உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கடந்த ஜன.,31 ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதனையடுத்து அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், இன்று ( ஜூன் 28) ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
ஜூன் 28, 2024 18:52

குஜராத் கோர்ட்டில் கேஸ் போட்டால், நிச்சயம் மீண்டும் பிடித்து போட்டுவிடுவார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 15:07

மக்கள் லோக்சபா தேர்தலில் இவரது கட்சியையே தோற்கடித்து ஊழல்வாதி என தீர்ப்புக் கூறி விட்டனர்.


Narayanan
ஜூன் 28, 2024 13:35

நீதிபதிகள் அனைவரும் ஒத்த கருத்துள்ளவராக இருந்தால் மட்டுமே குற்ற்றங்கள் குறையும். ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது ஜாமின் இல்லை என்று. எதிர்த்து உயர்நீதிமன்றம் போகிறார் ஜாமின் கிடைத்து விடுகிறது. இது தவறான முன் உதாரணம் .


Senthoora
ஜூன் 28, 2024 13:56

அதி உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களை பாத்துக்காக்க எதிராளியை பகடை காய் ஆக்குவது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை