உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சையை கிளப்பும் தலைவர்கள்: ஆர்.எஸ்.எஸ்., மோகன் பகவத் பேச்சு

சர்ச்சையை கிளப்பும் தலைவர்கள்: ஆர்.எஸ்.எஸ்., மோகன் பகவத் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், பல்வேறு இடங்களிலும் இதே போன்ற பிரச்னையை கிளப்பி, ஹிந்துக்களின் தலைவர்களாக மாற சிலர் நினைக்கின்றனர்; இதை ஏற்றுக்கொள்ள முடியாது,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசத்தின் மதுரா, சம்பல் உட்பட பல்வேறு இடங்களில் மசூதி உள்ள இடத்தில் ஒரு காலத்தில் ஹிந்து கோவில் இருந்ததாகவும், அதை அகற்றிவிட்டு கோவில் கட்ட வலியுறுத்தியும் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த மசூதிகளில் தொல்லியல் துறை ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரங்கள் நடந்தன. இதை நேரடியாக குறிப்பிடாமல், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.மஹாராஷ்டிராவின் புனேவில், ஹிந்து சேவை அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: ராமகிருஷ்ண மடத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. நம்மால் மட்டுமே இதை செய்ய முடியும். காரணம், நாம் ஹிந்துக்கள். நாம் காலங்காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்த நல்லிணக்கத்தை உலகிற்கு வழங்க வேண்டுமானால், அதற்கான முன்மாதிரியை நாம் உருவாக்க வேண்டும்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், அதே போன்ற பிரச்னையை பல்வேறு இடங்களிலும் எழுப்பி, ஹிந்துக்களின் தலைவர்கள் ஆகலாம் என சிலர் நினைக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ராமர் கோவில் அனைத்து ஹிந்துக்களின் நம்பிக்கையாக இருந்ததால் அது கட்டப்பட்டது. ஆனால், ஒவ்வொரு நாளும் இதே போன்ற பிரச்னைகள் கிளப்பப்படுகின்றன. இதை எப்படி அனுமதிக்க முடியும்? இதை தொடர விடக்கூடாது. நாம் ஒன்றாக சேர்ந்து வாழ முடியும் என்பதை உணர்த்த வேண்டும்.இன்றைக்கு நம் நாடு அரசியலமைப்பு சட்டப்படி இயங்குகிறது. யார் அரசு நடத்த வேண்டும் என்பதை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். மேலாதிக்க காலமெல்லாம் முடிந்துவிட்டது. ஹிந்துக்கள் வசம் ராமர் கோவில் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டது. இதை மோப்பம் பிடித்த ஆங்கிலேயர், இரு சமூகத்தினருக்கு இடையே பிளவை ஏற்படுத்தினர். அதன் பின் தான் பிரிவினை என்ற சிந்தனை தோன்றி, பாகிஸ்தான் என்ற நாடு உருவானது.இங்கு யாரும் சிறுபான்மையினர் இல்லை; பெரும்பான்மையினரும் இல்லை; அனைவரும் சமம். அனைவரும் தங்கள் விருப்பப்படி வழிபாட்டு முறையை பின்பற்றலாம் என்பதே நம் பாரம்பரியம். விதிகள் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இணக்கமாக வாழ்வது மட்டுமே தேவை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Selva Kumar
டிச 23, 2024 12:52

சரி, RSS தலைவர் தேச ஒற்றுமைக்காக அப்படி சொல்லி இருக்கலாம். அதற்காக, இந்துக்களுக்கும் இந்து கோயில்களுக்கும் எப்போது நீதி கிடைக்கும் ? இந்த மத சார்பற்ற நாட்டில் .. இந்த தேசத்தின் அரசியலமைப்புச் சட்டம் வந்த பிறகு எந்தெந்த வழிபாட்டுத்தலங்கள் எப்படி இருந்ததோ அப்படியே இருக்க வேண்டுமென்றால், இந்த தேசத்தில் புதுசாக எந்த மனிதரும் மதமாற்றப் படக்கூடாது. அந்த சட்டத்தையும் கொண்டு வந்தீங்கன்னா நாங்க ஏத்துக்கிறோம் இதை. மதமாற்றுவதற்கும் எல்லா உரிமைகளும் இருக்காம், இந்துக்கள் மட்டும் தங்கள் கோயில்களை கேட்கவே கூடாது சட்டப்படி கூட, இதில் எங்கே நீதி இருக்கிறது இந்துக்களுக்கு ?


R K Raman
டிச 23, 2024 07:42

ராமரைப் பற்றி கோர்ட்டில் காங்கிரஸ் அரசு பதிவு செய்ததை இவர் மறந்து விட்டாரா.


R K Raman
டிச 23, 2024 07:40

இந்த ஆள் உளறலுக்கு முடிவே இல்லை. இவன் பேச்சைக் கேட்டு உத்தவ் உருப்படாமல் போனது...


