உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதயநிதி நேரில் ஆஜராக விலக்கை நீட்டித்தது கோர்ட்: அவதுாறு வழக்கு

உதயநிதி நேரில் ஆஜராக விலக்கை நீட்டித்தது கோர்ட்: அவதுாறு வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சனாதன தர்மம் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த விவகாரத்தில், பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக விசாரிக்க கோரி தமிழக துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சர்ச்சை

'சனாதன தர்மம் என்பது கொரோனா, மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய். அது ஒழிக்கப்பட வேண்டும்' என, கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த மாநாடு ஒன்றில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பேசினார்.இது, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீஹார், கர்நாடகா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, உதயநிதியின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், 'பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர் பேச்சில் கவனமாக இருக்கவும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தியது. இந்த வழக்கில், பல்வேறு மாநில நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து உதயநிதிக்கு இடைக்கால விலக்கு அளித்த நீதிபதிகள், மனு மீது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

விசாரணை

இந்நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 'வழக்குப்பதிவு செய்துள்ள மாநிலங்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை' என, தெரிவித்தார்.இதையடுத்து, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து உதயநிதிக்கு அளிக்கப்பட்ட இடைக்கால நிவாரணம் தொடரும் என்றும் உத்தரவிட்டனர்.வழக்கு, பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

K V Ramadoss
நவ 24, 2024 03:10

எல்லா கோர்ட்டுகளில் இருக்கும் வழக்குகளை ஒன்று சேர்த்து ஒரே கோர்ட்டில் வழக்கு நடத்தலாமா என்பதை தீர்மானிக்க மட்டுமே ஒருவழக்கு. இது இன்னும் நடந்தபாடில்லை. இது நடந்து ஒரு முடிவு எடுத்த பிறகுதான் சனாதனம் பற்றி உதயநிதி பேசியத்தைப்பற்றிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இது வேண்டுமென்றே செய்யப்படும் ஆமை நடை நீதி . இதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும். மக்கள் இதை மறந்துவிடுவர். இதுதான் இன்றைய நீதி மன்றம் . ஆனால் நடிகை கஸ்தூரி விஷயத்தில் நீதிமன்றமும் அரசாங்கமும் புயல் வேகத்தில் வேலை செய்திருக்கிறது. சனாதனம் பற்றி உதயநிதி பேசியது மட்டும் யார் மனத்தையும் புண் படுத்தவில்லையா? இது என்ன மாடல் ?


Barakat Ali
நவ 23, 2024 16:07

கவலைப்படாதீங்க .......... சந்தானத்தை சாரி சனாதனத்தை பாஜக காப்ப்பாத்தும் ......


பாலா
நவ 23, 2024 15:47

கஸ்தூரிக்கு ஓரு நீதி இழவுவரசனுக்கு ஓரு நீதி ?


Dharmavaan
நவ 23, 2024 15:31

மாநில ராசுகள் பதில் தராமல் இருப்பதை ஏதோ சதி/சூழ்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன் மாநில அரசை விட மனுதாரிடம் கோர்ட் கேட்டிருக்க வேண்டும்.


Uuu
நவ 23, 2024 12:43

ஜஸ்டிஸ் அல்றேஅடி இன் கோமா பொசிஷன் whenever எனி கேஸ் அகைன்ஸ்ட் திமுக


Anand
நவ 23, 2024 12:36

வழக்கு அறிவாலயத்தில் நடக்கிறதா?


sridhar
நவ 23, 2024 16:31

அறிவாலயத்தின் டெல்லி பெஞ்ச்.


Dharmavaan
நவ 23, 2024 11:34

கொலீஜியும் முறை நீக்கப்பட்டால்தான் இதற்குமுடிவு வரும் .பாரபட்சமான நீதி வெட்கப்படவேண்டிய நீதி மன்றம்


SUBBU,
நவ 23, 2024 11:13

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. அது என்னவென்றால் உச்சநீதிமன்றம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் இந்த திமுக திருடனுகளுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்குகின்றன. ஆனால் ஒன்று மட்டும் உறுதி படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான் என்று சொன்ன பாரதியின் வார்த்தை யாருக்கு பலிக்கிறதோ இல்லையோ இந்தியாவில் கிரிமினல் மற்றும் ஊழல் குற்றம் செய்த அரசியல்வாதிகளிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்காக கோர்ட்டில் குறுக்கு வழியில் வாதாடி விடுதலை பெற்றுத் தரும் கபில்சிபல் அபிஷேக் மனு சிங்வி போன்றவர்களுக்கு பாரதி சொன்ன வார்த்தை பலிக்க வேண்டும்.


Anand
நவ 23, 2024 10:48

இதற்கு பதில் ஆயுள் விலக்கு என அறிவித்துவிடுங்கள்.....


RAMAKRISHNAN NATESAN
நவ 23, 2024 10:36

சனாதனத்தைப்பத்தி பேசிட்டா, மன்னிக்கவும் - தப்பிக்கலாம் ....... ஆனா வேற எந்த சமயத்தைப் பத்தியும் பேசிட்டு வீடு கூட திரும்ப முடியாது .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை