை ஒழிப்­ப­தே உங்கள் வேலை. அதனால் உங்­களை எதிர்ப்­பதே அவர்­களின் வேலையாகி விட்­ட­து.


Balasubramanian
பிப் 16, 2024 21:18

காங்கிரஸ் மட்டும் அல்ல தமிழகம் வங்காளம் கேரளம் என எல்லோருக்கும் இதை விட்டால் வேறு வேலை இல்லை!


Kasimani Baskaran
பிப் 16, 2024 21:16

காங்கிரஸ் குப்பைகளுக்கு மோடியை விட இந்தியாவின் மீது அப்படி ஒரு வெறுப்பு. அதனால்த்தான் இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் பாக்கிஸ்தானிலேயே வாழ விரும்பியதாக சொன்னது.


s.sivarajan
பிப் 16, 2024 20:54

பா.ஜ.க வின் வளர்ச்சிக்கு பலவீனமான காங்கிரஸ்ம் ஒரு காரணம்


M.COM.N.K.K.
பிப் 16, 2024 20:01

ஆம் சரியே


பேசும் தமிழன்
பிப் 16, 2024 19:02

கான் கிராஸ்..... அவர்களின் மற்றொரு திட்டம்.... பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகளுக்கு துதி பாடுவது !!!!


சோழநாடன்
பிப் 16, 2024 18:52

அரசியல் சானத்திற்கு எதிராக மோடி இயற்றிய சட்டம் செல்லாது என்று தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மோடி அவர்களே காங்கிரஸ் தனிமனிதராக உள்ள உங்களை எதிர்க்கவில்லை. உங்களின் அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல்பாடுகளைத்தான் எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 2024இல் மீண்டும் பிரதமர் என்ற கனவில் நீங்கள் எப்படி விழித்தெழுவீர்கள்.


Sivakumar
பிப் 16, 2024 18:17

நேரு வலது பக்கம் திரும்பாமல் இடதுபக்கம் திரும்பி தும்மியதால் இந்தியா இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டுருக்கிறதுனு- நீங்க மட்டும் 10 ஆண்டுகள் உங்கள் ஆட்சி, 5 ஆண்டுகள் வாஜ்பாயி ஆட்சிக்கு அப்புறமும் வடை சுடலாம். அவிங்க உங்க இயலாமையை சுட்டிக்காட்டினால் தான் குற்றம்.


மேலும் செய்திகள்