Haja Kuthubdeen
டிச 21, 2024 15:49

ஆர் எஸ் எஸ் ராணுவ கட்டுப்பாடுள்ள இயக்கம்..தேசபக்தி ஒழுக்கம் என்று பலரும் பிரச்சாரம் செய்வதை பார்த்துள்ளோம்.மோடி அமித்சா உட்பட பலரும் அவரின் பேச்சை கேட்கிறார்கள்.இங்கே விசமிகள் அவரையே ஒருமையில் திட்டுதுங்க...


veeramani hariharan
டிச 21, 2024 12:35

Please attend one RSS sakka. Then you will understand whats RSS and their basic principles. They never preach any religious matters.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 21, 2024 13:28

அய்யா இருக்கும் பிரச்னை போதாதா , மழை எப்போ வரும் என்று எல்லாம் ஒன்றிய அரசு ரேடார் எல்லாம் பன்னாது அனால் எந்த முஸ்லீம் கோயில் கீழே எந்த ஹிந்து கோயில் உள்ளது என்று எல்லாம் தெரியும் இதற்கு தான் கோர்ட் வாய் பூட்டு போட்டு விட்டதே


Sidharth
டிச 21, 2024 11:32

அய்யா என்ன சொல்றாருன்னா அங்கங்க பேட்டை ரவுடியெல்லாம் வேணாம் நாங்கதான் டான். நாங்க சொல்றதெல்லாம் செய்ய அல்லு சில்லு மட்டும் போதும். என்ன இருந்தாலும் நாங்க சித்பவன். நாங்க சொல்றத செஞ்சா போதும்


Kanns
டிச 21, 2024 11:20

There Cannot be Protectionist Fights for Hinduism during NonBJP Rules& Silence During BJP Rules. In 15yrs ModiBJP Rule, Nothing ProHindu ProNation Achieved Except Ram Temple Construction VvvLongPendg& Art370 Abolition by RSS Madhav. Only Destruction of MajorityHindu Livelihoods Achieved by Misusing Powers through AadharSpyMaster& Officials esp Bureaucrats, InvestigatorPolice& Judges. EXCEPT EVM FRAUDS, Even BJP Cadres/ Sympathisers Dont Vote BJPSHAME


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 11:13

யாருய்யா இந்த ghee?? நான் கருத்து சொல்ல காத்திருப்பார். பதிவான உடனே, புரியாத வார்த்தைகளில் ஏதேதோ எழுதிவிட்டுடுவார். காமெடியா இருக்கு. "சின்ன தத்திகும்" என்று யாரை சொல்றார்??? மோகன் பகவத் பேச்சு பற்றி எழுத நெய், அதாவது ghee க்கு புத்தி போறலை பாவம்.


ghee
டிச 21, 2024 11:48

சரிங்க ஆபீஸர்.


Ganapathy
டிச 21, 2024 11:06

இப்படி பேசிபேசிதான் ஒரு கோட்ஸே உருவாக்கினானுங்க இந்த காந்திய முஸ்லீம்கள் அன்று.இன்னமும் அதையே செய்து ஹிந்துகளின் சுயமரியாதையை மழுங்கச்செய்யும் வேலையை செய்து ஹிந்துக்கள் அடிவாங்கி எதிர்வினையாற்றும் பட்சத்தில் மொத்த பழியையும் அவர்கள் மேல் போட்டு காந்திகளிடம் எலும்புத்துண்டு வாங்க இப்படி பேசும் இவனுக்கு துளிகூட வெட்கமில்லை என்பது உண்மை. ஸனாத ஹிந்துக்கள் இவனைப்போன்ற கூட இருந்து குழிபறிக்கும் சதிகாரனை இனங்கண்டு அடித்து விரட்டவேண்டும். முஸ்லீம்களைப்போல ஒன்றுபட்டு இன உணர்வு கொள்ளவேண்டும்.


veera
டிச 21, 2024 11:02

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறும் ஒருவருக்கு பொங்கல் வாழ்த்து கூற மனமில்லை....விலக்குவீர வைகுண்டம்


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 12:03

சார், என் friend எல்லாவனும் என்னோட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லணுமே என்று நான் அவனுங்க வாயைப் பார்த்துக்கிட்டு இருக்க மாட்டேன். என் பண்டிகைகளை நான் கொண்டாட்டிட்டு போயிண்டே இருப்பேன். ஏன் அந்த ஒருவரோட வாழ்த்துக்கு ஏங்குகிறீர்கள்?? அவர் உங்களுக்கு boyfriend? அல்லது girlfriend டா?? இல்ல எனக்கு புரியல. எத்தனையோ ஆச்சாரியர்கள் பொங்கல் வாழ்த்துக்கள் சொல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? பூசாரிகள் யாரும் பொங்கல் வாழ்த்துக்கள் சொல்வதில்லையே? இங்கே கோவை ராம்நகர் ராமர் கோவில் எங்க வீட்டுக்கு பக்கத்துல தான். அடிக்கடி நாங்கள் போவோம். அங்கே இருக்கும் அர்ச்சகர்கள் எல்லோருக்கும் என்னைத் தெரியும். ஆனா ஒருத்தரும் வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார்கள்.


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 12:47

விளக்கம் குடுத்துட்டேன். போட மாட்டேங்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை