உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதி: ஆம்ஆத்மி பகீர் குற்றச்சாட்டு

கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதி: ஆம்ஆத்மி பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல பா.ஜ., சதி செய்துள்ளது என ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், சஞ்சய் சிங் கூறியதாவது: கெஜ்ரிவாலின் வாழ்க்கையில் பா.ஜ.,வினர் மற்றும் டில்லி கவர்னர் சக்சேனா விளையாடுகின்றனர். சிறையில் அவரை கொல்ல சதி செய்கிறார்கள். கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து டில்லி கவர்னர் மற்றும் பா.ஜ., தவறான அறிக்கைகளை வெளியிடுவது எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

இன்சுலின்

முன்னதாக, சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் அவருக்கு இன்சுலின் தேவைப்பட்டபோது, ​​கெஜ்ரிவால் மாம்பழம், பூரி சாப்பிடுகிறார். கலோரிகளை அதிகப்படுத்துகிறார் என கூறினர். இன்சுலின் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது நீதிமன்றம் தலையிட்டதால், அவருக்கு இன்சுலின் கிடைத்தது. எந்த நபர் தனக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தும் சாப்பிடாமல் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்புவார்.

கொலை முயற்சி வழக்கு

கெஜ்ரிவாலுக்கு தீங்கு செய்ய சதி செய்கிறார்கள். அவருக்கு ஏதாவது நேர்ந்தால் பதில் சொல்ல வேண்டும். இந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் டில்லி கவர்னர் மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

bgm
ஜூலை 22, 2024 04:12

பாவம் அன்னாஹசாரே. இப்படி நடக்கும் என கனவிலும் நினைத்த இருக்கமாட்டார்


என்றும் இந்தியன்
ஜூலை 21, 2024 17:39

இது நிச்சயம் மிக மோசமான அணுகுமுறை. பாவம் கெஜ்ரிவால்.


theruvasagan
ஜூலை 21, 2024 16:48

ஐயோ கொல்றாங்களே டிராமா டில்லியில் அரங்கேற்றம்.


Rpalnivelu
ஜூலை 21, 2024 15:02

இவன் என்ன பெரிய அப்பா டக்கரா?


ஸ்ரீ
ஜூலை 21, 2024 14:52

டில்லி கருணாநிதி யோ


Swaminathan L
ஜூலை 21, 2024 13:58

அப்பப்பா, மற்ற கட்சித் தலைமைகள் எல்லாம் கெஜ்ரிவாலின் பாடம் படிக்க வேண்டும், எப்படி மக்களின் கவனத்தை திசை திருப்பி தன் மேல் பரிதாபத்தைக் கூட்ட வேண்டும் என்று. ஆருஷியும், சஞ்சய் சிங்கும் சேர்ந்து நடத்தும் கச்சேரி, ஒரே பாட்டு, பல ராகம், தாளங்களில். தலைமை கையை விட்டுப் போகாமல் , வேறு யாரும் நாற்காலியைப் பிடிக்க விடாமல் தன் மனைவியை முன்னிறுத்தி தலைமைப் பொறுப்பேற்க வைத்து.. அரசியல் யார் செய்தாலும் சில நேரங்களில் ஒரே டெம்ப்ளேட் தான் அனைவருக்கும் போல.


Rangarajan Cv
ஜூலை 21, 2024 13:50

Today's quota of lies fm AAP


Shankar
ஜூலை 21, 2024 13:02

தினமும் ஏதாவது ஒரு பொய் சொல்லிக்கிட்டு இருப்பதே ஆம் ஆத்மி கட்சியோட வேலையா போச்சி.


SRIRAM
ஜூலை 21, 2024 16:20

கூட்டணி யாரு நம்ம விடியா இயக்கம்.. இவர்கள் தான் ஆம்ஆத்மி கட்சிக்கு அட்வைஸ்...


மேலும் செய்திகள்