உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " மேகதாது அணை கட்டியே தீருவோம்:"- கர்நாடக முதல்வர் பட்ஜெட்டில் அறிவிப்பு

" மேகதாது அணை கட்டியே தீருவோம்:"- கர்நாடக முதல்வர் பட்ஜெட்டில் அறிவிப்பு

பெங்களூரு: மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் எனவும் கர்நாடக பட்ஜெட் தாக்கலின்போது அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இன்றைய பட்ஜெட்டில் ஏதும் இல்லை என பா.ஜ., எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். சிதாராமையா ,பொய்ராமையா , ஒன்றுமில்லை ஒன்றுமில்லை பட்ஜெட்டில் ஒன்றுமில்லை என்றும் பாடினர். கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், இம்மாதம் 12ம் தேதி துவங்கியது. நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா, 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை இன்று (பிப்.,16) தாக்கல் செய்தார். அப்போது மேகதாது அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பையும் சித்தராமையா வெளியிட்டார்.அவர் கூறுகையில், ''மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்காக ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி கொடுத்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூரு குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மற்ற பகுதிகளில் நிலங்கள் ஒதுக்கப்படும்'' மரங்கள் வெட்டுவதற்கான சர்வே பணிகள் நடக்கிறது. என்றார்.பீர் விலைக்கு வரி உயர்த்தப்படுவதாகவும், சேட்டிலைட் நகரம் அமைக்கப்படும் , புதிய மின்சார, டீசல் பஸ்கள் வாங்கப்படும் என்றும் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ramesh Sargam
பிப் 17, 2024 07:29

தமிழக முதல்வர், அவரது மகன், திமுக அல்லக்கைகள் செங்கல் எடுத்து தருவார்கள், மற்றும் பல் சித்தாள் வேலைகள் கூட செய்ய தயாராக இருக்கிறார்கள். காங்கிரஸ், கூட்டணி கட்சி என்பதால், அவர்களை எதிர்க்க திராணி இல்லை தமிழக முதல்வருக்கும், மற்ற திமுகவினருக்கும்.


தாமரை மலர்கிறது
பிப் 16, 2024 22:09

மேகதாது அணைகட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கவேண்டும். வாழ்த்துக்கள்.


rajan_subramanian manian
பிப் 16, 2024 21:43

எங்க துரை கண்டன அறிக்கை விடுவார்.இதற்குமேல் எதாவது நடந்தால் மோடிதான் கார0ணம் என்று சொல்லுவோம்.நாங்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ள உப்பிஸ்,ஊடகங்கள்,நெறியாளர்கள்,கூட்டணி ஜால்ராக்கள் அதை உண்மை என்று நம்பும் மக்கள் இருக்க எங்களுக்கு என்ன கவலை?


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 16, 2024 20:26

நீங்க கட்டுங்க சார். நான் அணைக்கு அந்தப்பக்கம் கர்நாடகாவில் ஒரு இடம் வாங்கி வீடுகட்டி குடியேறலாம் என்று இருக்கிறேன். டாஸ்மாக் நாட்டைவிட கன்னட தேசம் நன்றாகவே இருக்கிறது என்பது கண்கூடு. என்ன கன்னடம் கத்துக்க ஒரு ஆறு மாசம் ஆகும். நீங்க அணை கட்டி முடிகிறதுக்குள்ள, நான் வீடு கட்டி முடிகிறதுக்குள்ள கன்னடம் பேச கத்துக்குவேன். So no problem. Go ahead sir.


konanki
பிப் 16, 2024 19:56

பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிராக நடந்தால் மட்டுமே திமுக மற்றும் முன்களப்ஸ் பேசுங்க


konanki
பிப் 16, 2024 19:54

திமுக அரசியல் வாதிகள் இந்த அணை கட்டும் காண்டிராக்ட் எடுத்து திராவிட ஒற்றுமை மற்றும் அறத்தை நிலை நிறுத்துவார்கள்


அருண் குமார்
பிப் 16, 2024 18:49

நல்லது இப்போதே விடியல் அரசு உள்ள பொழுதே கட்டி விடுங்க பிரச்சனை எதுவும் இருக்காது இங்க விடியல் பிஜேபி அரசை தினமும் குறை சொல்லவே நேரம் இல்லை


K B JANARTHANAN
பிப் 16, 2024 18:33

தமிழ் நாட்டில், மழை காலங்களில்,  நீர் பிடிப்புகளில் உள்ள உபரி நீரை வீணாக கடலில் கலக்க விடுகிறார்கள். உபரி நீரை சேமிக்க தடுப்பு அணை அமைக்கலாம். செம்பரம்பாக்கம், வீராணம் மற்றும்  புழல் ஆகிய இடங்களில் அணை கட்டலாம்.


karupanasamy
பிப் 16, 2024 18:26

ஸ்டாலீனும் உதயநிதியும் ரெட்டை நாயனம் வாசித்து ஒத்து ஊதுவார்கள் . ஏனைய கழக ஆதரவாளர்கள் ஜாலரா தட்டுவார்கள்.


Venkatasubramanian krishnamurthy
பிப் 16, 2024 18:10

காங்கிரஸ் உறவுக்கு கைகட்டி நிற்போம். காங்கிரஸ் உரிமைக்கு வாய்மூடி இருப்போம். இப்படிக்கு திராவிட மாடல்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