உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சை கேரள ஏ.டி.ஜி.பி., : டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்

சர்ச்சை கேரள ஏ.டி.ஜி.பி., : டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரள காவல்துறையின் சர்ச்சை ஏ.டி.ஜி.பி., அஜித்குமார் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரளாவில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக இருப்பவர் அஜித்குமார். இவர் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவராகவும், விசுவாசமானவராகவும் அறியப்படுகிறார்.இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலேவை கடந்த 2023ம் ஆண்டு சந்தித்து பேசியதாக, காங்.,கை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் கடந்த செப்டம்பர் மாதம் குற்றஞ்சாட்டினார்.திருச்சூர் தொகுதியில் பா.ஜ.,வின் சுரேஷ் கோபியை வெற்றி பெற செய்வதற்காகவும், மத்திய விசாரணை அமைப்புகளின் பிடியில் இருந்து முதல்வர் பினராயி விஜயனை காப்பாற்றவும் ஹோசபெலேவிடம் அவர் கோரிக்கை வைத்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ள நிலையில், கேரள காவலதுறை டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கான நியமன உத்தரவை கேரள தலைமை செயலர், உள்துறை செயலர், விஜிலன்ஸ் இயக்குனர் ஆகியோரை உறுப்பினராக உயர்மட்டக்குழு ஒப்புதலின் பேரில் நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajan
டிச 18, 2024 22:33

நன்றி.


Barakat Ali
டிச 18, 2024 21:34

மத்திய விசாரணை அமைப்புகளின் பிடியில் இருந்து முதல்வர் பினராயி விஜயனை காப்பாற்றவும் ஹோசபெலேவிடம் அவர் கோரிக்கை வைத்தது .......... இதே வேலையை துக்ளகாருக்காக ஒன்றியத்திடம் யாரு பண்ணுறாங்க ன்னு தெரிஞ்சுக்கணும் ... இதுதான் என் ஆசை ......... என்னது அண்ணாமலையேவா ??


புதிய வீடியோ